உங்களின் லக்னாதிபதியின் சிறப்பும் அதனால் உண்டாகும் பலனும்… - பகுதி 2

உங்களின் லக்னாதிபதியின் சிறப்பும் அதனால் உண்டாகும் பலனும்… - பகுதி 2


உங்களின் லக்னாதிபதி புதன், வியாழன் (குரு), சுக்கிரன், சனி ஆகி அவர்கள் சிறப்பாக ஜாதகத்தில் அமைந்திருந்தால் வரும் பலன்கள் எனவே லக்னாதிபதி வலுவாக அல்லது மிதவலுவாக அமைந்தவர்களுக்கும் மட்டும் தான் பலன்களை பொருத்தி பார்க்க வேண்டும்.


முதல் பாடலின் விளக்கம் -
அப்படி வலுவாகும் அந்த லக்னாதிபதி புதன் ஆனால் கல கலப்பான பேச்சு, நகைசுவை உணர்வு, நயத்தல் என்றால் பாராட்டி சிறப்பித்து இன்பமுற நடத்தல் என்று பொருள் கொள்ளலாம், நான்குவித ஞானம் (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) குறித்த அறிவு இருக்கும், உண்பதில் பிரியம், காற்றும் நீரும் கலந்த தேகம், நல்ல ஊட்டசத்து உணவும், ஞாபக சக்தியும் இருக்கும்.
அப்படி வலுவாகும் அந்த லக்னாதிபதி குரு ஆனால் சற்று குண்டான உடல், ஒளிபொருந்திய முகம், பிறரை ஈர்க்கும் கண்கள், அழகான மென்மையான தலைமயிர், ஆச்சாரத்தை பேணக்கூடிய குடும்பத்தில் பிறப்பான்.

இரண்டாம் பாடலின் விளக்கம் -
அப்படி வலுவாகும் அந்த லக்னாதிபதி சுக்கிரன் ஆனால் வசிகரிக்கும் முகம், அழகான கண்கள், அழகான புருவம், மிதமான அடர்த்தியை கொண்ட சுருண்ட முடி அழகு, நிலம் நீர் நிறைந்த தேகம், தன்னியல்பான நடத்தை உள்ளவர், சுவைகூட்டிய தின்பண்டங்களில் பிரியம்.
அப்படி வலுவாகும் அந்த லக்னாதிபதி சனி ஆனால் எதற்கும் வருத்தப்படமாட்டான் அதே சமயம் ஒரே விஷயத்தில் அல்லது ஒரே நிலையில் நின்று விடாமல் தொடர்ந்து போய் கொண்டே இருப்பான், நீலமும் பழுப்பும் கலந்த கண்கள், மெலிந்த தேகம், உயரமான தேகம், வலுவான பற்கள், கரடுமுரடான முடிகள் அமைப்பையும் கொண்டிருப்பான்.

இராகு, கேது விற்கு ராசியாதிபதியாகும் தகுதி நேரடியாக இல்லை என்பதால் அந்த கிரகங்களை பற்றி கோள்முனியார் குறிபிட்ட வில்லை.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 



0 Response to "உங்களின் லக்னாதிபதியின் சிறப்பும் அதனால் உண்டாகும் பலனும்… - பகுதி 2"

கருத்துரையிடுக

Powered by Blogger