காலசர்ப்பம் (இராகு, கேது) காலசர்ப்ப யோகம் & காலசர்ப்ப தோஷம்...
ஜோதிடத்தில் பயின்ற பல ஜோதிடர்களை குழப்பும், பலன்களை எடுப்பதிலும் அதற்க்கான விதிகளை பிடிப்பதிலும் முரண்பட்ட
கருத்துருக்களை கொண்டு வருவதாக இருப்பது இந்த காலசர்ப்பம் இதை யோகமா அல்லது தோஷமா
என்று பலரும் பலவிதத்தில் விதிகளை வகுத்து சொல்லுவார்கள்.
சிலர் சில விதியை சொல்லி அதுவே உண்மையானது என்றும்
சொல்லுவார்கள். இப்படி பல ஜோதிட
கருத்துருக்களை கொண்ட இந்த காலசர்ப்ப யோகமோ & காலசர்ப்ப தோஷமோ அதை பற்றிய விளக்கமோ அல்லது விவாதமோ செய்ய எப்போதும்
விரும்பவில்லை அதை பற்றி பதிவும் இது இல்லை இதில் காலசர்ப்பத்தின் அடிப்படை
விஷயங்களை மட்டுமே இங்கு சொல்ல உள்ளேன்.
காலசர்ப்பம் என்றால் என்ன என்பதை தெரிவதற்கு முன் இராகு கேது
வின் அடிப்படை வரலாற்றின் சிறு அறிமுகம் துர்வாசரின் சாபத்தால் தேவர்கள் முதுமையுற நேர்ந்தது அதை போக்க மரணமும் முதுமையும்
மற்ற ஆயுளை பெற அமிர்தம் தேவர்களுக்கு தேவைபட்டது பாற்கடலை கடைய அது கிடைக்கும்
என்று அறிந்து அதை கடைய மத்து வேண்டும், கருடனின் துணை கொண்டு மந்தார மலையை மத்துக்காக கொண்டு வந்தனர், கயிறுக்காக வாசுகியை அழைக்க அது சுணக்கம் காட்ட அதன் பாதாள லோகத்து
ருத்திரர்களின் தலைவனான சிவனிடம் விஷ்ணு முறையிட அவர் வாசுகியை செல்ல பணித்தார்
இப்படியாக பாற்கடலை கடைய ஆலகால விஷத்தை சிவனிடம் கொடுத்து விட பின் அமிர்தம்
அருந்தபட்டது அதனை திருமால் மோகினி அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்து ஒரு அசுரன் அமிர்தத்தை பருகியதை அறிந்த சூரிய-சந்திரர்கள் இவ்விடயத்தை திருமாலிடம் கூற அவர் தன் சக்ராயுதத்தால் அவனை வெட்ட அத்துண்டங்களே ராகு கேது ஆயினர். அவ்வசுரனின் உடல் இரண்டாக பிளவுபட்டு பாம்பின்
தலையோடு கூடிய உடல் கேதுவாகவும் முண்ட உடலுடன் உள்ள வால் இராகு ஆனது என்பது
புராண ஐதீகம்.
இப்படியாக காலசர்ப்பம் என்றால் கொடிய விஷம் கொண்ட கருப்பு அல்லது அடர் நீல ராஜநாகம் என்று பொருள் இது 360 பாகை கொண்ட இராசி சக்கரத்தில் எதிர் எதிர் ஆக 180 பாகை தலை வால் கொண்டு இந்த கருப்பு அல்லது அடர் நீல ராஜநாகம் (இராகு, கேது) ஆக இடஞ்சுழியாக (வக்கிரமாக) சுற்றி வருகிறது. மேல் படத்தை பார்த்து கொள்ளவும் அதில் ரிஷபத்தில் இராகுவும் விருச்சிகத்தில் கேதுவும் இருந்தால் எப்படி பாம்பின் அமைப்பு இருக்கும் என்று காட்ட பட்டுள்ளது.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "காலசர்ப்பம் (இராகு, கேது) காலசர்ப்ப யோகம் & காலசர்ப்ப தோஷம்..."
கருத்துரையிடுக