மிதுன, கன்னி லக்னத்தில் பிறந்தும் மற்றும் புதன் முக்கிய கிரகமாக அமைந்தும் பிறந்தவர்கள் உடல் & மன இயல்புகள்...
அகலமான கருசிவப்பான கண்கள்
கொண்டவர்கள், இனிமையாகப் பேசுவார்கள் மேலும் தனது பேச்சு தெளிவாகவும்
தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்பது கவனமுள்ளவர்கள் (who speak sweetly and who
are attentive to the fact that his speech should be clear and clean), வலுவான
தோல் அமையும், சத்துவ ராட்சத குணக் கலப்பு உள்ளவர்கள். இவர்களின் உடம்பு பிறக்கும்
போது வாதம், கபம், பித்தம் இம்மூன்றின் சம அளவில் அமையும். நகைச்சுவை உணர்வு நிறைய
உடையவர்கள். கற்றுக்கொள்வதில் அல்லது தனக்கு தெரியாததை தெரிந்து கொள்ள நினைப்பதில்
மிகுந்த மகிழ்ச்சியையும் ஆர்வத்தை காட்டுக் கூடியவர்கள் (Those who show great
pleasure and interest in learning or thinking to know.). மிதமான அழகுடன்
இருப்பார்கள். இவர்கள் திறமையானவர்கள் தான் ஆனால் பாப கிரக தொடர்பு இருந்தால்
பாபம் செய்யக்கூடியவர்கள் தான். எல்லாவகையான ஆடைகளையும் ஏற்றுக்
கொள்ளக்கூடியவர்கள் தான் இருந்தாலும் பச்சை அல்லது வெளிர் வண்ணத்தின் மீது
பிரியமுள்ளவர்கள். உத்திராயணத்திலும் தட்சிணாயணத்திலும் இரண்டும் பலமாகும் கிரகம்
புதன் அதனால் மிதுன, கன்னி லக்னத்தில் பிறந்தும் மற்றும் புதன் முக்கிய கிரகமாக
அமைந்தும் பிறந்தவர்கள் எல்லைக்குட்பட்டும் மற்றும் எல்லைகளை மீறியும் என
இரண்டுவிதமாகவும் மற்றவர்களிடம் பழக வாய்ப்பு உள்ளவர்கள். உபதேசிக்கும் மற்றும்
பயிற்றுவிக்கும் ஆற்றல் இருக்கலாம் (May have the power to preach and teach). உலக
அறிவு அல்லது விஞ்ஞான அறிவு மிக்கவர்கள். கணிதம் சார்ந்த விஷயங்களில் வல்லவர்கள்
(brilliant in mathematics related matters). எதாவது ஒரு கலையில் நிபுணத்துவம்
இருக்கலாம்.
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது
0 Response to "மிதுன, கன்னி லக்னத்தில் பிறந்தும் மற்றும் புதன் முக்கிய கிரகமாக அமைந்தும் பிறந்தவர்கள் உடல் & மன இயல"
கருத்துரையிடுக