ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...


ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

நட்சத்திரம் - ஹஸ்தம்
ஹஸ்தம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - சந்திரன்
ஹஸ்தம் நட்சத்திரத்தின் அதிதேவதை  - சாவித்திர தேவதா
ஹஸ்தம் நட்சத்திரத்தின் யோனி - பெண் எருமை
ஹஸ்தம் நட்சத்திரத்தின் கணம் - தேவ கணம்
ஹஸ்தம் நட்சத்திரத்தின் பூதம் - நீர்
ஹஸ்தம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - கன்னி ராசியின் விண்மீன் மண்டலத்தில் ஐந்து நட்சத்திரங்கள் (விரல்கள் போல்) கொண்டு காணப்படுகிற நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
ஹஸ்தம் நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - கன்னி ராசியின் பாகை 160:00:00 முதல் பாகை 173:20:00 கலை வரை இருப்பாக உள்ளது.
ஹஸ்தம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - புதன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு ஹஸ்தம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம இராசி கன்னி இராசியாகும். சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையான ஜோதிட சாஸ்திரத்தால் அழைக்கபட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை தெரிந்து கொள்ள சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் பதிமுன்றாவது நட்சத்திரமாக இருக்கும் ஹஸ்தம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் கல்வி உடையவர் அல்லது வித்தைகள் அறிந்தவர், படைப்பாற்றல் மிக்கவர், தாமச குணம் சற்று அதிகம், சாகச பிரியன், இளம் தீரன், காப்பாளன் என்றெல்லாம் நட்சத்திர சாரம் என்ற நூல் உரைக்கின்றது.  மேலும் பொதுவாக ஹஸ்தம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் உதவி செய்தல், சேவை செய்தல், ஊக்குவித்துதல் போன்ற குணங்கள்...




0 Response to "ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger