பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் கேட்டை - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் கேட்டை - திருமண நட்சத்திர பொருத்தம்…

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம், கிரக பொருத்தம், திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும். நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம், மத்திம பொருத்தம், அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் ஆணின் கேட்டை நட்சச்திரம் வரை எண்ண 14 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம் இல்லை.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் கேட்டை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் இல்லை.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் கேட்டை நட்சச்திரம் எண்ண 14 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் கேட்டை நட்சச்திரம் எண்ண 14 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.  27 நட்சத்திரங்களின் யோனி இன மிருகங்கள்...

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் கேட்டை நட்சச்திரம் மிருகப் பிரிவு மான் ஆகும் எனவே இரண்டும் பகை மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் விருச்சிகம் இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 7 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆண் விருச்சிகம் இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனுக்கு செவ்வாய் தங்களுக்குள் சம உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம்.  
இதில் பெண் ரிஷப இராசி ஆண் விருச்சிகம் இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வருவதால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் கேட்டை நட்சச்திரம் பாத ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் கேட்டை நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் கேட்டை நட்சத்திரம் வாத நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறு நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் கேட்டை நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இருக்கும் மரம் வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் கேட்டை நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  7 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்




கைரேகையும் ஜோதிடமும் பகுதி 1 - சூரிய மேடு…


கைரேகையும் ஜோதிடமும் பகுதி 1 - சூரிய மேடு…

மனித வாழ்வை காலந்தொட்டு கணிக்க உதவும் வேத ஜோதிடத்திற்கு பிறகு அடியேனால் மிக மதிக்கபடும் கணிதங்கள் கைரேகை ஜோதிடம் மற்றும் நாடிஜோதிடம் ஆகும். இதில் கைரேகை ஜோதிடத்தில் மற்றும் நாடிஜோதிடத்தில் எனக்கு பெரிய படிப்பும் மற்றும் அனுபவமும் இல்லையேன்றாலும் வேத ஜோதிடத்தை ஒட்டிய ஒப்பீடு ஆன சில கருத்துகளை படித்துள்ளேன்  அதில் வேத ஜோதிடத்தில் எப்படி நவகிரகங்கள் இருக்கின்றனவோ அது போல கைரேகையிலும் இராகு கேது தவிர சப்தகிரகங்களின் தொடர்பு இருக்கிறது அதை கைரேகையில் கிரக ஆதிக்க மேடுகள் என்று அழைக்கப்படுகிறது அந்த சப்தகிரக மேடுகளுடன் நமது  வேத ஜோதிட கிரக மற்றும் ஸ்தான காரகத்துவங்களையும் சேர்த்து ஒப்பிட்டு இந்த பதிவை படித்த மற்றும் அனுபவ அறிவையும் இணைத்து எழுதுகிறேன்.

சூரிய மேடு - 
கைரேகையில் மோதிர விரலுக்குக்  கீழ் உள்ள வளைய பகுதி சூரிய மேடு என்று அழைக்கப்படுகிறது. இது நமது ஜாதகத்தில் சூரியனின் காரக பலத்தை காட்டும் அமைப்பாக உள்ளது. அதாவது வாழ்க்கை தரம், சம்பாத்திய திறமை, தந்தையாருடன் உறவுநிலை, அதிகாரம், பதவி, அரசு அரசாங்க அரசியல் தொடர்புகள், கம்பீரம், அறிவு சதுர்யம், இருதயம், கண், புகழ், சமூக சேவை, கண்டிப்பு, கட்டளை ஆகிய  சூரியனின் காரக பலம் ஜாதக மற்றும் கைரேகையோடு ஒப்பிட்டு அமைத்து பார்க்கும் போது ஜாதகத்திலும் மற்றும் கைரேகையிலும் இந்த சூரிய இருப்பு நன்றாக அமைந்தால் மேலே சொன்ன பலன்கள் சிறப்பான முறையில் அமையும். அதாவது கைரேகையில் இந்த சூரிய மேடு பருத்து பரந்து நல்ல மேல் நோக்கிய சுருள் உடன் மேலும் நல்ல குறிகளுடனும் (நட்சத்திரம், சதுரம்...) அமைந்தால் நல்லது. அதே போல ஜாதகத்தில் சூரியனும் மற்றும் 12 ஸ்தானங்களில் முக்கியமாக 5 ஆம் ஸ்தானமும் மற்றும் அதற்கு அடுத்து 1, 2, 6, 9, 10 ஆம் ஸ்தானமும் சூரியனின் பலத்தை பிரதிபளிக்கும் ஸ்தானங்கள் ஆகும். இவ்வாறு உள்ள அமைப்புகள் நல்லவிதமாக அமைய சூரியனின் காரக பலம் பலப்படும்.....


கிரகங்களின் ஷட்பலம் - விருச்சிகம் இராசியின் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்…

கிரகங்களின் ஷட்பலம் - விருச்சிக இராசியின் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்…

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஷட்பலம் காணப்பட்டு அது ஒருவரனின் ஜாதக பலனை அறிவதற்கு உபயோகமாக இருக்கும் ஒரு நல்ல முறையாகும், ஷட் (षट्- SaT) என்றால் "ஆறு" என பொருள்படும். "ஷட் பலம்" என்றால் "ஆறு விதமான வலிமை" எனப் பொருள்படும்.

கிரகங்களின் ஆறுவிதமான பலங்கள் -

1) ஸ்தான பலம்
2) திக் பலம்
3) கால பலம்
4) சேஷ்ட பலம்
6) த்ருக் பலம்

இந்த ஷட் பலத்தில் நாம் முதலில் பார்க்க இருப்பது ஸ்தான பலம் ஆகும் இந்த ஸ்தான பலத்திற்கு உள் பிரிவுகள் உண்டு அவை

ஸ்தான பலம் - உட்பிரிவுகள்

1) ஆறுநிலை பலம்
2) பால்பலம்
3) இருப்புபலம்
4) உச்சபலம்
5) கேந்திர பலம்
6) திரிகோண பலம்
7) வர்க்க பலம்

இது ஒரு புத்தகத்தில் அடங்கக் கூடிய அளவுக்கான விஷயங்கள் என்பதால் ஒர் இரு பதிவுகளில் கண்டுவிட முடியாது எனவே முதலில் ஸ்தான பலத்தின் உள் பிரிவான ஆறுநிலை பலம் மற்றும் பால்பலத்தை மட்டும் முதலாவதாக பார்ப்போம், அதில் ஒவ்வொரு இராசியாக பார்க்கலாம் காலசக்கரத்தின் முதல் இராசியான மேஷம் முதல் கடைசியான மீனம் வரை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) ஆறுநிலை பலம்
ஒவ்வொரு இராசியில் அமரும் போது ஒவ்வொரு விதமான பலம் மற்றும் பலவீனங்களை அடைகின்றன இது ஒரு ஜாதக கணிதத்தில் முக்கிய பங்காற்றுகின்றன அதாவது ஜோதிடத்தில் இராசி சக்கரத்தில் ஒவ்வொரு பிரிவு இராசி மண்டலத்திலும் ஒரு கிரகம் வந்து சேர்வதன் மூலம் அந்த இடத்திற்கு தக்கவாறு ஒரு அவஸ்தை (கிரணங்களில் சூழ்நிலை மாற்றம்) அடைகின்றன என்பதை நாம் முன்பே முந்தை பதிவுகளில் ஒவ்வொரு இராசியாக பார்த்தோம் அதாவது ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என ஆறு வகையான அவஸ்தைகளாக பிரித்து எந்த எந்த இராசி எந்த எந்த கிரக்ங்களுக்கு இந்த ஆறு விதமாக கொண்ட தன்மைகளை (அவஸ்தை) என்பதை பார்த்தோம் அதை நீங்கள் மறந்திருக்கலாம் அதன் இணைப்பு குறிப்பு இது - 12 இராசிகளில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகளின் தொகுப்பு...

2) பால்பலம்
பால்பலம் என்பது ஒவ்வொரு இராசியையும் ஆண்பால் இராசி, பெண்பால் இராசி என்று பிரிக்கபட்டுள்ளது அதன் விவரத்தை நான் ஏற்கெனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் 12 இராசிகளில் ஒற்றை மற்றும் இரட்டை, ஆண் பெண் இராசி... , அதே போல நவகிரகங்களையும் ஆண் பெண் அலி பிரிவுகள் உண்டு பண்ணபட்டுள்ளது சூரியன் = ஆண், சந்திரன் = பெண், செவ்வாய் = ஆண், புதன் = அலி, வியாழன் (குரு) = ஆண், சுக்கிரன் (வெள்ளி) = பெண், சனி = அலி, இராகு = பெண், கேது = அலி எனப்பிரிக்க பட்டுள்ளது

3) இருப்புபலம்
இருப்புபலம் என்பது ஒவ்வொரு இராசியையும் சரம், ஸ்திரம், உபயம் இராசி என்று பிரிக்கபட்டுள்ளது அதன் விவரத்தை நான் ஏற்கெனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் உங்கள் லக்னம் சரமா?, ஸ்திரமா?, உபயமா?... , அதே போல நவகிரகங்களையும் சரம், ஸ்திரம், உபயம் பிரிவுகள் உண்டு பண்ணபட்டுள்ளது சூரியன் = ஸ்திரம், சந்திரன் = சரம், செவ்வாய் = ஸ்திரம், புதன் = உபயம், வியாழன் (குரு) = உபயம், சுக்கிரன் (வெள்ளி) = சரம், சனி = சரம், இராகு = சரம், கேது = ஸ்திரம் எனப்பிரிக்க பட்டுள்ளது.


விருச்சிகம் ராசி மண்டலத்தில் நவகிரகங்கள் இருப்பதால் அவைகள் பெறும் ஆறுநிலை, பால்பலம், இருப்புபலம் விவரங்கள் -

கோள்கள்
அவஸ்தைகள்
ஆறுநிலை
பால்பலம்
இருப்புபலம்
மொத்தம்
சூரியன்
நட்பு
75%
0%
10%
85%
சந்திரன்
நீசம்
0%
10%
0%
10%
செவ்வாய்
ஆட்சி
100%
0%
10%
110%
புதன்
சமம்
50%
6%
0%
56%
வியாழன்
நட்பு
75%
0%
0%
75%
சுக்கிரன்
சமம்
50%
10%
0%
60%
சனி
பகை
0%
6%
0%
6%
ராகு
உச்சம்
(சில நூல்கள் இதை மறுக்கின்றன)
125%
10%
0%
135%
கேது
உச்சம்
(சில நூல்கள் இதை மறுக்கின்றன)
125%
6%
10%
141%


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 

ஜோதிட துணுக்குகள் பகுதி 7 - தைரியம் \அஞ்சாமையின் சிறப்பு பெருமைகள்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 7 - தைரியம் \ அஞ்சாமையின் சிறப்பு பெருமைகள்…
தைரியம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் அஞ்சாமை என்று அழைக்கபடுகிறது அதாவது இந்த தைரியம் \அஞ்சாமை உடையவர்களை கண்டால் தைரியம் இல்லாதவர்கள் அஞ்சுவர்கள் அதற்க்காக தைரியம் என்பது ஒரு பண்பு அல்ல அதாவது பண்பு என்றால் பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம் (பிறரியல்பை யறிந்து நடக்கும் நற்குணம் பண்பெனப்படுவது - கலித்தொகை) அப்படியானால் இந்த தைரியம் \அஞ்சாமை என்பது என்ன என்று கேள்வி எழலாம் தைரியம் \அஞ்சாமை என்பது ஒரு இயல்பு (Nature) அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் அஞ்சாமை பண்பாகும் அதுவே தீய வழியில் பயன்படுத்தினால் அஞ்சாமை குற்றம் ஆகும்.

சரி இந்த தைரியம் \அஞ்சாமை பற்றி திருவள்ளுவரின் பலவித கண்ணோட்டங்களை பார்ப்போம்

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந் நான்கும்
எஞ்சாமை-வேந்தற்கு இயல்பு. - திருக்குறள்

பொருள் - அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு குணங்களும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்குரிய இயல்பாகும்.

இதில் இருந்து தைரியம் \ அஞ்சாமை உள்ளவனே அரசனாக அல்லது ஒரு பொது நிறுவனத்தை முன்னெடுக்க முடியும் என்று தெரிகிறது.

அஞ்சாமை அல்லால், துணை வேண்டா-எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின். - திருக்குறள்

பொருள் - மனத்திடமில்லாத இல்லாதவனுக்கு, இடம் பொருள் ஏவல் வாய்த்தும் பயனில்லை, அஞ்சாமை தான் இன்றியமையாத பெருந்துணையாகக் கூறிஉள்ளார்.

இதில் இருந்து என்ன தான் வாய்ப்பு ஒருவனுக்கு அமைந்தாலும் தைரியம் \ அஞ்சாமை தான் மிக முக்கிய துணையாக ஒருவனுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல், அறிவார் தொழில்.  - திருக்குறள்

தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர். - திருக்குறள்

பொருள் - முன்பு என்னதான் அஞ்சாமை மாட்சியாகச் சொல்லப் பட்டாலும் கூட அஞ்சுவதும் முக்கியம் தான் என்று இதில் கூறுகிறார் அதாவது பழி மற்றும் தீய வினைகளை உண்டாக்கும் செயல்களை கண்டு அஞ்சி அதை செய்யாமல் இருப்பதும் மற்றும் தெளிவில்லாத செயல்களை அதன் பயனையும் அறிந்து அஞ்சுவதும் தான் அறிவார்ந்த அஞ்சாமை என்று முடிக்கிறார்

இப்படி ஒருவனுக்கு பதவி, செல்வம், புகழ் என்ற நல்ல பலன்களையும் அதே நேரத்தில் பழி, குற்றம், இழிவு என்ற தீய பலன்களையும் தரும் சக்தி கொண்டது இந்த தைரியம் \அஞ்சாமை, இதை ஜோதிடத்தில் மூன்றாம் வீடு, ஆறாம் வீடு மற்றும் நவகிரகங்கள் எல்லாமும் இந்த தைரியம் \அஞ்சாமை யோடு  தொடர்பு இருக்கிறது இருந்தாலும் சந்திரன், செவ்வாய், சூரியன், குருவோ அல்லது புதனோ துணையான முக்கிய கிரகங்கள்.

தைரிய வீரிய பாரக்கிரம ஸ்தானம் ஆன மூன்றாம் வீட்டின் அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி மற்றும் உச்சம் ஆகியிருந்தால் அவருக்கும் இயல்பாக இந்த தைரிய பாரக்கிரம சக்தி உடையவராக இருப்பார் அதனால் துணிவாகவும் துரிதமாகவும் உறுதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியவர். மேலும் சுப கிரகங்களிலின் சம்பந்தமும் பட்டு 1,5,9 ஆம் திரிகோண வீடுகளின் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருக்க அது நல்லதுக்கான தைரியம் \அஞ்சாமை உள்ளவர்களாக அமையும்.

தைரிய வீரிய பாரக்கிரம ஸ்தானம் ஆன மூன்றாம் வீட்டின் அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 1,5,9 ஆம் திரிகோண வீடுகளின் அதிபதிகளுடன் நல்ல விதமாக சேர்ந்து மூன்றாம் வீட்டை பார்த்தாலும் நல்லதுக்கான தைரியம் \அஞ்சாமை உள்ளவர்களாக அவர்களை அமைக்கும்.

தைரிய வீரிய பாரக்கிரம ஸ்தானம் ஆன மூன்றாம் வீட்டின் அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 9 ஆம் திரிகோண வீட்டின் அதிபதியோடு சேர்ந்து ஆட்சி மற்றும் உச்சம் ஆகியிருந்தாலும் மற்றும் நட்பு சுப வர்க்கங்களிலில் போய் அமர்ந்திருந்தாலும் பாப கிரகங்களின் தொடர்பின்றி இருந்தாலும் முன்னே திருவள்ளுவர் சொன்னது போல் பழி மற்றும் தீய வினைகளை உண்டாக்கும் செயல்களை கண்டு அஞ்சி அதை செய்யாமல் இருக்கும் அறிவார்ந்த அஞ்சாமை கொண்டிருப்பார்.

சந்திரன், செவ்வாய், சூரியன் கிரகங்கள் மூன்றாம் வீட்டின் அதிபதி உடன் சேர்ந்து ஆட்சி மற்றும் உச்சம் ஆகியிருந்தாலும் மற்றும் நட்பு சுப வர்க்கங்களிலில் போய் அமர்ந்திருந்தாலும் துணிவான மற்றும் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியவர் ஆக அமைக்கும்.

சைவத்தில் பார்வதி தேவியும் (துர்கை, காளி..) தைரிய சக்தியை தரும் பெண் சக்தியாகவும் சிவபெருமானின் ருத்திர பிரிவுகள் தைரிய சக்தியை தரும் ஆண் சக்தியாகவும் கருதபடுகிறது, வைணவத்தில் தைரியலட்சுமி, அனுமன், பலராமன்… என தைரிய சக்தியை தரும்  தெய்வங்களாக கருதபடுகிறது.



தைரியத்திற்க்காக மக்களால் போற்றப்படும் தெய்வத்திரு ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தின் சிறப்பை தெரிந்து கொள்ளலாம். மூன்றாம் வீட்டில் 2,6,11 க்குடைய சந்திரன் செவ்வாய் இருவரும் மகம் நட்சத்திரத்தில் சந்திரமங்கள யோகத்துடன் நிற்க அதை அந்த மூன்றாம் வீட்டின் அதிபதி சூரியன் பார்வை செய்வது சிறப்பு அது மட்டுமல்லாமல் 1,4 க்கு அதிபதியான புதன் சேர்ந்து பார்வை செய்வது சிறப்பு மேலும் 7ல் ஆட்சி பெற்ற குரு பகவான் 9ஆம் பார்வையாக மூன்றாம் வீட்டை பார்வை செய்வது மேலும் சிறப்பு ஆகும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger