மாந்தி ஆறில் (6ல்) இருந்தால் ஏற்படும் பொது பலன்கள்...

மாந்தி ஆறில் (6ல்) இருந்தால் ஏற்படும் பொது பலன்கள்... 



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மேஷம் காட்டும் தொழில்கள் - உங்களின் தொழில் ஸ்தானம் காட்டும் தொழில்களும்…

உங்களின் தொழில் ஸ்தானம் காட்டும் தொழில்களும் - மேஷம் காட்டும் தொழில்கள்…

ஜோதிடத்தில் ஒவ்வொருவரின் ஜாதகத்தை வைத்து அவரின் தொழில் வலிமையை பார்க்க பலவிதமான முறைகளை வழிகாட்டி சென்றுள்ளனர் நம் முன்னோர்கள் அதை பின்பற்றி பல புதிய தொழிலின் காரகத்துவங்களை கண்டு அறிய உதவியாக இருக்கிறது, ஒருவரின் ஜாதகத்தில் தொழில் வலிமையை காட்டும் ஸ்தானங்களாக கேந்திரங்கள் லக்னம் 4,7, 10 ஆம் ஸ்தானங்கள் உள்ளன, அதன் தொழில் யோகத்திற்கு உதவும் ஸ்தானங்களாக 5,9 உள்ளன, தொழிலின் பயிற்சிக்கு 3,9 ஆம் ஸ்தானங்கள் உள்ளன, தொழிலில் கடன் நிலைமை காட்டும் 6,8 ஆம் ஸ்தானங்கள் உள்ளன, தொழிலில் வரவை காட்டும் 2, 11 ஆம் ஸ்தானங்கள் உள்ளன, தொழிலில் செலவை காட்டும் 8, 12 ஆம் ஸ்தானங்கள் உள்ளன இப்படி ஒருவரின் தொழில் வலிமை அறிய இவ்வளவு அமைப்புக்கள் இருந்த போதும் அதற்கு ஆதார ஸ்தானமாக இருப்பது 10 ஆம் ஸ்தானம் என்னும் கர்ம ஸ்தானம் ஆகும்,

தொழில் வலிமை, எந்த வகை தொழில் போன்றவற்றை காட்டும் ஆதார ஸ்தானம் ஒருவரின் இராசி கட்டத்தில் லக்னத்தில் இருந்த எண்ண வரும் 10 வது ராசி ஸ்தானம் ஆகும், இந்த 10 வது ராசி ஸ்தானம்  மற்றும் இந்த 10 க்கு 10 வது ராசி ஸ்தானம், மற்றும் ஒருவரின் நவாம்ச லக்னத்திற்க்கு 10 வது ராசி ஸ்தானம், ஒருவரின் தசாம்ச லக்னம் மற்றும் அந்த லக்னத்திற்க் 10 வது ராசி ஸ்தானம், சந்திர லக்ன த்திற்க்கு 10 வது ராசி ஸ்தானம் என பல இராசி ஸ்தானங்களை பொருத்தே ஒருவரின் தொழில் வலிமை அமையும், அப்படி இருந்தாலும் எப்படியும் இந்த 10 ஆம் ஸ்தானங்கள் நமது 12 இராசி மண்டலத்தை தவிர வேறு ஒன்றிலும் வந்துவிட முடியாது எனவே ஒவ்வொரு இராசியும் காட்டு தொழில்களை தெரிந்து கொள்வதன் மூலம் யாரின் எந்த 10 ஆம் ஸ்தானம் வலுக்கிறதோ அதை ஒட்டி எவ்வகை தொழில் என்று அடையாளம் காண உதவும்.

பலநூல்கள் பல்வேறு வடிவங்களில் இராசிகள் குறிக்கும் தொழில் காரகத்துவங்களை கூறி உள்ளன, இதனால் உங்களை அதிகமாக குழப்பாமல் பலநூல்கள் கூறியுள்ளதை தொகுத்து உங்களின் 10 ஆம் ஸ்தானம் (கர்ம ஸ்தானம்) எந்த எந்த இராசியாக இருந்தால் எந்த எந்த தொழில் காரகத்துவங்கள் வரும் என்று வரிசையாக மேஷம் முதல் மீனம் வரை கூறவுள்ளேன் இனி ஒவ்வொரு இராசியாக பார்ப்போம், இது பல நவீன தொழிலில்கள் உருவாகி வரும் காலம் அதனால் நாம் அனுபவத்தின் மூலமும் ஒவ்வொரு இராசியின் காரகத்துவத்தை உற்று நோக்குவதன் மூலமாக புதிய நவீன தொழிலில்களின் காரகத்துவங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

மேஷம் -

அரசு வேலை, காவல் பணி, ராணுவ பணி,  தீ அணைத்தல் சேவை, சுரங்க பணி, உலோக உற்பத்தி, உலோக பொருட்கள் தயாரிப்பு விற்பனை, இரும்பு தொழிற்சாலைகள், பொறியியல், எரி எண்ணை ஆலைகள், சர்க்கரை ஆலைகள், அரசு சார் நிறுவனங்கள், ஆடு மாடு பண்ணைகள், மருத்துவன், அறுவை சிகிச்சை, இலக்கிய பணி விளையாட்டு வீரன், செங்கல் சூலை, மட்பாண்ட வேலைகள், கைத் தொழிலில்கள், சமையல் சேவை, உணவுப் பதார்த்த விற்பனை, பராமரிப்பு சேவை, விவசாயம், தொழிற்சங்க பணிகள், இரவு காவலன், வாகன உற்பத்தி விற்பனை, வரி வசூல், பழு துக்கம் அளக்கும் கருவி சேவை, சுத்திகரிப்பு சேவை, விவசாய இயந்திரங்கள் வாடகை சேவை, ரசாயனங்கள், உரங்கள், இயந்திர கருவிகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள், போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சேவை. 10 ஆம் ஸ்தானத்தின் நிலை கெட்டால் திருடத்தனம், கொள்ளையன், வேசித்தனம், உயிர் கொலை தொழில், கட்டபஞ்சாயித்து, மிரட்டி வரி வசூல்.

இப்போது நாம் தொழில் என்ற உடன் ஆங்கிலம் தவிர்க்க முடியாது அதனால் இதன் ஆங்கில வடிவம் -

Government work, police work, military work, fire extinguishing services, mining, processing, metals production, manufacturing of metal products and sales, iron factories, engineering, fuel oil mills, sugar mills, state owned enterprises, cattle and sheep farms, physician, surgeon, literary work, door-keeper, Security guard, watchman, night police, brick chamber, pottery work, sports, handmade job, cooking service, maintenance services, agriculture, trade union activities, the night watchman, auto sales, tax collections, cleaning and refining Service, agricultural machinery rental service, chemicals, fertilizers, machine tools and related products, transportation equipment production and service.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

பெண் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் - ஆண் சதயம் - திருமண நட்சத்திர பொருத்தம்...

பெண் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் - ஆண் சதயம் - திருமணப் பொருத்தம் நட்சத்திர பொருத்தம்...
முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம், கிரக பொருத்தம், திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும். நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம், மத்திம பொருத்தம், அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரத்திலிருந்து - ஆணின் சதயம் நட்சச்திரம் வரை எண்ண 22 ஆக வருவதால்  தினப்பொருத்தம் இல்லை.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்

இதில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் ராக்ஷஸ கணம் - ஆணின் சதயம் நட்சத்திரம் ராக்ஷஸ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம்  உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் முதல் ஆணின் சதயம் நட்சச்திரம் வரை எண்ண 22 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் உண்டு.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் முதல் ஆணின் சதயம் நட்சச்திரம் வரை எண்ண 22 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் மிருகப் பிரிவு ஆடு ஆகும் - ஆணின் சதயம் நட்சச்திரம் மிருகப் பிரிவு குதிரை ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் கும்பம் இராசி ஆனால் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 10 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ஆண் இருவரும் ரிஷப இராசி கும்பம் இராசி ஆனால் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனாகவும் சனியாகவும் ஆக வருவதால் இரண்டும் நட்பு உறவுதன்மை பெறுவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம். 
இதில் பெண் ரிஷப இராசியாக வருவதால் ஆண் கும்ப இராசியாகவோ வருகின்றபடியால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ - ஆணின் சதயம் நட்சச்திரம் கழுத்து ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் கார்த்திகை நட்சச்திரமும் - ஆணின் சதயம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் கார்த்திகை நட்சத்திரம் சிலேத்தும நாடி ஆகும் - ஆணின் சதயம் நட்சத்திரம் வாத நாடி நாடி ஆகும் பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறு நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் கார்த்திகை நட்சத்திரம் பால் இருக்கும் வகை - ஆணின் சதயம் நட்சத்திரம் பால் இல்லாத வகை பெண் பால் மரமாகவும் ஆணும் பால் இல்லாத வகை மரமாக ஆனாலும் மேல் சொன்னபடி விருட்ச பொருத்தம் உண்டு.

பெண்ணின் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் நட்சத்திரமும் - ஆணின் சதயம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  10 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் அதி உத்தமம் (மிக மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


Powered by Blogger