ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 5 - பரிபாலஜீவன யோகம், குருசந்திர யோகம்….

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 5 - பரிபாலஜீவன யோகம், குருசந்திர யோகம்….

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

பரிபாலஜீவன யோகம்
ஐனன லக்னத்திற்கு 10 ஆம் வீடாம் ஜீவன ஸ்தானத்தில் லக்ன சுபர், யோகர்கள் ஆட்சி உச்சம் ஆனால் அல்லது நட்பு ஸ்தான நட்பு கிரங்களுடன் சேர்ந்து இருந்தால் இந்த பரிபாலஜீவன யோகம் ஏற்படும், இது சிலர் சந்திரனுக்கு பத்தில் இருந்தாலும் இந்த பரிபாலஜீவன யோகம் ஏற்படும் சொல்கிறார்கள் ஆனால் அந்த அளவில் சிறிய பலனே தரும்.

இதன் பலன்கள் -
இந்த யோகம் ஏற்பட்ட ஜாதகர் புகழ் மற்றும் புகழ் பெறும் நீடித்த செல்வம், வளமான வாழ்க்கையை அடைய வைக்கும், அதிகாரம் செல்வாக்கு, இலட்சியம் வெற்றி,  உயர் பொறுப்புகள், நிர்வாக தொழில் யோகம், புனித இடங்களுக்கு யாத்திரை, அரசு மரியாதை, ஆன்மீக மத செயல்பாடுகள் அதனால் பெறும் கவுரவம் ஆகியவற்றை தரும்.
பரிபாலஜீவன யோகம் ஒரு வகை உதாரண படம்

 

 
குருசந்திர யோகம்
ஐனன ஜாதகத்தில் குருவிற்கு திரிகோண ஸ்தானமான 5ஆம் ஸ்தானம், 9 ஆம் ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களில் சந்திரன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெற்றால் இந்த குருசந்திர யோகம் ஏற்படும், இதில் இரண்டு கிரகங்களும் லக்னத்திற்கு 6,8,12 ஆகிய ஸ்தானங்களில் வரக்கூடாது வந்தால் யோகம் பலிக்காது.

இதன் பலன்கள் -
இந்த யோகம் ஏற்பட்ட ஜாதகர் வாழ்க்கை சீரும் சிறப்பும் ஆக இருக்கும், வாழ்வில் பெரிய துயரங்களோ, இடர்களோ வராது, ஒழுக்கும் நல்ல பண்புகளும் உள்ளவர், கல்வியறிவு உலக அறிவு நிறைந்தவர், நிம்மதி நிறைந்த மனமும் வாழ்க்கையும் அமையும்.
குருசந்திர யோகம் ஒரு வகை உதாரண படம்
 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 5 - பரிபாலஜீவன யோகம், குருசந்திர யோகம்…."

கருத்துரையிடுக

Powered by Blogger