12 ராசிகளின் எதிர் எதிர் துருவமுனை எத்தகைய வித்தியாசமான பண்புகளை அல்லது தன்மையை வெளிப்படுத்துகின்றன…

12 ராசிகளின் எதிர் எதிர் துருவமுனை எத்தகைய வித்தியாசமான பண்புகளை அல்லது தன்மையை வெளிப்படுத்துகின்றன…

 

பன்னிரண்டு ராசிகளும் ராசி துருவமுனை அடிப்படையில்  ஆறு ஆறு துருவ எதிர்முனைகளாக பிரிக்கபடுகின்றன முதல் ஆறு துருவ முனை ராசிகளுக்கு அடுத்த ஆறு துருவ முனை ராசிகளுக்கு எதிர் முனை ஆகும் இந்த வகையில் மேஷ ராசிக்கு துலாம் ராசி எதிர் துருவ முனை ராசியாகும் இந்த அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் பண்புகளை அல்லது தன்மையை வெளிபடுத்துகின்றன அந்த ராசிக்கு எதிர்முனை ராசி எதிர் பண்புகளை அல்லது தன்மையை வெளிப்படுத்துகின்றன, இந்த பதிவில் ஒவ்வொரு ராசியும் எத்தகைய அடையாளத்தை அல்லது தன்மையை வெளிபடுத்துகின்றன அந்த ராசிக்கு எதிர்முனை ராசி எத்தகைய எதிர் அடையாளத்தை அல்லது தன்மையை வெளிப்படுத்துகின்றன என்பதை சுருக்கமாக பார்க்கலாம் இது ஆர்வத்தை விருப்பத்தை தூண்டக்கூடிய பதிவு ஆகும்.

 

துருவமுனை

எதிர் துருவமுனை

மேஷ ராசி தனி ஆளுமை, சுய அடையாளம், சுய சிந்தனை, செயல் வேகத்தில் ஆர்வம் கொண்டது

துலாம் ராசியோ கூட்டு ஆளுமை, சார்பு அடையாளம், கலந்த சிந்திக்கும் அணுகுமுறை, செயலில் நிதானம் கொண்டது.

ரிஷப ராசி தனிப்பட்ட உடைமைகள் மற்றும் பந்தபட்ட உடைமைகள், தனிப்பட்ட பணம் மற்றும் பந்தபட்ட பணம், நேர்முகமான வீரம், உழைப்பு போன்றவற்றின் வெளிப்பாடு.

விருச்சிக ராசியோ மரபு வழி மற்றும் பகிரப்பட்ட உடைமைகள், வெளியேற்றபட்ட பணம் மற்றும் பந்தப்படாத பணம், மறைமுகமான வீரம், ஓய்வு போன்றவற்றின் வெளிப்பாடு.

மிதுன ராசி ஒருவரின் தனிபட்ட எண்ணங்கள் அல்லது தனிபட்ட உணர்வுகள், எதார்த்த நடவடிக்கைகள், விஞ்ஞானம் போன்றவற்றின் வெளிப்பாடு.

தனுசு ராசியோ சமூதாயத்தின் முறைபடுத்தபட்ட கருத்துக்கள் அல்லது ஒழுங்குபடுத்தபட்ட உணர்வுகள், உயர்ந்த நடவடிக்கைகள், மெய்ஞானம் போன்றவற்றின் வெளிப்பாடு.

கடக ராசி வீட்டு வாழ்க்கை, தன் நலம் மற்றும் குடும்ப நலம், கட்டமைக்கபட்ட கல்வி போன்றவற்றின் வெளிப்பாடு.

மகர ராசியோ பொது வாழ்க்கை, சமூக நலம்,  உலக கல்வி போன்றவற்றின் வெளிப்பாடு.

சிம்ம ராசி தனிபட்ட லட்சியம், பாரம்பரியத்தின் டையாளம், தன்னம்பிக்கை, சுய மரியாதை போன்றவற்றின் வெளிப்பாடு.

கும்ப ராசியோ பரந்த லட்சியம், புதுமையின் அடையாளம், சமூக நம்பிக்கை, பொது மரியாதை போன்றவற்றின் வெளிப்பாடு.

கன்னி ராசி இளமையான, சிற்றின்பம், விளையாட்டு, உற்சாகம், கண்டுபிடிப்பு போன்றவற்றின் வெளிப்பாடு.

மீன ராசியோ பக்குவமான, பேரின்பம், பொறுப்பு, நிதானம், தன்னிறைவு போன்றவற்றின் வெளிப்பாடு.

 

0 Response to "12 ராசிகளின் எதிர் எதிர் துருவமுனை எத்தகைய வித்தியாசமான பண்புகளை அல்லது தன்மையை வெளிப்படுத்துகின்றன…"

கருத்துரையிடுக

Powered by Blogger