சூரிய கரும்புள்ளி, வியாழனின் சிவப்பு புள்ளி மற்றும் சனியின் வெள்ளைப் புள்ளி பற்றி பார்க்கலாம்...
சூரிய கரும்புள்ளி, வியாழனின் சிவப்பு புள்ளி மற்றும் சனியின் வெள்ளைப் புள்ளி பற்றி பார்க்கலாம்...
ஜோதிடத்திற்கும் இந்த கிரகங்களில் உள்ள தோற்றப் புள்ளிகளுக்கும் தொடர்புகள் உண்டு ஆனால் அந்த தொடர்பை பற்றிய விரிவான தகவல்கள் ஜோதிட நூல்களில் காணக்கிடைப்பதில்லை அரிதாகவே உள்ளது இருந்தாலும் வானவியல் கண்டுபிடிப்பின் படி இந்த தோற்றப் புள்ளிகள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம் : -
சூரிய கரும்புள்ளி -
சூரிய ஒளியின் வழியாகவே அனைத்து கோள்களின் இருப்பை உண்ர்கிறோம் அந்த சூரியன் ஒளிபிழம்பாக பல்லாயிரம் கதிர்களால் வெளிச்சத்தின் வெள்ளத்தை வானவெளியெங்கும் பாய்ச்சிக்கொண்டிருக்கிறது அந்த சூரியனின் மேல்சுற்றில் இருட்டாகத் தோன்றும் பகுதிகளை தான் சூரிய கரும்புள்ளி என்று வானிவியல் உலகம் அழைக்கிறது, இந்த சூரியகரும்புள்ளிகள் ஏன் ஏற்படுகின்றன என்று பார்க்கும் போது சூரியனின் மேற்பரப்பின் மற்ற பகுதிகளை விட வெப்ப மற்றும் ஒளி உமிழ்வு இந்த பகுதிகளில் குறைவாக இருக்கும் அதாவது மிக அதிகமான ஒளியை உமிழும் பகுதிக்குள் குறைந்த உமிழும் பகுதி இருந்தால் சுற்றி உள்ள அதிகமான ஒளியை உமிழ்வு நடுவில் உள்ள குறைந்த உமிழும் பகுதி இருண்ட தோற்றத்தை போலியாக அடையும் உண்மையில் சூரியப்புள்ளிகளின் வெப்பநிலை கிட்டத்தட்ட 2700 முதல் 4200 °C ஆக இருந்தாலும், இவற்றின் சுற்றுப்புறங்களில் அதிகமாக உள்ள வெப்பநிலை 5,500 °C மேலாக இருப்பதால் இவை கருமையாகத் தோன்றுகின்றன, இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும் போது சூரியனின் மேற்பரப்பில் திரளும் காந்தப்புலம் வலுவான காந்தப்புலமாக மாறி மிகுந்த காந்த அழுத்தத்தை சூரியனின் மேற்பரப்பில் உண்டாக்குகின்றன சூரியனின் மேற்பரப்பில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான செறிவடைந்த காந்த அழுத்தம் அங்கு உள்ளதால் அது சூரியனின் உட்புறத்திலிருந்து மேற்பரப்புக்கு எழுந்து வரும் வெப்பமான புதிய வீச்சை தடுக்கிறது அதனால் சுற்றுப்புறங்களுடன் ஒப்பிடும்போது அங்கு வெப்பநிலையைக் குறைக்கிறது இதனால் சூரியகரும்புள்ளி தோன்றுகிறது. இந்த சூரியகரும்புள்ளி உள்ள காந்தப்புலம் என்பது பூமியிலுள் காந்தப்புலத்தை விட 2,500 மடங்கு வலிமையானது எனவே மற்ற கோள்களிலும் இந்த காந்தபுலம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது நமது பூமியிலும் இது தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது . pratyātāpa (प्रत्याताप, ப்ரயாத்பா).
வியாழனின் சிவப்பு புள்ளி -
வியாழனின் சிவப்பு புள்ளி என்பது பூமியை விட இரண்டு மடங்கு அகலமுள்ள ஒரு பிரம்மாண்டமான புயலாகும் இது வியாழன் என்ற குரு கிரகத்தை அதன் தெற்கு அரைக்கோளத்தில் சுற்றி வருகிறது. இந்த புயலின் மையத்தில் காற்று ஒப்பீட்டளவில் அமைதியானது தான் ஆனால் அதன் விளிம்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 430-680 கிமீ அடையலாம் இது பூமியின் வலிமையான சூறாவளிகளின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். புயல் அதன் வடக்கே கிழக்கு நோக்கி நகரும் வளிமண்டல சுழலாகவும் மற்றும் அதன் தெற்கே மேற்கு நோக்கி நகரும் வளிமண்டல சுழலாகவும் உள்ளது, இது உருவாக காரணம் வியாழனின் நிகழும் சுழலும் பட்டைகள் காரணம் இப்படி உருவான் இந்த சிவப்பு புயல் நூற்றாண்டுகளுக்கும் மேலாக புயலாக சுழன்று கொண்டிருக்கின்றது. ஏன் இந்த புயல் அடங்கவில்லை என்று கேட்க படும் போது வியாழனுக்கு திடமான மேற்பரப்பு இல்லை என்பது தான் பதில் சூறாவளிகள் திடமான நிலத்தை அடையும் போது மெதுவாகின்றன அப்படி இல்லாத பட்சத்தில் புயல் மேலும் வலுவடைந்து சுழல்கின்றன ஆனால் இந்த புயலின் மேற்பரப்பு விரிந்து சுருங்கும் தன்மை கொண்டதாக உள்ளது, இந்த புயல் அம்மோனியா, அம்மோனியம் ஹைட்ரோசல்பைட் நீராவியால் ஆன மேக அடுக்குகளாக இருக்கலாம் இதுவே இதன் சிவப்பு நிறத்தின் ஆதாரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது, இந்த புயலின் உயர்ந்த மின்னாற்றலால் இந்த புயலுக்கு மேலே மிக உயர்ந்த வெப்பநிலை ஆற்றல் பெற்றிருக்க காரணமாவதாக கருதப்படுகிறது, இந்த வியாழனின் சிவப்புபுள்ளியை ஜோதிடத்தில் சிவப்பு கலங்கம் என்ற ஒரு வார்த்தையால் அழைக்கபடுவதை நான் வாசித்திருக்கிறேன்.
சனியின் வெள்ளைப் புள்ளி -
பிரகாசமான வெளிர் சிவப்பான சூரியனுக்குள் கரும்புள்ளி அமைந்தது போல் சாம்பல் நிறமான சனி கிரகத்தில் வெள்ளைநிறத்தில் காணப்படுவதை சனியின் பெரிய வெள்ளைப் புள்ளி என்று அழைக்கிறார்கள், இது ஒவ்வொரு 20 அல்லது 30 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியை விட பெரிய ஒரு புயல் சனியின் மேற்பரப்பு வளிமண்டலத்தில் பெரிய இடிகளுடன் கூடிய மழை மற்றும் தீவிர மின்னல் மற்றும் பெரிய மேகக் கலக்கங்களை உருவாக்குகிறது இது பிரமாண்டமான சுழலாக சனியின் மேற்பரப்பில் சுற்றும் இதை தான் "பெரிய வெள்ளை புள்ளிகள்" என்று அழைக்கப்படுகின்றனர், இதுவும் வியாழனின் பெரிய சிவப்பு புள்ளிக்கு ஒப்பானது தான் ஆனால் வியாழனின் சிவப்பு புயலானது மையத்தில் அமைதியாகவும் மேற்பரப்பில் மின்னல் இல்லாத்தாக இருக்கும் சனியின் இந்த வெள்ளை புயலோ மையத்தில் வலுவானதாக உள்ளன மற்றும் நீண்ட வால்களைக் கொண்டு அமைந்து சனி கிரகத்தை தண்ணீரில் மிதக்கும் எண்ணெயைப் போல வலம் வருகின்றன, சனியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கி மிகவும் சாய்ந்திருக்கும் போது பெரிய வெள்ளை புயல்கள் ஏற்படுகின்றன. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்துடன் கூடிய பெரிய வாயுக் கோளான சனியில் இத்தகைய வாயுக்களின் குளிரூட்டல் மற்றும் அடக்கப்பட்ட வெப்பச்சலனத்தால் சூடான ஈரமான காற்று விரைவாக உயர்ந்து இடியுடன் கூடிய மழையைத் தூண்டுகிறது. இந்த புயல் மிகப் பெரியதாகும் சுமார் 11,000 மைல்கள் (17,000 கிலோமீட்டர்) பரப்பளவில் வடக்கு-தெற்கு ஆக அலை அலையான கட்டமைப்பாக வலம் வரும், மேலும் சனி மிகப்பெரிய வளிமண்டலத்தைக் கொண்டிருப்பதால் குளிரூட்டல் மற்றும் அடக்கப்பட்ட வெப்பச்சலனத்தால் சூடான ஈரமான காற்று புயலாக மாற பல ஆண்டுகள் எடுக்கும் மேலும் இந்த பெரிய வெள்ளை புயலும் பல ஆண்டுகள் சனி வளிமண்டலத்தில் சஞ்சாரம் செய்யும்.
0 Response to "சூரிய கரும்புள்ளி, வியாழனின் சிவப்பு புள்ளி மற்றும் சனியின் வெள்ளைப் புள்ளி பற்றி பார்க்கலாம்..."
கருத்துரையிடுக