பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் உத்திரட்டாதி - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் உத்திரட்டாதி - திருமண நட்சத்திர பொருத்தம்…

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம், கிரக பொருத்தம், திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும். நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம், மத்திம பொருத்தம், அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2, 4, 6, 8, 9, 11,13, 15,18, 20, 24, 26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் ஆணின் உத்திரட்டாதி நட்சச்திரம் வரை எண்ண 22 ஆக வருவதால் இருவருக்கும் தினப்பொருத்தம் இல்லை.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் உத்திரட்டாதி நட்சத்திரம் மனுஷ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் உத்திரட்டாதி நட்சச்திரம் எண்ண 22 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் உண்டு.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் உத்திரட்டாதி நட்சச்திரம் எண்ண 22 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.  27 நட்சத்திரங்களின் யோனி இன மிருகங்கள்...

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் உத்திரட்டாதி நட்சச்திரம் மிருகப் பிரிவு பசு ஆகும் எனவே இரண்டும் பகை மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் மீனம் இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 11 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆண் மீனம் இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனுக்கு குரு (வியாழன்) சம உறவுமுறை மற்றும் குருவுக்கு (வியாழன்) சுக்கிரன் பகை உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் இல்லை.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம்.  
இதில் பெண் ரிஷப இராசி ஆண் மீனம் இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் உத்திரட்டாதி நட்சச்திரம் தொடை ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் உத்திரட்டாதி நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் மட்டும் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் உத்திரட்டாதி நட்சத்திரம் பித்த நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் ஒரே நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் இல்லை.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் உத்திரட்டாதி நட்சத்திரமும் பால் இல்லாத வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இல்லாத  மரம் வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் உத்திரட்டாதி நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  7 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்




கிரகங்களின் ஷட்பலம் - கும்ப இராசியின் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்…

கிரகங்களின் ஷட்பலம் - கும்ப இராசியின் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்…

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஷட்பலம் காணப்பட்டு அது ஒருவரனின் ஜாதக பலனை அறிவதற்கு உபயோகமாக இருக்கும் ஒரு நல்ல முறையாகும், ஷட் (षट्- SaT) என்றால் "ஆறு" என பொருள்படும். "ஷட் பலம்" என்றால் "ஆறு விதமான வலிமை" எனப் பொருள்படும்.

கிரகங்களின் ஆறுவிதமான பலங்கள் -

1) ஸ்தான பலம்
2) திக் பலம்
3) கால பலம்
4) சேஷ்ட பலம்
6) த்ருக் பலம்

இந்த ஷட் பலத்தில் நாம் முதலில் பார்க்க இருப்பது ஸ்தான பலம் ஆகும் இந்த ஸ்தான பலத்திற்கு உள் பிரிவுகள் உண்டு அவை

ஸ்தான பலம் - உட்பிரிவுகள்

1) ஆறுநிலை பலம்
2) பால்பலம்
3) இருப்புபலம்
4) உச்சபலம்
5) கேந்திர பலம்
6) திரிகோண பலம்
7) வர்க்க பலம்

இது ஒரு புத்தகத்தில் அடங்கக் கூடிய அளவுக்கான விஷயங்கள் என்பதால் ஒர் இரு பதிவுகளில் கண்டுவிட முடியாது எனவே முதலில் ஸ்தான பலத்தின் உள் பிரிவான ஆறுநிலை பலம் மற்றும் பால்பலத்தை மட்டும் முதலாவதாக பார்ப்போம், அதில் ஒவ்வொரு இராசியாக பார்க்கலாம் காலசக்கரத்தின் முதல் இராசியான மேஷம் முதல் கடைசியான மீனம் வரை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) ஆறுநிலை பலம்
ஒவ்வொரு இராசியில் அமரும் போது ஒவ்வொரு விதமான பலம் மற்றும் பலவீனங்களை அடைகின்றன இது ஒரு ஜாதக கணிதத்தில் முக்கிய பங்காற்றுகின்றன அதாவது ஜோதிடத்தில் இராசி சக்கரத்தில் ஒவ்வொரு பிரிவு இராசி மண்டலத்திலும் ஒரு கிரகம் வந்து சேர்வதன் மூலம் அந்த இடத்திற்கு தக்கவாறு ஒரு அவஸ்தை (கிரணங்களில் சூழ்நிலை மாற்றம்) அடைகின்றன என்பதை நாம் முன்பே முந்தை பதிவுகளில் ஒவ்வொரு இராசியாக பார்த்தோம் அதாவது ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என ஆறு வகையான அவஸ்தைகளாக பிரித்து எந்த எந்த இராசி எந்த எந்த கிரக்ங்களுக்கு இந்த ஆறு விதமாக கொண்ட தன்மைகளை (அவஸ்தை) என்பதை பார்த்தோம் அதை நீங்கள் மறந்திருக்கலாம் அதன் இணைப்பு குறிப்பு இது - 12 இராசிகளில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகளின் தொகுப்பு...

2) பால்பலம்
பால்பலம் என்பது ஒவ்வொரு இராசியையும் ஆண்பால் இராசி, பெண்பால் இராசி என்று பிரிக்கபட்டுள்ளது அதன் விவரத்தை நான் ஏற்கெனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் 12 இராசிகளில் ஒற்றை மற்றும் இரட்டை, ஆண் பெண் இராசி... , அதே போல நவகிரகங்களையும் ஆண் பெண் அலி பிரிவுகள் உண்டு பண்ணபட்டுள்ளது சூரியன் = ஆண், சந்திரன் = பெண், செவ்வாய் = ஆண், புதன் = அலி, வியாழன் (குரு) = ஆண், சுக்கிரன் (வெள்ளி) = பெண், சனி = அலி, இராகு = பெண், கேது = அலி எனப்பிரிக்க பட்டுள்ளது

3) இருப்புபலம்
இருப்புபலம் என்பது ஒவ்வொரு இராசியையும் சரம், ஸ்திரம், உபயம் இராசி என்று பிரிக்கபட்டுள்ளது அதன் விவரத்தை நான் ஏற்கெனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் உங்கள் லக்னம் சரமா?, ஸ்திரமா?, உபயமா?... , அதே போல நவகிரகங்களையும் சரம், ஸ்திரம், உபயம் பிரிவுகள் உண்டு பண்ணபட்டுள்ளது சூரியன் = ஸ்திரம், சந்திரன் = சரம், செவ்வாய் = ஸ்திரம், புதன் = உபயம், வியாழன் (குரு) = உபயம், சுக்கிரன் (வெள்ளி) = சரம், சனி = சரம், இராகு = சரம், கேது = ஸ்திரம் எனப்பிரிக்க பட்டுள்ளது.


கும்பம் ராசி மண்டலத்தில் நவகிரகங்கள் இருப்பதால் அவைகள் பெறும் ஆறுநிலை, பால்பலம், இருப்புபலம் விவரங்கள் -

கோள்கள்
அவஸ்தை
ஆறுநிலை
பால்பலம்
இருப்புபலம்
மொத்தம்
சூரியன்
பகை
0%
10%
10%
20%
சந்திரன்
சமம்
50%
0%
0%
50%
செவ்வாய்
சமம்
50%
10%
10%
70%
புதன்
சமம்
50%
4%
0%
54%
வியாழன்
சமம்
50%
10%
0%
60%
சுக்கிரன்
நட்பு
75%
0%
0%
75%
சனி
ஆட்சி
100%
4%
0%
104%
ராகு
பகை
0%
0%
0%
0%
கேது
பகை
0%
4%
10%
14%


நவகிரகங்களும் அதன் காரகத்துவ மரங்களும்…

நவகிரகங்களும் அதன் காரகத்துவ மரங்களும்…

மரங்களும் நாமும் நீண்ட சார்பு உறவை கொண்டவர்கள், கோடையில் நிழலும் வசந்தகாலங்களில் பழங்களையும், முதிர்ந்த பின்பு நமது வீட்டு உபயோக மரப்பொருட்களையும் தரும் இயற்கையின் செல்வ களஞ்சியம் மரங்கள். சாலையோரங்களில் நமது மண் சார்ந்த மரங்களையே நடவேண்டும். பூமிமத்திய ரேகையை ஒட்டி கோடையை தாங்கி வளரும் நமது மண் சார்ந்த மர இனங்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும். இதெல்லாம் மரத்தின் நன்மைக்கு மட்டும் அல்ல நமது நன்மைக்கு தான். அப்படிபட்ட மரங்களை பற்றிய நவகிரகங்களின் காரகத்துவ மரங்களை பார்ப்போம்.

கோள்கள்
வகைகள்
சூரியன்
வலுவான தண்டு அடித்தளம் கிளைகள் கொண்ட மரங்கள்
சந்திரன்
பால் மரங்கள் (ரப்பர் மரம் போன்றவை)
செவ்வாய்
கசப்பான மற்றும் அமில மரங்கள் (எலுமிச்சை மரம் போன்ற)
புதன்
அதிக உபயோகமற்ற பழங்களை தரும் மரங்கள்
வியாழன்
பழங்களை தரும் மரங்கள்
சுக்கிரன்
வாசனை மற்றும் மலர் மரங்கள்
சனி
பயனற்ற மரங்கள் \ எளிதில் பரவும் மரங்கள்
ராகு
முள் மரங்கள்
கேது
அரியவகை மரங்கள்


நவகிரகங்களில் சனி பகவானுக்கான மந்திரங்கள், பாடல்கள், காரகத்தவ சாஸ்திரங்கள்…

நவகிரகங்களில் சனி பகவானுக்கான மந்திரங்கள், பாடல்கள், காரகத்தவ சாஸ்திரங்கள்…

இந்துமதத்தில் நவகிரகங்களும் வழிபாட்டுக்குரிய தேவர்களாக கலந்துள்ளனர் அதே நேரத்தில் பழங்காலங்களில் சூரியன், சந்திரன் தனிபட்ட முறையில் வணங்கினாலும் பின் வந்த காலங்களில் முதல் தெய்வங்களின் வழியாகவும் அவர்களை வழிபடுவதையே சிறந்தாக கருதபடுகிறது அப்படியாக நவகிரகங்களுக்குரிய காரகத்துவ தெய்வங்கள், சாஸ்திரங்களும், பாராயண மந்திரங்களும், தனிபட்ட காயத்தரி மற்றும் நவகிரகங்கள் வழிபட்டு பேறுபெற்ற தேவார தல பதிகங்கள் என ஒரு தொகுப்பாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் கொடுக்கபட உள்ளது, நம் பாரம்பரிய மருத்துவத்தில் "உணவே மருந்து மருந்தே உணவு"  என்று சொல்வது முதுமொழி அதே போல் இந்துமதத்தில் பக்தி (சரியை), கிரியை (கர்மம்), யோகம், ஞானம் நான்கு மார்க்கங்கள் உள்ளன அதில் யோகம், ஞான மார்க்கங்களில் உள்ளவர்களுக்கு வழிபாடு பிரதான மானதல்ல, அதில் பக்தி, கர்மம் ஆகிய இரு மார்க்கங்களில் உள்ளவர்களுக்கு "வழிபாடே பரிகாரம் பரிகாரமே வழிபாடு" அந்த வழிபாட்டுக்கு உதவுவது தான் முன்னோர்கள் வழிபட்ட மந்திரங்கள், பாடல்கள் இவ்வகைகள் நிறைய இந்துமதத்தில் உள்ளதால் நூல்கள் எடுத்து இயம்பும் முக்கியமானவற்றை மட்டும் விளக்கி உள்ளேன் மேலும் சிலருக்கு வழிபாட்டால் பரிகாரம் ஆகாது தீர்வு தராது அதற்கு காரணங்கள் உண்டு அதை இந்த இடத்தில் விளக்க விரும்பவில்லை.

கோள்
காரகத்துவ சாஸ்திரங்கள் (Seasons)
சனி
சர்வகர்ம சாஸ்திரங்கள், ப்ரம்ம உபதேச சாஸ்திரங்கள்

கோள்
தெய்வம்
சனி
ஈஸ்வரன், கிருஷ்ணர், யமன், அனுமன்

கோள்
காயத்ரி
சனி
"ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||"

கோள்
பாராயண மந்திரம்
சனி
சனி பகவான் ஸ்தோத்திரங்கள், அனுமன் துதி, ஸ்ரீகாலபைரவாஷ்டகம், ஈஸ்வர ஸ்துதி

கோள்
தேவார பதிகங்கள்
சனி
திருநள்ளாறு, திருநெல்லிக்கா, திருக்குரங்கணில்முட்டம், திருநணா (பவானி),
திருப்புக்கொளியூர் (அவிநாசி)

நவாம்ச லக்னம் கடகமானால்...

நவாம்ச லக்னம் கடகமானால் - கடகம் நவாம்ச லக்னமாக வரும்போது...

அசுவினி 4 பாதம்
ரோஹிணி 4 பாதம்
புனர்பூசம் 4 பாதம்
மகம் 4 பாதம்
ஹஸ்தம் 4 பாதம்
விசாகம் 4 பாதம்
மூலம் 4 பாதம்
திருவோணம் 4 பாதம்
பூரட்டாதி 4 பாதம்

ஒருவரின் லக்னமானது மேல் உள்ள நட்சத்திர பாதத்தில் இருக்கும் படி ஒருவர் பிறப்பை எடுத்திருந்தால் அவருக்கு நவாம்சத்தில் கடகம் லக்னமாக வரும் அப்படி கடகம் நவாம்ச லக்னமாக வரும்போது - அவரது உறவினர்களுக்கு உதவும் மனப்பான்மை மற்றும் உணர்வுப்பூர்வமான குணங்கள்.  சொந்த செல்வாக்கு உடையவர். அந்நிய நாடுகளில் வாழ்கின்ற வாய்ப்பு. செல்வ செழிப்போடு இருக்கும் நிலை. ஆவேசமாகக் கூடிய சூழல் அடிக்கடி ஏற்படல். நீர் (கபம்) தேகம். அடிக்கடி பயணங்கள். கலைகளில் வாசனை திரவியங்களில் நாட்டம். உணர்ச்சி பெருக்கு உடையவர். காதல் கடந்து போகும். முரட்டுத்தனமான பிடிவாதங்கள். ஆடம்பரமாக அல்லது சில விளையாட்டுதனமான குறும்புகள் மற்றவரை எரிச்சல் உண்டாக்கும். தன்னலமற்ற அன்பு. தகவல் தொடர்பு ஆற்றல் ஆகியவற்றை உண்டாக்கும். இது நவகிரகங்களில் சந்திரன், குரு, சூரியன் போன்ற கிரகங்களுக்கு ஏற்ற நவாம்ச இடம் ஆகும். 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


Powered by Blogger