உத்திராடம் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தி அடியார்கள் & மகான்கள்...

உத்திராடம் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தி அடியார்கள் & மகான்கள்...

நட்சத்திரம் - உத்திராடம் உத்திராடம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தின் அதிதேவதை - விஸ்வதேவன் உத்திராடம் நட்சத்திரத்தின் யோனி - கீரி உத்திராடம் நட்சத்திரத்தின் கணம் - மானுஷ கணம் உத்திராடம் நட்சத்திரத்தின் பூதம் - ஆகாயம் (விண்) உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - தனுசு விண்மீன் மண்டலத்தில் முதல் பாதமும் பின் மகர ராசி மற்ற மூன்று பாதங்களும் கொண்ட 8 நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக யானையின் துதிக்கை போல் அமைந்துள்ளதாக இந்த நட்சத்திர மண்டலம் உள்ளது. உத்திராடம் நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - தனுசு ராசியின் பாகை 266:40:00 முதல் மகர ராசிக்குள் பாகை 280:00:00 கலை வரை இந்த நட்சத்திரத்தின் இருப்பாக உள்ளது. உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - குரு பகவான், சனி பகவான்   சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு உத்திராடம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம ராசி உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியாகும் உத்திராடம் நட்சத்திரத்தின் 2,3,4 பாதங்கள் மகர ராசியாகும். சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையாக ஜோதிட சாஸ்திரத்தால் அழைக்கப்பட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை தெரிந்து கொள்ள சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.   உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் - 


 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

 

கடகம் & கன்னி, கடகம் vs கன்னி - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…


 கடகம் & கன்னி, கடகம் vs கன்னி - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

கடகம் & கன்னி, கடகம் vs கன்னி -

 

இந்த இரு கடகம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது தனது குறிகோளை மற்றும் உணர்ச்சியை அதிகம் நம்பும் இரண்டு ராசிகாரர்களின் கூட்டு ஆகும் (Both are emotion-oriented and goal-oriented persons). ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றவர்களாக இருந்தால் நல்ல நண்பர்களாக மற்றும் காதலர்களாக இருக்க வாய்ப்புண்டு இருந்தாலும் இருவருக்கும் நல்ல நோக்கமும் இருக்க வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்களிடம் உள்ள வாழ்க்கை பற்றிய அக்கறை மற்றும் சொந்தபந்தங்கள் மீது ஆசை போன்ற குணங்களால் கவரப்படுவார்கள், கடக ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களிடம் உள்ள ஒத்துப்போகும் பண்பு மற்றும் புதுமை நாட்டம் போன்ற குணங்களால் கவரப்படுவார்கள். இது நட்பு ஆனாலும் அல்லது காதல் ஆனாலும் வளர நேரம் நிறைய எடுக்கலாம். இருவரும் பொது அறிவு மற்றும் அதிக நம்பிக்கைகள் கொண்டவர்கள் அதே சமயம் பொருள்சார்ந்தவர்கள்.

 

எடுக்கும் முயற்சிகளுக்காக கடினமாக உழைக்க இந்த நண்பர்கள் தயாராக இருப்பார்கள் ஆனால் பொருள்சார்ந்தவர்களாக இருப்பதால் பொருளாதார பேதம் அதிகமாக உருவானால் அது நட்பை பாதிக்கலாம் அதே போல இந்த இரண்டு ராசிக்காரர்களும் காதலர்களாக இருந்தால் இருவரும் அதிக அன்பாக பழகுவார்கள் ஆனால் தனிப்பட்ட தாக்குதல் ஒருவருக்கொருவர் புரிந்தால் காதலை பாதிக்கலாம். சுகத்தையும் மற்றும் சேவையையும் விரும்பக்கூடியவர்கள் பழக கூடிய கன்னி ராசி நண்பர்களிடம் அதை எதிர்பார்பார்கள் கடக ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களிடம் அந்த எதிர்பார்பை பூர்த்தி செய்து கொடுக்ககூடிய இளமையான மனம் இருக்கும் எனவே இந்த இரண்டு ராசிக்காரர்களிடம் இந்த அம்சம் நன்றாக பொருந்தி வரும்.

 

கடக ராசிக்காரர் இராசிநாதன் சந்திரன் ஆகும் கன்னி ராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் இந்த கிரகங்கள் தங்களுக்கிடையே நட்பு சமம் உறவில் இருக்கும் கிரகங்கள் உறவுக்கார கிரகங்கள் எனவே சந்திரன் அன்பு, பாசம், அக்கறை, ஆதரவுக்கான தலைமை பெண் கிரகம் ஆகும் புதன் என்பது தகவல்தொடர்பு, அறிவார்ந்த அணுகுமுறையைக் கொண்டுள்ள கிரகம். நண்பர் அல்லது காதலர் இணைவதால் கருணையும் கண்டிப்பு ஏக்கமும் கூடிய பாச நேசத் துடிப்புகள் அதிகம் உள்ளதாக இவர்களின் உறவு இருக்கும். ஒருவருக்கொருவர் மற்றவர்களைப் எண்ணத்தை படிப்பதில் ஆர்வமும் திறமையானவர்கள். இந்த இரண்டு ராசிகாரர்களுக்கிடையே சேர உருவாக கூடிய தவறான குணம் பிடிவாதமும் மிக உணர்ச்சிவசப்பட்டவர்களாக  இருப்பது இந்த இரண்டும் இவர்களின் நட்பை மற்றும் காதலை பாதிக்க கூடியது.

 

கடகம் ஒரு நீர்த்தன்மை இராசியாகும் கன்னி ஒரு நிலத்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது இரு ராசிக்காரர்களும் உடைமைகளை சொத்துகளை அதிகமாக பாதுகாக்க சிந்திப்பவர்கள், அதே போல இருவருமே பிரச்சனைகளை அமைதியான வழியில் தீர்க்க நினைப்பார்கள். செழிப்புக்கான அபிலாஷைகளை உள்ளவர்கள் எனவே வசதி வாய்ப்புகளுக்கு மாறுபாடான ஆசை வரும் போது இரண்டு பேரின் நட்பும் மாறுபாடும். ஆடம்பரமான எண்ணங்கள் தோன்றினாலும் இவர்களின் பந்தத்திற்கு பிளவுகள் தோன்றலாம். நீர் அதிகமாகி நிலம் குறைந்தால் இழப்பு தான் நிலம் அதிகமாக தோன்றி நீர் குன்றினாலும் வறட்சி தான் அது போல இவர்கள் இருவரின் இடையே தோன்றும் நட்பு ஆனாலும் அல்லது காதல் ஆனாலும் அது ஒருவருகொருவர் கட்டுபாடோ அவர் அவர் அளவறிந்து நடந்து கொண்டால் இனிக்கும் இல்லையோன்றால் கசக்கும்.

 

கடகம் ஒரு சர இராசியாகும் ன்னி ஒரு உபய இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது கன்னி ராசிக்காரர்கள் புதிய யோசனைகளை முன்வைக்க முனைகையில் கடக ராசிக்காரர்கள் அதை முதலில் ஏற்று கொண்டு செயல்படுவார்கள் ஆனால் குறிப்பிட்ட காலம் கழித்து ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு செல்ல விரும்புவார்கள் அதன் காரணமாக எதிலும் பொறுமை வேண்டும். காதலர்களாக இருக்கும் போது இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒருவர் மூளைக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார் மற்றொருவர் இருதயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார் இந்த வேறுபாடுகளை உணர்ந்து பழகி வந்தால் இந்த இரண்டு ராசிகாரர்களுக்கிடையே உள்ள பந்தம் சிறப்பானதாக அமையும். பரஸ்பர நலன்கள் கொண்டவர்களாக இருந்தால் மிகவும் இணக்கமான நட்பை உருவாக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

 

 


ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 28 to 32 பாடல்கள் பகுதி – 5

Ramana Maharshi’s Arunachala Aksharamanamalai Tamil Commentary Part - 5 ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 28 to 32 பாடல்கள் பகுதி – 5


28. சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவாயான்
     சாந்தமாய்ப் போவன் அருணாசலா! (அ)

29. சித்தங் குளிரக்கதிர் அத்தம்வைத்து அமுத
     வாயைத்திற அருண்மதி அருணாசலா! (அ)

30. சீரை அழித்து நிர்வாணமாச் செய்துஅருள்
     சீரை அளித்தருள் அருணாசலா! (அ)

31. சுகக்கடல் பொங்கச் சொல்லுணர்வு அடங்கச்
     சும்மா பொருந்திடுஅங்கு அருணாசலா! (அ)

32. சூதுசெய்து என்னைச் சோதியாது இனிஉன்
     சோதி உருக்காட்டு அருணாசலா! (அ)
Tamil Commentary - ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 

ஜோதிடமும் மருத்துவமும் - ராகு கேதுக்களின் முக்கியத்துவம் மற்றும் நவதுவாரங்கள் மருத்துவ விளக்கம்...

ஜோதிடமும் மருத்துவமும் - ராகு கேதுக்களின் முக்கியத்துவம் மற்றும் நவதுவாரங்கள் மருத்துவ விளக்கம்...

 

 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


தனுசு இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…


 தனுசு இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

 

தனுசு இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

 

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டு வருகிறது அதில் இந்த முறை -

 

இந்த தனுசு இராசி தலையில் இருந்து உதயமாகும் ராசி (முகப்பிலிருந்து உயரும் ராசி அதாவது முன்புறத்திலிருந்து அந்த ராசி உதயமாகும் rising in front, rising in upper part, rising at top)

இந்த தனுசு இராசி குரு கிரகத்தின் ஆட்சியாளராக கொண்ட ராசி

இது சாத்வீக குணங்களும் பழுப்பு மஞ்சலான நிறமும் கொண்ட ராசி

இது இரவில் வலிமை கொண்டு அதே சமயம் நெருப்பு கொண்டு எரியும் கொண்ட ராசி

இது இராஜாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தும் இராசி

இதில் தனுசு முதல் பாதி இரண்டு கால் ராசியாகவும் பிற்பாதி நான்கு கால் ராசியாகவும்

இது கிழக்கு திசையை சார்ந்த இராசி தரையில் இருந்து பிரகாசமான ராசி

இது சமமாக கட்டமைந்து பின் வளைந்து வில் போல் அமைந்த ராசி

- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்

 


சந்திரன் 10ல் பத்தாம் இடத்தில் இருந்தால், சந்திரன் 10ஆம் வீட்டில் அமர்ந்தால் அடிப்படை பலன்கள், Moon Chandran in 10th house in Tamil...


 சந்திரன் 10ல் பத்தாம் இடத்தில் இருந்தால், சந்திரன் 10ஆம் வீட்டில் அமர்ந்தால் அடிப்படை பலன்கள், Moon Chandran in 10th house in Tamil...

 


ஜோதிட துணக்குகள் - பிறந்த ஜன்ம ராசி கோச்சாரத்தில் நடக்கும் சமயம் இந்த இந்த காரியங்களை செய்யலாம்....

ஜோதிட துணக்குகள் - பிறந்த ஜன்ம ராசி கோச்சாரத்தில் நடக்கும் சமயம் இந்த இந்த காரியங்களை செய்யலாம்....



 


Powered by Blogger