மாந்தி 12 ல் இருக்க பலன்கள், Mandi in 12th house in Tamil, மாந்தி 12 ஆம் வீட்டில் அமர வரும் பொது பலன்கள்...

மாந்தி 12 ல் இருக்க பலன்கள், Mandi in 12th house in Tamil, மாந்தி 12 ஆம் வீட்டில் அமர வரும் பொது பலன்கள்...

 
 
மாந்தி 12 ல் இருந்தால் - பாப கிரகமான மாந்தி 12 ஆம் வீட்டில் இருந்து அந்த மாந்தியை சுப கிரகங்கள் பார்த்தால் தூக்கம் நல்லவிதமாக வரும் தன்னை மறந்து நன்கு தூங்குவார், கணக்கிட்டதை விட அதிக படியான லாபங்கள் வரலாம், செலவுகளை சுருக்கமாக செய்வார்கள் அதாவது செலவுகளை யோசித்து யோசித்து தான் செய்வார்கள் , வீண் அலைச்சல்கள் குறையும் இதெல்லாம் சுப பலன்கள் ஆகும், மரணத்தால் உண்டாகும் செலவுகள் அல்லது நோய்களினால் உண்டாகும் செலவுகள் அதிகமாக இருக்கலாம், மகான்கள் மற்றும் குருமார்களை சந்திக்க நிறைய தடைகள் வரலாம், அதே போல புனித கோயில்கள் செல்லவும் தடைகள் வரலாம், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கடைசி நேரத்தில் சில சிரமங்கள் வரலாம், வாயுத் தொல்லைகள் அடிக்கடி உடலுக்கு வரலாம், தான தர்மங்கள் புண்ணிய காரியங்களுக்காக செலவு செய்ய எண்ணியிருந்த காரியங்ளை மற்றும் குலதெய்வத்திற்குகாக வேண்டி இருந்த நேர்த்தி கடன்களை மறந்து போகும் படி மாந்தி செய்வார் இதன் மூலமாக தோஷத்தை உண்டாக்குவார், தரித்திரத்தை உண்டாக்க கூடிய சில பல பழக்கவழக்கங்கள் தோன்றலாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பித்ருக்களுக்கு அதாவது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ருகடன்களையும் மறந்து போகும் படி மாந்தி செய்லாம், மேலும் தொழிலில் வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க வேண்டிய காலத்தில் பலவீனமான அல்லது மந்த நிலைக்கு இந்த ஜாதகர்களை மாற்றும் பலன்களை மாந்தி 12ல் இருந்தால் செய்யலாம், அத்தியாவசிய பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்துவார், கவனிக்காமல் அசிரத்தையாக விற்பனை பணியில் ஈடுபடுபவர்களுக்கு நஷ்டத்தை உண்டு பண்ணுவார், அசாதரணமான கனவுகள் தோன்றலாம், சிலருக்கு அமானுஷ்ய தொடர்புகள் கூட தோன்றலாம். மிச்சமான அல்லது பயன் முடிந்து போன பொருட்களை கொண்டு வரவு செலவுகளை அல்லது கொடுக்கல் வாங்கல்களை செய்லாம்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "மாந்தி 12 ல் இருக்க பலன்கள், Mandi in 12th house in Tamil, மாந்தி 12 ஆம் வீட்டில் அமர வரும் பொது பலன்கள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger