ஏழாம் ஸ்தானம் - தெய்வீக படைப்பின் அடிப்படை நோக்கம்…

ஏழாம் ஸ்தானம் - தெய்வீக படைப்பின் அடிப்படை நோக்கம்
ஏழாம் ஸ்தானத்தின் பெருமையை விளக்கவே இந்த பதிவு அதாவது எல்லாரும் நான் ஏன் பிறந்தேன் என்று அடிக்கடி கேட்டுக்கொள்ளவார்கள் இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவரின் தனித்தனி ஜாதக போக்கு ஏற்ப மாறுபடும் அல்லது அந்த அந்த காலத்துக்கு தக்கபடி மாறுபடலாம் ஆனால் உயிர் படைப்பின் தெய்வீக நோக்கங்களாக கேந்திர ஸ்தானங்கள் ஆன 1, 4, 7, 10 ஆம் ஸ்தானங்களும் மற்றும் உயர்வாக 12 ஆம் ஸ்தானம் விளங்குகிறது. அதாவது அதை விளக்கி சொல்வதானால்

1 ஆம் ஸ்தானம் - பிறப்பு அதாவது ஒருவரது பிறப்பு மற்றும் அதன் நோக்கத்தை அடைய உதவும் உடல் மற்றும் மன பலத்தை காட்டும் ஸ்தானம்.

4 ஆம் ஸ்தானம் - சொத்து, சுக போகம், கல்வி போன்றவற்றை காட்டும் ஸ்தானம் ஆகும்.

7 ஆம் ஸ்தானம் - களத்திரம் (இல்லறம்), கணவன் \ மனைவி, இணைசேர்க்கை (intercourse) காட்டும் ஸ்தானம் ஆகும்.

10 ஆம் ஸ்தானம் - தொழில், மதிப்பு, உலக செயல்பாடு போன்றவற்றை காட்டும் ஸ்தானம் ஆகும்.

சரி இதில் லக்னம் என்று 1 ஆம் ஸ்தானத்தை தவிர மற்ற

4 ஆம் ஸ்தானம் - சொத்து, சுக போகம், கல்வி போன்றவற்றை அனுபவிப்பதை ஒருவர் தனது படைப்பின் நோக்கமாக கொள்ளலாம்.

10 ஆம் ஸ்தானம் - தொழில், மதிப்பு, உலக செயல்பாடு போன்றவற்றை அனுபவிப்பதை ஒருவர் தனது படைப்பின் நோக்கமாக கருதலாம்.

ஆனால் ஒருவர் 7 ஆம் ஸ்தானம் ஆன களத்திரம் (இல்லறம்), கணவன் \ மனைவி, இணைசேர்க்கை (intercourse) அனுபவிப்பதை ஒருவர் தனது படைப்பின் நோக்கமாக கருத மாட்டார் ஆனால் தெய்வ படைப்பில் விலங்குகளுக்கோ இணைசேர்க்கைக்கும் (intercourse)  உயிர் விருத்தியும் தான் தெய்வீக படைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

ஆனால் மனிதனுக்கு மனம் இருப்பதால் அவர்கள் வெளியில் பேசும் போது இணைசேர்க்கை (intercourse) அனுபவிப்பதை ஒருவர் தனது படைப்பின் நோக்கமாக சொல்லமாட்டார்கள் ஆனால் என்ன தான் இருந்தாலும் மனிதன் விலங்கு தான் என்ன ஆறாம் அறிவு இருக்கும் விலங்கு அவ்வளவு தான் அதனால் மனிதனுக்கும் இந்த 7 ஆம் ஸ்தானம் ஆன களத்திரம் (இல்லறம்), கணவன் \ மனைவி, இணைசேர்க்கை என்பது தெய்வீக படைப்பின் முக்கிய நோக்கம் தான் அதனால் தான் இறைவனே காமேஸ்வரன் காமேஸ்வரி ஆக இருந்து உலக படைப்புகளை உருவாக்குகிறார்கள். அதனால் தான் இன்று திருமணத்திற்கு ஆண் பெண் தேடித் தரும் சிறு தொழில் கூட தற்காலத்தில் பெரிய வியாபாரமாக வலைதளம் தொலைகாட்சி விளம்பரம் என்றெல்லாம் மாறி உள்ளது.

உலகில் சாதாரண மனிதர்களின் முதல் நோக்கமாக இருப்பது 4 ஆம் ஸ்தானம் ஆக இருந்தாலும் மேலும் சில லட்சிய மனிதர்களுக்கு 10 ஆம் ஸ்தானம் வாழ்வில் தேவையான உயர்ந்த ஸ்தானம் ஆக இருந்தாலும் நாம் காணும் இந்த உலகில் பெரும்பாலான சாதாரண மனிதர்களுக்கு முக்கிய நோக்கமாக இருப்பது 7 ஆம் ஸ்தானம் தான், திருமண வாழ்க்கை திருப்தியாக நடைபெற்றாலே தெய்வீக படைப்பின் அடிப்படை நோக்கம் நிறைவேறி விட்டாதாக கருதபடும்.

உண்மையான தெய்வீக படைப்பின் முக்கிய நோக்கமாக இருப்பது 12 ஆம் ஸ்தானமான மோட்ச ஸ்தானம் தான் ஆனால் இதை எந்த மனிதர்களும் அல்லது சாதாரண மனிதர்களுக்கு முதலில் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டார்கள். 4,10 ஆம் ஸ்தானத்தின் பலன்களையும் முக்கியமாக 7 ஆம் ஸ்தானத்தின் பலன்களையும் சாதாரண ஒரு மனிதன் திருப்தியாக அனுபவித்து முடித்த பின்பு தான் அவரிடம் மோட்ச ஸ்தானத்தின் பெருமையை பேசவே முடியும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

0 Response to "ஏழாம் ஸ்தானம் - தெய்வீக படைப்பின் அடிப்படை நோக்கம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger