தொழில் யோகங்கள் பகுதி 2 - இசை ஆசிரியர் (Music Teacher), பிரபல வாய்ப்பாட்டு ஆசிரியர்…
தொழில் யோகங்கள் பகுதி 2 - இசை ஆசிரியர் (Music Teacher), பிரபல வாய்ப்பாட்டு ஆசிரியர்…
இசைத்துறையில் ஒருவர் ஈடுபடுவதற்கு 2,3,5,11 ஆகிய ஸ்தானங்கள் நன்றாக அமைய வேண்டும்
மேலும் அதன் ஸ்தானாதிபதிகளும் நன்றாக அமைய வேண்டும், பிறகு சுக்கிரன், குரு, சனி ஆகிய கிரகங்கள் மிக பலமாக அமைய வேண்டும். வாய்பாட்டுக்கு 2,3,5,7
ஆகிய ஸ்தானங்கள் நன்றாக அமைய வேண்டும் மேலும் அதன்
ஸ்தானாதிபதிகளும் நன்றாக அமைய வேண்டும், பிறகு சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் மிக பலமாக அமைய வேண்டும், மற்றும் மற்றவர்களுக்கு சொல்லிதரவும் அதன்
மூலம் தனது கலையை விருத்தி செய்யவும் குரு பகவானும் மற்றும் 9 ஆம் ஸ்தானம் அதன் ஸ்தானாதிபதியும் நன்றாக அமைய
வேண்டும்.
ஒரு இசை ஆசிரியரின் ஜாதகம்
இசை ஆசிரியராக தனது பணியை செய்து கொண்டிருக்கும் இவரின்
ஜாதகத்தை சிறிது பார்ப்போம் 2 ஆம்
ஸ்தானாதிபதி இரண்டில் ஆட்சி மேலும் உடன் ஆச்சாரியன் ஸ்தானத்திற்கு அதிபதியான 9க்குடைய சந்திர பகவான் சேர்ந்தும் உள்ளார், 5 ஆம் ஸ்தானாதிபதியாக இருப்பவரும் குருவே
அதனால் அவரின் ஆட்சி பலமானதாக ஆனாது, மேலும் சுக்கிரன் குருவின் சாரத்தில் அமைந்தும் உள்ளார்.
இசைத்துறை ஆர்வம் மற்றும் இசைகருவிகளை மீட்டுவதற்கும்
அதில் பயிற்சியாளாக இருக்கவும் 3, 11 ஆம் ஸ்தானம் அதன் ஸ்தானாதிபதியும் நன்றாக அமைய வேண்டும் இவரின் ஜாதகத்தில்
3, 11 ஆம் ஸ்தானாதிபதி
ஒருவருக்கொருவர் சப்தம இராசியில் நின்று ஒருவருக்கொருவர் பார்வை செய்வது மட்டும்
அல்லாமல் 11 ஆம் ஸ்தானாதிபதி 11 ஆம் ஸ்தானத்தை பார்த்து மேலும் பலம்
சேர்க்கிறார்,
ஆச்சாரியன் ஸ்தானத்திற்கு அதிபதியான 9க்குடைய சந்திர பகவான் குருவுடன் சேர்ந்து
அமைந்து அந்த குருவால் 10 ஆம்
ஸ்தானம் ஆன தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார் மேலும் சுக்கிரனுடன் சேர்ந்த சூரியனும்
இருவரும் 10 ஆம் ஸ்தானம் ஆன தொழில்
ஸ்தானத்தை பார்க்கிறார்கள், மேலும்
செவ்வாயும் சுக்கிரன் சாரத்தில் அமைந்தால் மற்றவர்களுக்கு இசைக்கலையை சொல்லித்
தந்து தன் மாணாக்கர்களிடம் புகழ் பெற்று உள்ளார்.
பிரபல வாய்ப்பாட்டு ஆசிரியர் ஜாதகம்
பிரபல வாய்பாட்டு ஆசிரியராக உள்ளார் மேலும்
பாரம்பரியமான இசை குடும்பத்தில் பிறந்தவர் இவரின் ஜாதகத்தை சிறிது பார்ப்போம்
வாய்பாட்டு ஸ்தானத்திற்கு அதிபதியான 2க்குடைய சுக்கிர பகவான் 10ல்
அமைந்து 10க்குடைய புதன் பகவான்
உடன் பரிவர்த்தனை யோகம் பெற்றும் மேலும் தர்மகர்மாதிபதி யோகமும் பெற்றும்
அமைந்துள்ளது மிகச்சிறப்பாகும்,
சரஸ்வதி ஸ்தானம் ஆன 4ஆம் ஸ்தானத்தின் அதிபதி குரு பகவான் 11 ஸ்தானத்தில் உச்சம் பெற்று மேலும் 5 ஆம் ஸ்தானாதிபதியாக இருப்பவரான சனி ஆட்சி பெற்று ஒருவருக்கொருவர் சப்தம
இராசியில் நின்று ஒருவருக்கொருவர் பார்வை செய்வது மேலும் விசேஷமாக அமைந்துள்ளது, மேலும் 7ஆம் ஸ்தானத்தின் அதிபதி குரு பகவானே ஆகும்,
3க்குடைய செவ்வாய் பகவான் 8ல் ஆட்சி அடைந்துள்ளார் மேலும் 8ல் இருந்து 8ஆம் பார்வையாக தனது மூன்றாம் ஸ்தானத்தை பார்க்கிறார், 5 ஆம் ஸ்தானாதிபதியாக இருப்பவரான சனி ஆட்சி
பெற்று 10ஆம் பார்வையாக இரண்டாம் ஸ்தானத்தை பார்க்கிறார் மேலும் 3க்குடைய செவ்வாய் பகவான் 8ல் ஆட்சி பெற்று 7ஆம் பார்வையாக இரண்டாம் ஸ்தானத்தை
பார்க்கிறார், ஆச்சாரியன்
ஸ்தானத்திற்கு அதிபதியான 9க்குடைய
புதன் பகவான் தொழில் ஸ்தானம் 10 ஆம்
ஸ்தானாதிபதியான சுக்கிரனுடன் சேர்ந்து பரிவர்த்தனை யோகம் அமைந்ததால் கர்நாடக
வாய்பாட்டு கலையை சொல்லித் தரும் பிரபல வாத்தியாராக உள்ளார், இவரின் மாணாக்கர்களும் பிரபலமானவர்களாக ஆகியும்
உள்ளனர்.
- ஜோதிஷ் சிவதத்துவ
சிவம்
0 Response to "தொழில் யோகங்கள் பகுதி 2 - இசை ஆசிரியர் (Music Teacher), பிரபல வாய்ப்பாட்டு ஆசிரியர்…"
கருத்துரையிடுக