ஜாதக பரிசாதம் நூல் கூறக்கூடிய பன்னிரெண்டு ராசிகளுக்கான நிலப்பிரிவுகள்...
ஜாதகத்தில் லக்னத்திற்கு 6,8,12 ஆம் வீடுகளில் எந்த எந்த கிரகங்கள் இருக்க சுப பலன்களை தரலாம்...
மீன இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…
இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரப்பட்டு வருகிறது அதில் இந்த முறை -
இந்த மீன இராசி ஜோடி மீனை போலிருக்கிற அடையத்தை கொண்டிருக்கும் ராசி
அதில் ஒரு மீன் இன்னொரு மீனின் தலை வாலை தொட்டது போல் அமைந்திருக்கும்
இது இரவில் வலிமையாகும் ராசி மற்றும் நீர்த்தன்மையை பிரதிநிதித்துவ படுத்தும் இராசி
இது சாத்வீக குணத்தை பிரதானமாக கொண்ட ராசி
இது காலற்றது மற்றும் நடுத்தர கட்டமைப்பைக் கொண்டுள்ள ராசி
இது திடமான உறுதியான ராசி ஆகும் அகண்ட நீரை தாங்கியுள்ள ராசி
இது வடக்கு திசையை சார்ந்த இராசி
இது தலை மற்றும் பின்புறம் இரண்டிலிருந்தும் உதயமாகும் ராசி
இது குரு கிரகத்தை ஆட்சியாளராக கொண்ட ராசி
- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்
அரசனாக அல்லது கோடீஸ்வரனாக ஆவதற்கான ஒரு ஜாதக விதியும் பலனும்.... - ஜோதிட துணுக்குகள் பகுதி...
பழைய நூல் ஒன்றில் குறிப்பிட்ட ஒரு ஜோதிட விதியை தான் இப்போது பார்க்க இருக்கிறோம் இந்த விதி ஒருவர் அரசனாக அல்லது கோடீஸ்வரனாக ஆவதற்கான விதியாக அந்த நூலில் சொல்லபட்டிருக்கிறது அதாவது விதி என்னவென்றால் ஒருவர் நடு மதியமான நேரத்தில் பிறந்திருந்தாலோ அல்லது நடு இரவில் இருந்து 2 நாழிகைக்குள் பிறந்து இருந்தாலோ பின் அந்த ஜாதகரின் ராசி சக்கரத்தில் லக்னத்திற்கு 2, 5, 9, 10 வீட்டிற்கு அதிபதி கிரகங்களில் யாரேனும் இரு கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சத்தில் இருந்தால் அந்த ஜாதகர் அரசனாவார் தன்னுடைய சத்ருக்களை ஜெயித்து கீர்த்தி பெற்றவனாகவும் தேவபக்தியுள்ளவனாகவும் வித்தியாவந்தனாகவும் ஆவார் மேல் கூறிய ஜாதக அமைப்பில் பிறந்து லக்னத்திற்கு 2, 5 வீட்டிற்கு அதிபதி கிரகங்களில் யாரேனும் ஒரு கிரகம் ஆட்சி அல்லது உச்சத்தில் இருந்தால் கூட கோடீஸ்வர பிரபுவாவன் என்று அந்த நூல் எடுத்து இயம்புகிறது அதாவது...
சனி ஓரை நடக்கும் சமயம் சனி முதன்மையாக ஆதிக்கம் செலுத்து விவகாரங்கள், சனி ஹோரை...
12 ராசிகளின் எதிர் எதிர் துருவமுனை எத்தகைய வித்தியாசமான பண்புகளை அல்லது தன்மையை வெளிப்படுத்துகின்றன…
பன்னிரண்டு ராசிகளும் ராசி துருவமுனை அடிப்படையில் ஆறு ஆறு துருவ எதிர்முனைகளாக பிரிக்கபடுகின்றன முதல் ஆறு துருவ முனை ராசிகளுக்கு அடுத்த ஆறு துருவ முனை ராசிகளுக்கு எதிர் முனை ஆகும் இந்த வகையில் மேஷ ராசிக்கு துலாம் ராசி எதிர் துருவ முனை ராசியாகும் இந்த அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் பண்புகளை அல்லது தன்மையை வெளிபடுத்துகின்றன அந்த ராசிக்கு எதிர்முனை ராசி எதிர் பண்புகளை அல்லது தன்மையை வெளிப்படுத்துகின்றன, இந்த பதிவில் ஒவ்வொரு ராசியும் எத்தகைய அடையாளத்தை அல்லது தன்மையை வெளிபடுத்துகின்றன அந்த ராசிக்கு எதிர்முனை ராசி எத்தகைய எதிர் அடையாளத்தை அல்லது தன்மையை வெளிப்படுத்துகின்றன என்பதை சுருக்கமாக பார்க்கலாம் இது ஆர்வத்தை விருப்பத்தை தூண்டக்கூடிய பதிவு ஆகும்.
துருவமுனை |
எதிர் துருவமுனை |
மேஷ ராசி தனி ஆளுமை, சுய அடையாளம், சுய சிந்தனை, செயல் வேகத்தில் ஆர்வம் கொண்டது
|
துலாம் ராசியோ கூட்டு ஆளுமை, சார்பு அடையாளம், கலந்த சிந்திக்கும் அணுகுமுறை, செயலில் நிதானம் கொண்டது.
|
ரிஷப ராசி தனிப்பட்ட உடைமைகள் மற்றும் பந்தபட்ட உடைமைகள், தனிப்பட்ட பணம் மற்றும் பந்தபட்ட பணம், நேர்முகமான வீரம், உழைப்பு போன்றவற்றின் வெளிப்பாடு.
|
விருச்சிக ராசியோ மரபு வழி மற்றும் பகிரப்பட்ட உடைமைகள், வெளியேற்றபட்ட பணம் மற்றும் பந்தப்படாத பணம், மறைமுகமான வீரம், ஓய்வு போன்றவற்றின் வெளிப்பாடு.
|
மிதுன ராசி ஒருவரின் தனிபட்ட எண்ணங்கள் அல்லது தனிபட்ட உணர்வுகள், எதார்த்த நடவடிக்கைகள், விஞ்ஞானம் போன்றவற்றின் வெளிப்பாடு.
|
தனுசு ராசியோ சமூதாயத்தின் முறைபடுத்தபட்ட கருத்துக்கள் அல்லது ஒழுங்குபடுத்தபட்ட உணர்வுகள், உயர்ந்த நடவடிக்கைகள், மெய்ஞானம் போன்றவற்றின் வெளிப்பாடு.
|
கடக ராசி வீட்டு வாழ்க்கை, தன் நலம் மற்றும் குடும்ப நலம், கட்டமைக்கபட்ட கல்வி போன்றவற்றின் வெளிப்பாடு.
|
மகர ராசியோ பொது வாழ்க்கை, சமூக நலம், உலக கல்வி போன்றவற்றின் வெளிப்பாடு.
|
சிம்ம ராசி தனிபட்ட லட்சியம், பாரம்பரியத்தின் அடையாளம், தன்னம்பிக்கை, சுய மரியாதை போன்றவற்றின் வெளிப்பாடு.
|
கும்ப ராசியோ பரந்த லட்சியம், புதுமையின் அடையாளம், சமூக நம்பிக்கை, பொது மரியாதை போன்றவற்றின் வெளிப்பாடு.
|
கன்னி ராசி இளமையான, சிற்றின்பம், விளையாட்டு, உற்சாகம், கண்டுபிடிப்பு போன்றவற்றின் வெளிப்பாடு.
|
மீன ராசியோ பக்குவமான, பேரின்பம், பொறுப்பு, நிதானம், தன்னிறைவு போன்றவற்றின் வெளிப்பாடு.
|
கும்ப இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…
இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரப்பட்டு வருகிறது அதில் இந்த முறை -
இந்த கும்ப இராசி நீருடன் உள்ள பானையை கையில் ஏந்திய மனிதனை அடையமாக கொண்டிருக்கும் ராசி
இது அடர் பழுப்பு நிறத்தை பிரதிபலிக்கும் மற்றும் நடுத்தர உடல் கட்டமைப்பு கொண்டது
இது இரண்டு கால் ராசியாகும் பகல் நேரத்தில் வலுவாகும் இராசி ஆகும்
இது தாழ்வில் உள்ள நீரையும் மற்றும் காற்றுத் தன்மையும் பிரதிபலிக்கும் ராசி
இது தமஸ (தமோ) குணத்தை பிரதானமாக கொண்ட ராசி
இது அடித்தள தொழிலாளர் இராசி மற்றும் தலையில் இருந்து உதயமாகும் ராசி
இது மேற்கு திசையை சார்ந்த இராசி சூரியனின் சந்ததியான சனி கிரகத்தை ஆட்சியாளராக கொண்ட ராசி
- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்
குலதெய்வ குற்றம், குல சாபம், குல தெய்வ ஆலய மறத்தல் மறைந்து போதல் பற்றிய ஜோதிடம் கூறும்... -Part 1
ஒருவருடைய ஜாதகத்தில் குலதெய்வ குற்றம், குல சாபம், குலதெய்வ கோபம், குல தெய்வ ஆலய மறத்தல் அல்லது மறைந்து போதல் போன்ற பாதிப்புகள் உண்டாவதற்க்கான ஜாதக விதிகள் சிலவற்றை பார்க்கலாம், பொதுவாக இந்த குலதெய்வ குற்றம், குல சாபம், குலதெய்வ கோபம், குல தெய்வ ஆலய மறத்தல் அல்லது மறைந்து போதல், குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பது போன்றவற்றால் ஒரு தனிமனித ஜாதகமும் மற்றும் ஒரு குடும்பமும் அடையக் கூடிய சிரமங்கள் அதிகம் என்று பெரும்பாலான மக்களால் காணப்படுகிறது இது போன்ற நிலைமையை எத்தகைய ஜாதக பாதிப்புகளால் உண்டாகிறது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம் -