ஜெயகாந்தன் எழுத்தாளர் ஜாதகம் கணிப்பு - Jayakanthan Writer Horoscope Tamil, இலக்கியத்திற்கான உயர்ந்த...
ஜெயகாந்தன் எழுத்தாளர் (Jayakanthan Writer Horoscope Tamil) ஜாதகம் கணிப்பு - இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற தமிழ் எழுத்தாளரும்…
இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற தமிழ் எழுத்தாளரும் மேலும் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் குறுநாவல்கள் என தமிழ் எழுத்துலகில் தன் நிரந்தர பதிப்பையும் மற்றும் தனக்கு உயர்ந்த மதிப்பையும் ஏற்படுத்தி கொண்ட சிறந்த படைப்பாளியும் ஆன எழுத்தாளர் ஜெயகாந்தன் ஜாதக சிறப்புகளை மற்றும் சில ஜோதிட அமைப்புகளை பார்க்கலாம்.
எழுத்தாளர்
ஜெயகாந்தன் உணர்ச்சிகளின் லக்னமான கடக லக்னத்தில் பிறந்தவர் அந்த லக்னாதிபதியான
மனித உணர்ச்சிகளின் அதிபதி சந்திர கிரகம் லக்னத்திற்கு 2 ஆம் வீடு ஆன வாக்கு ஸ்தானத்தில் மகிமையையும்
பெருமையையும் தனது அடையாளமாக வெளிப்படுத்தும் மகம் நட்சத்திரத்தில் அமர பிறந்தவர்,
மகம் ஜெகத்தை ஆளும் என்று பொதுவாக சொல்வார் அந்த மக நட்சத்திர ராசி அதிபதியும்
மேலும் லக்னத்திற்கு 2 ஆம் வீட்டின் அதிபதியும் ஆன சூரியன் அதி உச்சமாக அமைந்துள்ளார் இதனால்
உறவுகளின் உணர்ச்சிகள் அழுத்தமாக பதிக்கும் எழுத்தும் மேலும் கம்பீரம் குறையாத
பேச்சாற்றலும் கொண்டவராக திகழ்தார், வாக்கு மற்றும் வித்தை ஸ்தானத்தின் அதிபதி
கிரகமான ஆன சூரியன் கர்ம ஸ்தானத்தில் உச்சமாக அமைந்துள்ளது இதனால் உச்சமான
பேச்சாற்றலும் தன்னை சூழ்ந்துள்ள சமூகத்தின் மீது ஆளுமையான மற்றும் தனித்துவமான
பார்வையும் கொண்டவராக திகழ்ந்தார் மேலும் அதி உச்சமடைந்த சூரியனால் மிகவும் புகழ்
பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
ஒருவருக்கு எழுத்தாற்றல் நன்கு அமைய வேண்டுமென்றால் லக்னத்திற்கு 5 ஆம் வீடும் அதன் அதிபதி கிரகம் வலிமையாக அமைவது முக்கியமாகும் அந்தவகையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஜாதகத்தில் கடக லக்னத்திற்கு 5 ஆம் வீட்டின் அதிபதி அதாவது மந்திர தந்திர ஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் 10 ஆம் வீடான பிரயோக ஸ்தானம் அதாவது செயல்திறமையாக ஒன்றை வெளிபடுத்துவதை எடுத்துகாட்டும் 10 ஆம் வீட்டின் அதிபதியாகவும் செவ்வாயே அமைந்து அந்த 10 ஆம் வீட்டிலேயே ஆட்சி பெற்றுள்ளார் அதுவும் செயல்வேகம், செயல்திறம், தன்னம்பிக்கை, கர்வமான அல்லது வீம்பான நடத்தை போன்றவற்றிற்கு அதிகார ராசியான மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளார் இதனால் எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது எழுத்து தொழிலில் திறம் பெற்றவராகவும் தன்னம்பிக்கை மற்றும் கர்வமான அல்லது வீம்பான நடத்தைக்கு பேர் பெற்றவராகும் மேலும் 5 ஆம் வீட்டின் அதிபதி 10 ஆம் வீட்டிலேயே ஆட்சி பெற்றதால் எழுத்துப்பணியான பத்திரிக்கை துறையில் தான் இளம் வயதிஙல் தனது வாழ்க்கை பணியை தொடங்கினார் மேலும் அந்த எழுத்துப்பணியால் தமிழ் உலகறிய பெற்றார். அரசர்கள் அடிமைத் தொழில் செய்வதில்லை எனவே சூரியன் மற்றும் செவ்வாய் பத்தாம் வீட்டில் அமைந்ததால் எந்த விதமான மற்றவரிடம் சம்பளம் பெறும் ஏவல் பணிகள் பல பல செய்தும் அவரால் அதை நிரந்தரமாக செய்ய முடியவில்லை காரணம் அரச கிரகங்கள் வலுத்தால் அடிமைத் தொழில் செய்யவிடாது என்பது தான்.
எது ஒருவனை எழுத தூண்டுகிறது என்று பார்க்கும் போது ஒருவருக்குள் மிதம் மிஞ்சி எழுகின்ற அறிவுணர்ச்சி அந்த அறிவுணர்ச்சி அவர்களுக்கு பரந்த அளவில் இருக்கும் மேலும் அது ஒரு சம்பவத்தை மற்றவர் பார்க்கும் கோணத்திலும் பார்க்க முடியும் மற்றவர்கள் பார்க்காத கோணத்திலும் பார்க்க முடியும் இப்படி அறிவுத்தன்மை கிடைப்பது அது ஆண்டவனின் கிருபையால் தான் நிகழ்கிறது ஏனென்றால் படைபாற்றல் என்பது ஒருவர் சொல்லிக் கொடுப்பதன் மூலமாக மட்டும் தோன்றிவிடுவதல்ல. மேலும் நிறைய பரந்த அறிவாற்றல் பெற்றவர்கள் தான் எழுத முடியும் ஒன்று நிறைய புத்தகங்களை படித்திருந்து அதன் மூலமாக பரந்த அறிவாற்றல் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது நிறைய வாழ்க்கை அனுபவங்களை பெற்று அதன் மூலமாக பரந்த அறிவாற்றல் பெற்றவராக இருக்க வேண்டும் நிறைய புத்தகங்களை படித்திருந்து அதில் பரந்த அறிவாற்றல் பெற்றவராக இருக்க 4 ஆம் வீடும் சந்திரனும் பலம் பெற வேண்டும் அதே போல நிறைய வாழ்க்கை அனுபவங்களை பெற்று அதில் பரந்த அறிவாற்றல் மற்றும் அறிவு ஆழம் பெற்றவராக இருக்க 9 ஆம் வீடும் குருவும் பலம் பெற வேண்டும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஜாதகத்தில் 4 ஆம் வீடும் சந்திரனும் சற்று சுமாரான பலம் தான் அதனால் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பு அவருக்கு சரியாக அமையவில்லை ஆனால் 9 ஆம் வீடும் மற்றும் குரு கிரகமும் நன்கு பலத்துடன் அமைந்துள்ளார் அதாவது குரு கிரகம் 3 ஆம் வீட்டில் இருந்து தனது சொந்த வீடான 9 ஆம் வீட்டை 7ஆம் பார்வையாக பார்வை செய்யும் பலம் ஏற்பட்டுள்ளது மேலும் 9 ஆம் வீட்டதிபதி குரு கிரகத்திற்கும் 3 ஆம் வீட்டதிபதி புதன் கிரகத்திற்கும் பரிவர்த்தனை யோகம் ஏற்பட்டுள்ளது
இந்த வக்கிர குரு மற்றும் புதனின் பரிவர்த்தனை யோகத்தால் வித்தியாசமான பலன் உண்டாகும் அதாவது நடைமுறைப்படியுள்ளதில் முறைப்படியில்லாததை பார்க்கும் குணமும் அறிவும் முறைப்படியில்லாததில் முறைப்படியுள்ளதை பார்க்கும் குணமும் அறிவும் இவருக்கு தோன்றும், இப்படி ஏற்பட்ட பரிவர்த்தனை யோகம் உள் அறிவாற்றல் வெளி அறிவாற்றல் கிரகங்கள் ஆன குருவுக்கும் புதனும் ஆக அமைந்ததால் உறவுகளை சமுதாயத்தை மனிதத்தை அகம் புறம் என வித்தியாசமாக பார்க்கும் குணமும் அறிவும் ஏற்பட்டுள்ளது, இவரிடம் இருந்த இந்த திறம் ஏற்கெனவ பார்த்த எழுத்தாற்றல் திறனோடு சேர்ந்து உயரிய நாவல்களை படைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. இப்படிபட்ட புதன் நீசபங்க ராஜயோகத்தை குரு வீட்டில் அமைந்து அந்த குரு பகவானாலே பார்க்கபட்டதால் நீசபங்க ராஜயோகம கிடைத்தும் மேலும் இரு கிரகங்கள் தங்கள் தங்கள் சுய ராசியை பார்வை செய்வதால் வரும் பலமும் சேர்ந்து இவர் ஜாதகத்தில் அமைந்துள்ளது.
23 வயதிலேயே அதிஉச்ச பாகையில்
அமைந்த சூரியனின் திசா தொடங்கிவிட்டது அதாவது 1957
ஆம் ஆண்டில் உச்ச பெற்ற சூரிய திசையில் ஜெயகாந்தன் அவரது இலக்கிய வாழ்க்கையை
தொடங்கினார். பல்வேறு தினசரி மற்றும் மாத
நாளிதழ்களில் அவரது படைப்புகள் வெளியாயின மேலும் தனி நாவல்களாகவும் வெளிவந்தன. ஜெயகாந்தனின் முதல் நாவல் வாழ்க்கை அழைக்கிறது 1957 ஆம் ஆண்டில்
தான் வெளிவந்தது என்பது இவரது உச்ச பெற்ற சூரிய திசையின் பலத்தை அறியலாம் 1963 வரை
சூரிய திசை இருந்தது அதற்கு பிறகு வந்த ஆட்சி பெற்ற சூரியனின் ராசிக்குள் மகம்
நட்சத்திரத்தில் அமர்ந்து திசையை நடத்திய சந்திர திசையின் பத்து வருடம் இந்த
காலங்களில் தான் இவரது எழுத்தாளுமை பெற்ற படைப்புகள் வெளிவந்தன, இவரது
படைப்புகளனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவருக்குப் மேலும் மேலும் புகழும், அவரது
படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இதனால், அவர் தலைச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். அந்த புகழ் இவரது வாழ்வின் அந்திம காலம் வரை இருந்தது என்பது தான் இவரின்
சிறப்பு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
ஜோதிஷ் சிவதத்துவ சிவம் - எம்மிடம் உங்களின் சோதிட பலன்களை பெற நீங்கள் உங்களின் பிறந்த விவரங்கள்...
0 Response to "ஜெயகாந்தன் எழுத்தாளர் ஜாதகம் கணிப்பு - Jayakanthan Writer Horoscope Tamil, இலக்கியத்திற்கான உயர்ந்த..."
கருத்துரையிடுக