கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார் - ராகு கேது கிரகங்களை பற்றிய பார்வை…
கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார் - ராகு கேது கிரகங்களை பற்றிய பார்வை…
கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பவர்கள் ராகு கேதுக்கள் என்ற முதுமொழி ஜோதிடத்துறையில்
புழுக்கத்தில் உள்ள புகழ் பெற்ற முதுமொழி ஆகும், அதென்னங்க கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார்
புரியவில்லையே என்று புதிதாக இதை கேட்பவர்கள் கருதலாம் அதாவது ஜோதிடத்தில்
ஒரு புள்ளியில் இருந்து அதாவது ஒருவித கோணத்தில் இருந்து பார்த்து சூரியன் முதலான
மற்ற அனைத்து கிரகங்களையும் விட சாயா கிரகங்கள் என வர்ணிக்கப்படும் ராகு கேது ஆகிய
இரு கிரகங்கள் மிக பலமானவர்கள் என்று ஜோதிடத்தில் சொல்வார்கள். அப்பேர்பட்ட ராகு கேது செயல்படும் முறையை
வர்ணிக்கவே இந்த கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார் என்ற முதுமொழி வந்தது ஜோதிடத்தில்.
சரி இந்த கெடுத்து கொடுப்பார்,
கொடுத்து கெடுப்பார் என்றால் என்னவென்று பார்ப்போம், ராகு கேதுக்கள் ஒன்றை கெடுத்து மற்றொன்றை
கொடுப்பார்கள் அல்லது ஒன்றை கொடுத்து மற்றொன்றை கெடுப்பார்கள். இதில் கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார் என்பது ராகுவுக்கும்
பொருத்தும் அது போலவே கேதுவுக்கும் பொருத்தும்.
சரி விஷயத்திற்கு வருவோம் இதில் கேது எப்படி செயல்பாடுவார்
ராகு எப்படி செயல்பாடுவார் என்று
பார்ப்போம் முதலில் கேதுவை பார்ப்போம்
கேது = அறியாமையை
மற்றும் பந்தபாசத்தை கெடுத்து பக்குவ ஞான அறிவை கொடுப்பார் கேது வேறுவிதத்தில்
சொல்லுவதானால் பக்குவ ஞான அறிவை கொடுத்து அறியாமையை மற்றும் பந்தபாசத்தை
கெடுப்பார்.
இதற்கு உதாரணமாக ஆன்மீகத்தில் உள்ள ஒரு ஞானகுருவை
எடுத்துகொள்ளலாம் அவர் தன்னிடம் வரும் சீடனுக்கு பக்குவ ஞான அறிவை கொடுத்து
அறியாமையை மற்றும் பந்தபாசத்தை கெடுப்பார் அல்லது அழிப்பார்.
அதாவது இதை திருவள்ளுவர் இவ்வாறு கூறுவார்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
இதன் பொருள் மற்ற உலக பற்றுகளை விட்டொழிக்க வேண்டும்
என்று நினைக்கூடியவர்கள் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக்
கொள்ள வேண்டும், அதாவது எந்த
விதத்திலும் பற்று இல்லாமல் இருக்ககூடியவர்கள் இரண்டு தரப்பினர் ஒன்று இறைவன்
மற்றொன்று ஞானத்துறவிகள் அவர்களை ஒருவன் பற்றிக் கொண்டால் உலகத்தின் மீதி
இருக்ககூடிய பற்றுகள் ஒழிந்து விடும் அல்லது அவர்கள் இவனிடமுள்ள அந்த பந்தபாச
பற்றுகளை ஒழித்துவிடுவார்கள்.
அதெல்லாம் சரியங்க இதனால கேது என்ன கொடுப்பார் என்று
சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டீர்கள் என்றால் கேது பக்குவ ஞான அறிவு தருவார்
அதனால் என்ன நன்மை என்று கேட்டீர்கள் என்றால் அனுபவ பாடம், நிம்மதி, சாந்தி, பேரின்பம், முக்தி
இப்படியான பயன்களில் ஏதாவது சிலவற்றை அவர்களுக்கு கொடுப்பார்கள் அதுவே அரைகுறை
ஞானமாக போயிவிட்டால் ஆபத்தை கொடுப்பார் சரி இதில் எதை கேது எதை கெடுப்பார்
உலகப்பற்று உடன் கூடி கற்பனையான அறிவு அல்லது தீவிர ஆர்வம் ஆசை போன்றவற்றை
கெடுப்பார் கேது.
போதும் சார் இந்த ஆன்மீக புராணம் ஒரே போரடிக்குது ராகு பத்தி
சொல்ல ஆரம்பிங்க சார் என்று சிலருக்கு தோன்ற ஆரம்பிக்கலாம் அதுவும் சரி தான்
இப்போது ராகுவை பற்றி பார்ப்போம்
ராகு = பக்குவ
ஞான அறிவை கெடுத்து அறியாமையை மற்றும் பந்தபாசத்தை கொடுப்பார் இராகு, வேறுவிதத்தில் சொல்லுவதானால் அறியாமையை மற்றும்
பந்தபாசத்தை கொடுத்து பக்குவ ஞான அறிவை கெடுப்பார்.
இதற்கு உதாரணமாக பொழுதுபோக்குத் துறைகளில் ஏதாவது
ஒன்றில் இருக்கும் ஒரு தொழிலதிபரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் அவருக்கு மக்களை
கற்பனை உலகத்திற்கு கூட்டி போதல் அல்லது கற்பனையான ஏதேனும் குதூகலத்தை கொடுப்பது
அல்லது குறுகிய காலத்திற்கு ஏதாவது ஒரு சந்தோஷமான விஷயங்களை காட்டி அவர்களுக்கு
தற்கால இன்பத்தை கொடுக்க முயற்சி செய்வார் இதன் மூலம் மனிதர்கள் எதார்த்த அறிவை
அந்த காலத்தில் மறந்து ஒருவிதமான கற்பனை சந்தோஷத்தில் இருப்பார்கள் அதுபோல தான்
ராகுவின் செயல்பாடு.
அதாவது இதற்கு உதாரணமாக மணிமேகலையில் வரக்கூடிய ஒரு பாடலை
சுட்டிக் காட்டலாம்
" பேதைமை
சார்வாச் செய்கை யாகும்
செய்கை சார்வா உணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
அருவுரு சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா ஊறு ஆகும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி
சாக்காடு " - (மணிமேகலை
30-ஆம் காதை 103-116)
இதன் தொடர்ச்சி காணொளியில் உள்ளது (remain continuation of this video)
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார் - ராகு கேது கிரகங்களை பற்றிய பார்வை…"
கருத்துரையிடுக