12 இராசிகளுக்கும் வேத ஜோதிடத்தில் சொல்லபட்ட வேறுபெயர்கள்...


12 இராசிகளுக்கும் வேத ஜோதிடத்தில் சொல்லபட்ட வேறுபெயர்கள்...

இராசி
வேதபெயர்
மேஷம்
மது
ரிஷபம்
மாதவா
மிதுனம்
சுக்ரா
கடகம்
சுஷி
சிம்மம்
நாபஸ்
கன்னி
நாபஸ்யா
துலாம்
இஸ்ஸ
விருச்சிகம்
ஊர்ஜா
தனுசு
சகஸ்
மகரம்
சகஸ்யா
கும்பம்
தபஸ்
மீனம்
தபஸ்யா

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 


கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 1

கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 1

எப்போதும் எந்த காலத்திலும் பெரும்பாலனவர்களால் அடைய துடிக்கும் மற்றும் வாழ்வில் லட்சியமாக கருதும் ஒன்று இருக்குமானால் அது செல்வம் அதற்கு நிதி, பணம், பொருள், திரவியம், வளம் என்று பல சொற்கள் கையாளப்பட்டு வருகிறது, ஈஸ்வரனின் நிதிபதியாக சொல்லப்படும் குபேரனும் நவ நிதிகளை சேமித்து வைத்திருக்கிறானாம் அது எங்கே சொர்கத்திலோ அல்லது குபேரன் வசிக்கும் மகாமேருவிலோ சேமித்து வைத்திருக்கிறான் என்று கருதுபவர்களும் உண்டு ஆனால் அந்த குபேரன் சேர்த்து வைக்கும் அல்லது சேமித்து வைத்திருக்கும் நிதியானது உண்மையில் ஒவ்வொருவரது உடலுக்குள்ளும் தான் இருக்கிறது.

குபேரன் மட்டும் தான் நிதியை சேகரித்து வைக்கும் அதிகாரியா? நாமும் குபேரன் தான் ஆம் நமது வீட்டிலும் நவ நிதி சேமிப்புகள் உள்ளன வேடிக்கையாக சொல்வதானால் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நாளைகளுக்கு தேவையான நீர், உணவு தானியம், நெருப்பு, ஆடை, பொன் பொருட்கள், கல்வி பட்டயங்கள், நில மற்றும் பங்கு பத்திரங்கள், சமையல் பாத்திரங்கள், உபயோகிக்கும் இயந்திர சாதனங்கள் என நவ நிதிகள் உள்ளன. இந்த பொருட்களை சேகரித்து வைக்கும் பண்பு எப்படி வந்து என்று பார்த்தால் வரும் காலத்திற்கு தேவை என்ற எண்ணம் தான்

இதையும் வேடிக்கையாக உவமையாக சொல்வதானால் அணிலும் எலியும் ஒரு இனத்தின் வெவ்வேறு பிரிவு விலங்கு, அணில் ஆனது தன் முன் எவ்வளவு உணவுகள் இருந்தாலும் தனக்கு தேவையான அளவு உண்டு விட்டு விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் ஈடுபட ஆரம்பித்துவிடும் அதுவே எலி ஆனது தனக்கு தேவையான அளவு உண்டது போக போந்து வலை தோண்டி அதில் கிடைத்த உணவை எடுத்து கொண்டு போய் சேமித்து வைத்து கொள்ளுமாம் சில ஆராய்ச்சிகளில் எலியின் டி.என்.எ விற்கும் மனிதனின் டி.என்.எ விற்கும் பல ஒற்றுமை சம்பந்தங்கள் உள்ளதாக கூட ஆராய்ச்சிகள் சில சொல்லும்.  வரும் காலத்திற்கு தேவை என்ற எண்ணத்தால் பொருட்களை சேகரித்து வைக்கும் நிலையில் இருந்து அடுத்த கட்டமாக பணக்காரன் மற்றும் ஏழை என்ற பிரிவு எப்படி வந்தது என்று சிறிய அளிவில் சுருக்கமாக சொல்கிறேன் நடந்த கதையாக படித்த விஷயம் இது,

அதாவது பசுபிக் பெருங்கடலில் ஒரு தீவு இருந்தது அதில் இருந்த மீனவர்கள் ஒவ்வொரு பேரும் ஒவ்வொரு நாளும் மீன் பிடிக்க சென்று கிடைக்கும் மீன்களை வைத்து அந்த தீவில் விளைந்த மற்ற சில தாவரங்களை வைத்து உண்டு வாழ்ந்து வந்திருந்தார்கள் சென்ற நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்கள் அந்த தீவை கைபற்றி காசு, பணத்தாளை அந்த மீனவர்களுக்கு அறிமுகபடுத்திய பின் அந்த தீவின் மக்களிடத்திலேயே பின் காலத்தில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என்ற பிரிவு உருவானது அங்கு துறைமுகம் உருவான பின் அது மேலும் வலுவான பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடைவெளியை உருவாக்கியது.

காசு, பணத்தாள் அல்லது பணச்சீட்டு இவைகளின் காரணமாக மேலே சொன்ன மனிதனுக்கு தேவையான நீர், உணவு தானியம், நெருப்பு, ஆடை, நிலம் என அனைத்து உடைமைகளையும் காசு, பணத்தாள் அல்லது பணச்சீட்டு என்ற ஒரே இடைபேரக் கருவியால் தீர்த்து வைத்துக் கொள்ளும் வசதி கிடைத்தது அந்த எளிதில் மக்கி கெட்டுப் போகாத வசதியின் எதிர்விளைவாக மனிதர்கள் அந்த காசு, பணத்தாள் அல்லது பணச்சீட்டை அளவை தாண்டி சேமிக்கும் வாய்ப்பு கிடைத்தது மனிதர்களுக்குள் இருக்கும் இயல்பான ஆசை மற்றும் திறமையின் காரணமாக அந்த பணத்தை பெருமளவில் குவிக்க ஆரம்பிக்கிறார்கள் வலுவான பணக்கார மற்றும் ஏழை இடைவெளி உருவானது. அதன் எதிர்விளைவாக இருப்பதை பகிர்வோம் என்ற பொதுவுடைமை கொள்கைகளும் உருவானது.


கைரேகையும் ஜோதிடமும் பகுதி 4 - புதன் மேடு…

கைரேகையும் ஜோதிடமும் பகுதி 4 - புதன் மேடு…

மனித வாழ்வை காலந்தொட்டு கணிக்க உதவும் வேத ஜோதிடத்திற்கு பிறகு அடியேனால் மிக மதிக்கபடும் கணிதங்கள் கைரேகை ஜோதிடம் மற்றும் நாடிஜோதிடம் ஆகும். இதில் கைரேகை ஜோதிடத்தில் மற்றும் நாடிஜோதிடத்தில் எனக்கு பெரிய படிப்பும் மற்றும் அனுபவமும் இல்லையேன்றாலும் வேத ஜோதிடத்தை ஒட்டிய ஒப்பீடு ஆன சில கருத்துகளை படித்துள்ளேன்  அதில் வேத ஜோதிடத்தில் எப்படி நவகிரகங்கள் இருக்கின்றனவோ அது போல கைரேகையிலும் இராகு கேது தவிர சப்தகிரகங்களின் தொடர்பு இருக்கிறது அதை கைரேகையில் கிரக ஆதிக்க மேடுகள் என்று அழைக்கப்படுகிறது அந்த சப்தகிரக மேடுகளுடன் நமது  வேத ஜோதிட கிரக மற்றும் ஸ்தான காரகத்துவங்களையும் சேர்த்து ஒப்பிட்டு இந்த பதிவை படித்த மற்றும் அனுபவ அறிவையும் இணைத்து எழுதுகிறேன். 
புதன் மேடு -
கைரேகையில் புதன் மேடு சுண்டு விரலுக்கு கீழ் உள்ள பகுதி தான் புதன் மேடு என்று அழைக்கப்படுகிறது ஐந்து விரல்களில் சிறிய விரலானலும் அதன் அடியில் பெரிய சதுர்ய புத்தி, பகுத்தறிவு திறனை காட்டும் முக்கிய மேடாக இது உள்ளது. ஜோதிடத்தில் புதன் எப்படி சூரிய, சந்திர பலத்தை ஒட்டி அதன் கதிர் பலங்களை அமைக்க பட்டுள்ளதோ அது போலவே கைரேகை சாஸ்திரத்திலும் புதன் மேட்டின் பலம் சந்திர மேடு, சூரிய மேடு, எண்ண ரேகை பலத்தை ஒட்டி இந்த புதன் மேட்டின் பலன்களும் அமையும். புதனின் காரக பலமாக இருப்பது சதுர்ய புத்தி, பகுத்தறிவு, நரம்பு, தகவல் தொடர்பு, வியாபாரம், நிதி, கணக்கு, பாண்டித்தியம், ஜோதிட ஞானம், மந்திர தந்திரம், அறிவுரைகள், குற்றம், தில்லுமுல்லு, பொய்முகம் ஆகியவை ஆகும். இதை ஜாதக மற்றும் கைரேகையோடு ஒப்பிட்டு அமைத்து பார்க்கும் போது ஜாதகத்திலும் மற்றும் கைரேகையிலும் இந்த புதன் இருப்பு நன்றாக அமைந்தால் மேலே சொன்ன பலன்கள் சிறப்பான முறையில் அமையும். அதாவது கைரேகையில் இந்த புதன் மேடு பருத்து பரந்து நல்ல மேல் நோக்கிய சுருள் உடன் மேலும் நல்ல குறிகளுடனும் (நட்சத்திரம், சதுரம்...) அமைந்தால் நல்லது. அதே சமயம் புதன் மேடு அதிக உச்சம் அடைவதும் அதிக நீசம் அடைவதும் இரண்டும் வேறுவேறு வகையில் பிரச்சினைகளை தரக்கூடிய தாக அமையும். அதே போல ஜாதகத்தில் புதனும் மற்றும் அதன் ஸ்தானங்களில் முக்கியமாக 3,6 ஆம் ஸ்தானமும் மற்றும் அதற்கு அடுத்து 4, 8, 12 ஆம் ஸ்தானமும் புதனின் பலத்தை பிரதிபளிக்கும் ஸ்தானங்கள் ஆகும். இவ்வாறு உள்ள அமைப்புகள் ஜாதகத்தில் நல்லவிதமாக அமைய புதனின் காரக பலம் வாழ்வில் பலப்படும்.

பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் சதயம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

கடந்த இரண்டு வாரங்களாக ஜோதிட சம்பந்தமான சில சில ஆய்வுகளை செய்து கொண்டிருந்த காரணத்தால் ஜோதிட பதிவுகளை இட நேரமின்மை இருந்தது தற்போது அது ஒரளவு முடிந்துள்ளது.
பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் சதயம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம், கிரக பொருத்தம், திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும். நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம், மத்திம பொருத்தம், அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் ஆணின் சதயம் நட்சச்திரம் வரை எண்ண 20 ஆக வருவதால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் சதயம் நட்சத்திரம் ராக்ஷஸ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் இல்லை.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் சதயம் நட்சச்திரம் எண்ண 20 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் சதயம் நட்சச்திரம் எண்ண 20 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.  27 நட்சத்திரங்களின் யோனி இன மிருகங்கள்...

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் சதயம் நட்சச்திரம் மிருகப் பிரிவு குதிரை ஆகும் எனவே இரண்டும் பகை மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் கும்பம் இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 10 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆண் கும்பம் இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனுக்கு சனி நட்பு உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம்.  
இதில் பெண் ரிஷப இராசி ஆண் கும்பம் இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் சதயம் நட்சச்திரம் கழுத்து ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் சதயம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் மட்டும் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் சதயம் நட்சத்திரம் வாத நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறு நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் சதயம் நட்சத்திரமும் பால் இல்லாத வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இல்லாத மரம் வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் சதயம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  8 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்




Powered by Blogger