மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்…

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்

நட்சத்திரம் - மூலம்
மூலம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - கேது
மூலம் நட்சத்திரத்தின் அதிதேவதை  - நிர்ருதி, துர்க்கை, பித்ருக்கள்
மூலம் நட்சத்திரத்தின் யோனி - பெண் நாய்
மூலம் நட்சத்திரத்தின் கணம் - ராக்ஷஸ கணம்
மூலம் நட்சத்திரத்தின் பூதம் - வாயு, நெருப்பு, ஆகாயம்
மூலம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - ராசி சக்கரத்தில் நட்சத்திர வகைப்படுத்தலுக்கு பயன்படும் முக்கிய நட்சத்திரங்களில் இந்த மூலம் நட்சத்திரம் இன்றியமையாதது ஏனென்றால் நமது பால் வழி விண்மீன் மண்டல பேரியக்க மையத்திற்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் நட்சத்திரம் இந்த மூலம் நட்சத்திரம் ஆகும் மேலும் பால் வழி விண்மீன் மண்டல பேரியக்கத்திலுள்ள மிகப்பெரும் கருந்துளையின் அமைவிடத்திலும், அண்டத்தின் வானொலி கதிர்களின் மூலமான பகுதியாகவும் அமைந்துள்ள படியால் இந்த நட்சத்திரத்திற்கு மூலம் என்றே பெயர் வைத்துள்ளனர் ஜோதிட ரிஷிகள், இப்படிபட்ட இந்த மூலம் நட்சத்திரம் தனுசு ராசி விண்மீன் மண்டலத்தில் உள்ள அதிக ஒளியுள்ள ஒன்பது நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாகவும் அவற்றை இணைத்து பார்க்கும் போது சிங்கத்தின் வால் அல்லது தேளின் வால் போல சித்தரிக்க படக்கூடியதாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
மூலம் நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - தனுசு ராசியின் பாகை 240:00:00 முதல் தனுசு ராசிக்குள் பாகை 253:20:00 கலை வரை இந்த நட்சத்திரத்தின் இருப்பாக உள்ளது.
மூலம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - குரு

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு மூலம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம ராசி தனுசு ராசியாகும். சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையாக ஜோதிட சாஸ்திரத்தால் அழைக்கப்பட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை தெரிந்து கொள்ள சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் பத்தொன்பதாம் நட்சத்திரமாக இருக்கும் மூலம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் தனது சுய நோக்கத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தருபவர், செல்வமுள்ளவர், தனக்கு வேண்டாத விஷயங்களை அவமதிப்போ அல்லது தியாகமோ செய்துவிடுவார்...

0 Response to "மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger