மஹாபெரியவா ஜாதகம் கணிப்பு, பரமாச்சாரியார் ஜாதக சிறப்புகள், Kanchi Mahaperiyava Horoscope in Tamil...

காஞ்சி மஹாபெரியவா ஜாதகம் கணிப்பு - ஆன்மஞானத்தை உணர்ந்திருந்தும் கர்மஞானியாக வாழ்ந்து அனைவருக்கும் வழிகாட்டியாக...kanchi periyava Horoscope in Tamil…

 

ஆன்மஞானத்தை உணர்ந்திருந்தும் கர்மஞானியாக வாழ்ந்து அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள், காஞ்சி முனிவர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் ஜாதகத்தின் சிறப்புகளை பார்க்க போகிறோம். காஞ்சி மஹாபெரியவா அவர்கள் மீது எப்போதுமே அடியேனுக்கு ஒரு நன்றிஉணர்வு உண்டு எமது குருவான ரமண மகரிஷியை அவரது பெருமையை மேற்கு உலகம் அறிவதற்கான வாசலை திறந்துவிட்ட மேன்மை பொருந்தியவர் காஞ்சி மஹாபெரியவா அவர்கள் ஆகும் ஆம் காஞ்சி மஹாபெரியவா அறிவுறுத்தியதால் தான் பால் பிராண்டன் என்ற ஆன்மீக பக்தர் எழுத்தாளார் ரமண மகரிஷியை 1931இல் சந்தித்தார். அடியேன் ஆரம்பத்திலே சொன்னேன் அல்லவா ஆன்மஞானத்தை உணர்ந்திருந்தும் கர்மஞானியாக வாழ்ந்து அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தவர் என்று ஆம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தவர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, தொழிலதிபர்களுக்கு, பண்டிதர்களுக்கு, ஆன்மீகவாதிகளுக்கு, சமய காப்பாளர்களுக்கு, அந்நிய நாட்டை சார்ந்தவர்களுக்கு, பல ஆயிரம் குடும்பஸ்தர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் காஞ்சி மஹாபெரியவா ஆகும். தோற்றத்திலும் வாழ்க்கைமுறையிலும் ஒர் இறை தொண்டனாக துறவியாக இருந்து ஆனால் நடவடிக்கைகளில் செயல்பாடுகளில் ஒரு ஆன்மீக அரசனாக திகழ்ந்தவர் காஞ்சி மஹாபெரியவா ஆகும். வரது ஜாதகம் பல பொக்கிஷங்கள் அடங்கிய ஜாதகம் ஆகும்.



 

காஞ்சி பெரியவர் 1894 ஆம் ஆண்டு மே 20ல் விழுப்புரத்தில் பிறந்தார் மதியம் 1:18 ல் பிறந்தார்கள், காஞ்சி மஹாபெரியவா  அவர்களின் ஜாதகத்தை பார்க்கும் 12 லக்னங்களில் தலைமை லக்னமான சிம்ம லக்னத்தில் பிறந்துள்ளார்கள் தியாகத்திற்கு ஆன நட்சத்திரமும் மற்றும் புனித பிறவிகள் பிறப்பதற்குமான நட்சத்திரமும் ஆன அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார்கள் தெய்வீக ஆத்மாவாக விருச்சிக ராசியில் பிறந்துள்ளார்கள், மேலும் லக்னாதிபதி சூரியனும் பூர்வபுண்ணியாதிபதி குரு கிரகமும் புத்திக்கு அதிபதி புதனும் பார்க்கும் சமயத்தில் சிறப்பாக சந்திரன் அமைய கிருஷணபட்ச பிரதமை திதியில் மஹாபெரியவா அவதரித்துள்ளார்கள்,  கிரகங்கள் நல்லவிதமாக அமைந்து பிரதமை திதியில் பிறந்தால் அவர்களுக்குண்டாக்கும் பலன்கள் பற்றி ஒரு ஜோதிட பாடல் உள்ளது அந்த பாடலின் பொருள் மஹாபெரியவா அவர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியது ஆகும் அந்த பாடல் என்னவென்றால் –

பிரதமை திதிக்கான பாடல் -

முதலாம் பிறைதனில் உதித்த பிறப்பானால் அறிவினை தேடும்

சுத்தவித்தை தேடும் கூர்மதிவுடையார் தனித்து நிற்கும்

பதமுடையார் ஆன்றோர் பற்றுள்ளவர் அன்புக்கும் அழகுக்கும்

மிதமதிப்பு வெளிப்படை போக்கு நிரந்தரத்தை தேடுவார்

சுதந்திர எண்ணம் மூளைபலத்தான்

 

....இதற்கு பிறகு பிரதமை திதியில் பிறந்து ஜாதக சுப கிரக பலமில்லாதவர்களுக்கு வரும் பலன்கள் வருகின்றன மஹாபெரியவா ஜாதகம் சுப கிரக பலம் பொருந்திய ஜாதகம் எனவே பிரதமை திதியில் பிறந்தால் வரும் சுப பலன்களாக இந்த பாடலில் சொல்லபட்ட பலன்களாவன

 

அறிவுக்கு முக்கியத்தவம் தருபவர், உயர்ந்த கலைகள் அல்லது இறைவனை சார்ந்த கலைகள் தத்துவங்களுக்கு முக்கியத்தவம் அதில் தனது கவனத்தை செலுத்துபவர், தனித்துவமாக நிற்கும் பக்குவமுடையவர், உயர்ந்த பண்புடையவர்களிடம் நாட்டம் உள்ளவர், அன்புக்கும் அழகுக்கும் அதிக மதிப்பு தருபவர், வெளிப்படையான (எளிமையான, கபடில்லாத) நடத்தை, நிரந்தரமான விஷயங்களில் நாட்டம், சுதந்திரமான எண்ணங்கள் கொண்டவர், மூளைபலமுடையவர், இந்த பலன்கள் நிறைவாக பெற்றவர் மஹாபெரியவா ஆகும்.

சுவாமிநாதன் என்ற பூர்வாசிரம பெயர் கொண்ட மஹாபெரியவா எந்தவித ஆசையும் இல்லாமல் மற்றும் நோக்கமும் இல்லாமல் எதிர்பாராத நிகழ்வுகளின் காரணமாக, சுவாமிநாதன் காஞ்சி காமகோடி பீடத்தை 1907 ஆம் ஆண்டு மாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற நாமத்துடன் 68 வது சந்நியாச ஆச்சார்யராக பொறுப்பை ஏற்றார் அப்போது அவருக்கு வயது 14 தான் அதாவது லக்னாதிபதியாகி கர்ம ஸ்தானத்தில் இருப்பு கொண்ட சூரியனின் அஸ்தங்க மறைவால் மறைவுற்று சூரியனின் சாரமே பெற்ற புதன் பகவானின் திசையில் பாக்கியாதிபதியான செவ்வாயின் புத்தியில் சந்நியாச ஆச்சார்யராக பொறுப்பை ஏற்கும் நிலை உண்டானது. லக்னாதிபதியாகி கர்ம ஸ்தானத்தில் இருப்பு கொண்ட சூரியனின் அஸ்தங்க மறைவால் மறைவுற்ற சூரியனின் சாரம் பெற்ற புதன் பகவானின் திசையில் பாக்கியாதிபதியான செவ்வாயின் புத்தியிலேயே தனது ஜென்ம கர்மாவான சந்நியாச தர்மத்தை ஆசைகள் முளைக்கும் வயதான 14 லிலேயே ஆசை எரித்து சந்நியாச தர்மத்திற்கு தன்னை சரியாக பொருத்து கொண்டவர் மஹாபெரியவா ஆகும்.

 

மஹாபெரியவா ஜாதகத்தில் இருக்கும் சந்நியாச யோகமானது குடும்ப வாழ்க்கைக்கு உண்டான கிரகமான குடும்ப கிரகத்தை ஆத்ம ஸ்தானாதிபதியான குருவுடன் இணைந்து லக்னாதிபதியான சூரியன் மறைத்து மோட்ச ஸ்தானாதிபதியான சந்திரனை பார்த்ததும், ஆத்ம ஸ்தானாதிபதியான குருவும் மோட்ச ஸ்தானாதிபதியான சந்திரனை பார்த்ததும்,

மேலும் இந்த சந்திரனுக்கு நீசபங்கராஜயோகமும் ஏற்பட்டுள்ளது இப்படி ஏற்பட்டுள்ள இது ஒரு வகை சந்நியாச யோகமாகும் இதற்கு பெயர் சூரிய அதிமத்ய அகாமாத்ம யோகம் ஆகும் இதன் பலன்கள் சுயநலமான ஆசைகள், காமம், உணர்ச்சி, விருப்பம் போன்றவை எரிக்கபட்டுவிட்ட அல்லது இழந்துபோன நிலை ஜீவன் ஆகும் இதனால் இவர்கள் சுயநலமற்ற ஞானியாக திகழ்வார்கள், மேலும் இத்துடன் காம கிரகங்கள் ஆன சனியும் சுக்கிரனும் ராகு மற்றும் கேதுவால் மறைவுற்று போனது இந்த சந்நியாச யோகத்திற்கு பலம் சேர்த்துள்ளது இந்த யோகத்தால் மஹாபெரியவா சுயநலமான ஆசைகள், காமம், உணர்ச்சி, விருப்பம் போன்றவை எரிக்கபட்டுவிட்ட அல்லது இழந்துபோன நிலையில் சுயநலமற்ற ஞானியாக திகழ்ந்தார்கள்.

68 வது சந்நியாச ஆச்சார்யராக பொறுப்பை ஏற்ற பிறகு தான் பாலகனான மஹாபெரியவா அவர்களுக்கு முறைபடி பண்டிதர்களால் வேதங்கள், புராணங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டது, மேலும் இந்து மத சாஸ்திர நூல்கள் மற்றும் பண்டைய இந்திய இலக்கியங்களில் நன்கு பயிற்சி பெற்றுக் கொள்ளவும் செய்தார், ஜாதகத்தில் தசவர்க்க சக்கரங்களில் பஞ்சாம்சம், சப்தாம்சம், அஷ்டாம்சம், துவாதம்சம், திரிம்சாம்சம் ஆகிய ஐந்து வர்க்கங்களில் குரு கிரகம் ஆட்சி அம்சத்தை அடைந்துள்ளதாலும் பர வித்தைக்கு அதிபதியான குரு பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாகி அபர வித்தைக்கு அதிபதியான புதனோடும் சேர்ந்து லக்னாதிபதியும் பொது ஆத்மகாரகனும் ஆன சூரியனை சேர்ந்து உள்ளதால் பர வித்தை மற்றும் அபர வித்தை என இரண்டிலும் நன்றாக பாடதேர்ச்சி அடைந்தார். அதென்ன பர வித்தை மற்றும் அபர வித்தை, பர வித்தை என்பது மிக உயர்ந்த உண்மையை மற்றும் தனது சுயத்தை அறிய உதவும் கல்வி, மெய்ஞானத்தை நோக்கி கூடிச் செல்லும் கல்வி ஆகியவை ஆகும் அதாவது ஆத்மா, பிரம்மம் பற்றியத. அபர வித்தை என்பது தர்ம சாஸ்திரங்கள், சடங்குகள், இலக்கணம், வானியல் என உலகமும் பொருட்களும்  பற்றியது சூரியன், புதன், குரு சேர்க்கை மற்றும் சந்திர பார்வை ஆகிய பலத்தால் இந்த இரண்டு வித்தை விஷயங்களிலும் நன்றாக பாடதேர்ச்சி அடைந்தார்.

 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

 

மஹாபெரியவா பர வித்தை மற்றும் அபர வித்தை என இரண்டிலும் நன்றாக பாடதேர்ச்சி அடைந்தாலும் அவற்றில் கொள்ள வேண்டியவைகளை கொண்டு நீக்கி வேண்டியவைகளை நீக்கி அதன் சாரமான தர்மத்தில், தவத்தில் மற்றும் ஆத்ம ஞானத்தில் நிலையாக நின்றார் திருவள்ளுவர் சொன்னது போல நிற்க அதற்குத் தக என நின்றார் சரி கற்றதற்கு பயன் என்ன?

 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

 

சத்சங்கம், பக்தி, பிரார்த்தனை, மந்திரங்கள் ஸ்தானமான 5 ஆம் ஸ்தானாதிபதியான குரு பகவான் லக்னாதிபதியான சூரியனுடன் சேர்ந்து மோட்ச ஸ்தானாதிபதியை பார்க்க மேலும் தியானம் மற்றும் தவத்திற்கு அதிபதியான 9 ஆம் ஸ்தானாதிபதியான லக்னத்திற்கு நேர் எதிரில் அமர்ந்து லக்னத்தை பார்க்க மேலும் குருவின் ராசிகளுக்கு 65 அஷ்டவர்க்க பலர்களை பெற்றுள்ளது மேலும் பக்தி, பிரார்த்தனை, மந்திரங்கள் விஷயங்களை காட்டும் பஞ்சாம்ச சக்கரத்தில் ராசி சக்கரத்தில் அமைந்தது போலவே சூரியனும் புதனும் சேர்ந்து அமைந்து அதில் புதன் உச்சமும் மேலும் அதற்கு எதிர் அம்சத்தில் குருவும் சந்திரனும் அமைந்து அதில் குரு ஆட்சி வீட்டிலும் இருக்கும் படியாக அமைந்துள்ளது இதனால்

 
 

காஞ்சி காமாட்சியின் மீது அளவற்ற பக்தியையும் அன்பையும் கொண்டிருந்தார் மேலும் காஞ்சி காமாட்சியின் மந்திரங்களை சதாகாலம் ஜெபிப்பவராகவும் இருந்தார் மஹாபெரியவா அவர்கள் கற்றதற்கு பயனான இறைவனின் திருத்தாளை தொழுது கொண்டே இருந்தார் அதாவது சந்திரமௌலீஸ்வரர் மற்றும் காமாட்சியின் திருவடியை சதாகாலம் வணங்கி வந்தார்.

பக்தியில் வெற்றி, தவத்தில் வெற்றி, ஞானத்தில் வெற்றி அடைந்த பின் அடுத்தது என்ன பணி அதாவது அடுத்தது என்ன கடமை தமது ஆதிகுருவான ஆதிசங்கரர் போல மஹாபெரியவாவும் இந்திய நாடு முழுவதும் நடை பயணங்களாக சென்று இந்துமத ஆன்மீக பொக்கிஷங்களை மற்றும் ஞானத்தை இந்திய நாடு முழுவதும் விருத்தியாக செய்ய உழைத்தார். எவ்வளவு பயணங்கள் சென்றாலும் தமது நித்திய பூஜைகள் மற்றும் மந்திரமொதுதல் போன்ற பக்தி நடைமுறைகள் அனைத்தையும் விடாமலேயே மேலே சொன்னது போல் இந்திய நாடு முழுவதும் நடை பயணங்களாக சென்று இந்துமத ஆன்மீக பொக்கிஷங்களை மற்றும் ஞானத்தை இந்திய நாடு முழுவதும் விருத்தியாக செய்ய உழைத்தார். செயல்காரியம், கடமை மற்றும் கர்மா இவற்றிற்கு அதிகார கிரகமான கர்மகாரகன் சுக்கிரன் உச்சம் பெற்று அமைந்து அதே சமயம் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்தால் இந்திய நாடு முழுவதும் நடந்து உழைத்து ஆன்மீத்தை நிலைபெற செய்தாலும் கர்மகாரகன் சுக்கிரன் மறைவிடத்தில் உச்சம் பெற்று உள்ளதால் தான் செய்த செயல்கள் அனைத்தையும் நான் செய்தேன் என்ற பற்று இல்லாமலேயே ஆன்ம உள்ளத்தோடு தன் பணிகளை செய்துள்ளார்கள். வாக்கு ஸ்தானத்தில் சனி மற்றும் கேது இணைந்து இருக்கும் விதமாக பிறப்பவர்கள் மெய்அறிவை தெளிவுபடுத்துதல், ஆன்மீக விஷயங்களை சரியாக சுட்டிக்காட்டுதல், மத நம்பிக்கைகள் மற்றும் ஜதீகங்களை தமது பேச்சால் வெளிப்படுத்துதல் போன்றவற்றில் சிறப்பானவர்கள் இந்த சிறப்புக்கள் முழுமையாக பெற்றவர்கள் மஹாபெரியவா ஆகும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "மஹாபெரியவா ஜாதகம் கணிப்பு, பரமாச்சாரியார் ஜாதக சிறப்புகள், Kanchi Mahaperiyava Horoscope in Tamil..."

கருத்துரையிடுக

Powered by Blogger