ஜாதகத்தில் ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் -

ஜாதகத்தில் ரிஷபத்தில் சந்திரன் அமர்ந்தால் -


குறிப்பு - சந்திர பகவான் இரண்டரை நாட்களில் ஒரு ராசியில் இருந்து பயணிக்க கூடியவர் அதனால் அந்த காலங்களில் பிறக்கும் அத்தனை குழந்தைக்கும் இந்த இராசியில் தான் இருப்பார் அதனால் சொல்லபட்ட பலன்கள் பொதுவானது தனி ஜாதக பலம் பலவீனம் பொறுத்து மாறுபடும் மேலும் கிரகம் ஒரு இராசியில் பல சூட்சம பலங்கள் பலவீனங்கள் வலிமையடையும் முறைகள் உள்ளன மற்ற கிரக தாக்கம் உள்ளன எனவே அதை ஒட்டியும் மேலே சொல்லபட்ட பலன்கள் மாறி நடக்கும்.



பெண் ரோஹிணி - ஆண் ரேவதி - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் ரோஹிணி - ஆண் ரேவதி - திருமண நட்சத்திர பொருத்தம்…

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம், கிரக பொருத்தம், திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும். நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம், மத்திம பொருத்தம், அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2, 4, 6, 8, 9,11,13, 15,18, 20, 24, 26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் முதல் ஆணின் ரேவதி நட்சச்திரம் வரை எண்ண 24 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் மனுஷ கணம் - ஆணின் ரேவதி நட்சச்திரம் தேவ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் முதல் ஆணின் ரேவதி நட்சச்திரம் வரை எண்ண 24 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் முதல் ஆணின் ரேவதி நட்சச்திரம் வரை எண்ண 24 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும். 27 நட்சத்திரங்களின் யோனி இன மிருகங்கள்...

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் ரேவதி நட்சச்திரம் மிருகப் பிரிவு யானை ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் மீனம் இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 11 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்கபடும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் மீனம் இராசி ஆகும் போது இருவரின்  இராசி அதிபதிகள் சுக்கிரனுக்கு குரு கிரகம் சம உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம்.
இதில் பெண் ரிஷப இராசி ஆகி ஆண் மீனம் இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் கழுத்து ரஜ்ஜூ - ஆணின் ரேவதி நட்சச்திரம் பாத ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவாக வருவதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் ரோஹிணி நட்சச்திரமும் - ஆணின் ரேவதி நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் ரோஹிணி நட்சத்திரம் சிலேத்தும நாடி ஆகும் - ஆணின் ரேவதி நட்சத்திரம் சிலேத்தும நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் சிலேத்தும நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் ரோஹிணி நட்சத்திரம் பால் இருக்கும் வகை - ஆணின் ரேவதி நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பெண் நட்சத்திரம் பால் மரமாகவும் ஆண்  நட்சத்திரம் பால் இருக்கும் வகை ஆனதால் மேலே சொன்னபடி விருட்ச பொருத்தம் உண்டு.

பெண்ணின் ரோஹிணி நட்சத்திரமும் - ஆணின் ரேவதி நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில் 10 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்




ரிஷபம் & மிதுனம், ரிஷபம் vs மிதுனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

ரிஷபம் & மிதுனம், ரிஷபம் vs மிதுனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…
ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் ரிஷபம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ மிதுனம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.


ரிஷபம் & மிதுனம், ரிஷபம் vs மிதுனம் -
இந்த ரிஷப மிதுன ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது அவர்கள் இருவரின் இணைப்பு செயல்திறமிக்கதாக இருக்க ஒருவருக்கொருவர் அறிய உரிய நேரம் ஒதுக்க வேண்டும். மிதுனம் ராசி சின்னம் இரட்டையர்கள் என்பதால் பெரும்பாலும் ஒரு விஷயங்களை பற்றி இரண்டு விதமான எண்ணங்கள் அல்லது யோசனைகள் இருக்க கூடியவர்கள். அதனால் சுதந்திரத்தை விரும்பும் ரிஷப ராசிகாரர்கள் புதிய புதிய கற்பனைகளை விரும்புபவர்கள் என்பதால் மிதுன ராசிகாரர்களின் பலவிதமான புதிய யோசனைகளுக்கு ஆதரவு தருவார் இதனால் இருவரும் விரும்புகிற பாதுகாப்பு மற்றும் விருப்பங்களுக்கு அனுமதி கிடைக்க அது நீண்ட கால நட்பு பரிமளிக்க முடியும். காதலர்கள் ஆனால் ரிஷபம் தனது விருப்பத்தை உடனே அனுபவிக்க நினைக்கும் ஆனால் மிதுனத்திற்கு நம்பகத்தன்மை வரும் வரை சிறிது நேரம் காத்திருவேண்டிவரும் அப்படி இருக்க இறுதியில் இருவரும் சுவையான அனுபவங்களை பெற முடியும்.

ரிஷப மிதுன ராசிக்காரகளுக்குமிடையே வாழ்க்கையை அணுகும் முறைகளில் வெவ்வேறு பட்ட பாணி உடையவர்கள் அதாவது ரிஷப சந்திரன் உச்ச சந்திரன் என்பதால் எதிலும் விரிவான பார்வை மற்றும் எதார்த்த நடைமுறைகளுக்கு மதிப்பு, அன்புக்கு பாசத்திற்கு ஆட்படுபவர்கள் ஆனால் மிதுன இராசிக்காரர்கள் அறிவுசார் இராசி, ஆராய்ச்சி, கேள்வி கேட்கும் ராசியாக உள்ளது இதை அறிந்து நட்பில் மிதுன இராசிக்காரரின் அறிவுக்கு ரிஷபம் உரிய மதிப்பு தரவும் ரிஷப இராசிக்காரரின் அன்புக்கு மிதுனம் உரிய மதிப்பு தரவும் விதமான இந்த இரண்டு நண்பர்கள் உறவுகள் அமைந்தால் நன்றாக இருக்கும். இவர்களின் இணைப்பு சரியாக அமைய இவர்களின் நட்பு உறவு வெறுமனே மேற்பரப்பில் ஈடுபாடு கொண்டிருப்பதை தாண்டி ஆழமான எண்ண உணர்வுகளுடன் பந்தபட்டு இருக்க உதவும். மிதுனம் ரிஷப இருவரும் இணைய நண்பர்களுக்குள் புதிய புதிய உற்சாகத்தை கொண்டு பல்வேறு சுவாரஸ்யம் மற்றும் வேடிக்கை சேர்க்க கூடியவர்கள்.

ரிஷப ராசிக்காரர் இராசிநாதன் சுக்கிரன் ஆகும் மிதுன ராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் இந்த இருகிரகங்களும் தங்களுக்குள் நட்பு உறவு வரக்கூடிய கிரகங்கள் புதன் மஹாவிஷ்ணுயின் அம்சம் சுக்கிரன் மஹாலட்சுமியின் அம்சம் என்று சொல்பவர்களும் உண்டு மேலும் இதனால் இந்த கிரகங்கள் இருவரும் தங்களுக்குள் வித்தியாசமாக இருந்தாலும் அக்கம்பக்கத்து அன்பு நெருக்கம் கொடுக்க கூடிய கிரகங்கள் ஆக இருக்கும். சுக்கிரன் காதல் மற்றும் பாசம், உணர்ச்சி மிக்க கிரகம் புதன் பேச்சாற்றல் சிந்திக்கும் திறன் மிக்க கிரகம் இதனால் ரிஷப ராசிக்காரரின் அன்பால் மிதுனம் ஈர்க்கபடும் மிதுன ராசிக்காரரின் திறமை கண்டு ரிஷபம் ஈர்க்கபடும். இதில் மிதுனம் ராசிக்காரரின் அறிவார்ந்த அணுகுமுறைகள் சிலசமயம் ரிஷப ராசிக்கார நண்பருக்கு புரியாமல் போகலாம் எனவே இந்த நட்பில் மிதுனம் சந்திரன் நல்ல சுபவலுவாக இருக்க வேண்டும் அப்போது தான் ரிஷப நண்பர் தேவைகளை புரிந்து மற்றும் நண்பரின் தேவை நிறைவேறும் நட்பான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.

ரிஷபம் ஒரு பூமித்தன்மை கொண்ட இராசியாகும் மற்றும் மிதுனம் ஒரு காற்றுத்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது ரிஷப நண்பர் எதார்த்த நடைமுறைகளுக்கு ஒத்துப்போக வகையில் முடிவெடுக்க முயற்சிப்பார் மிதுன நண்பர் தனது புத்திசாலித்தனத்துக்கு ஒத்துப்போக வகையில் முடிவெடுக்க முயற்சிப்பார் எனவே இருவரின் நட்பில் பொறுமை மிகவும் முக்கியம். ரிஷபத்தின் ஆசைகள் அதிகமனால் மிதுன நண்பரின் இயல்புக்கு மாறுபட்டால் மோதல்கள் இந்த நட்பில் எழலாம் ஏனெனில் இருவரும்  வெவ்வேறு வழிகளில் உலகை காணக் கூடியவர்கள். ஏதேனும் எதிர்பாராத விஷயங்களை இருவரும் ஆலோசிக்காமல் முடிவெடுப்பதை இருவரும் தவிக்க வேண்டும்.

ரிஷபம் ஒரு ஸ்திரத்தன்மை கொண்ட இராசியாகும் மற்றும் மிதுனம் ஒரு உபய இராசியாகும் அதனால் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த கூடியவர்கள், ஆனால் மிதுனம் பல விஷயகளை ஒரு பொழுது ஆலோசிக்க கூடியது. ரிஷப ராசிக்காரர் மேம்பட்ட அல்லது கலைநயத்துடன் செயபடக்கூடியர்கள் அதனால் மிதுன நண்பர் ஈர்க்க படுவார். மிதுனம் அக்கறை மற்றும் சுதந்திரத்தை மிகவும் விரும்பும் எனவே அது கிடைக்க ரிஷப நண்பரும் ஈர்க்க படுவார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை விளக்கி பகிர்ந்து பலதரப்பட்ட காரியங்களையும் மிதுனத்தின் அறிவு மற்றும் ரிஷபத்தின் அக்கறையும் சேர்ந்து செய்ய அந்த காரியங்கள் வெற்றி மற்றும் நிலையான உறுதியை பெற உதவும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்




திசாபுத்தி கணிதமுறையின் பகுதி 6 - வியாழன் (குரு) திசாபுத்தியின் காலக்கட்டங்கள்…

திசாபுத்தி கணிதமுறையின் பகுதி 6 - வியாழன் (குரு) திசாபுத்தியின் காலக்கட்டங்கள்…

இந்திய ஜோதிட கணித சாஸ்திரத்திற்கு சிறப்பு சேர்க்கும் ஜோதிட கணித முறைகளில் இந்த திசா கணிதமுறை ஜோதிட பலன்களை நிர்ணயிப்பதில் திசாபுத்தி கணக்கிட்டு அறிவது என்பது பிரதானமானது, இந்த திசாபுத்தி கணக்கிட்டு பலன் அறியாமல் மற்ற பலன்கள் சொல்வது என்பது காலில்லாத உடலுக்கு சமம் என்று சொல்லாம், காரணம் ஜாதக பலன்கள் யாவும் திசாபுத்தி காலக்கட்டங்களின் படிதான் நடைபெறுகிறது. நவகிரகங்களும் தங்களின் பலாபலன்களை அவர் அவர்க்குரிய திசாபுத்தி காலக்கட்டங்களில் தான் வழங்குகின்றன எனவே தான் சொன்னேன் திசாபுத்தி அறியாது பலன் சொல்வது காலில்லாத உடலுக்கு சமம் என்று. இதன் படி நாம் இப்போது பார்க்க இருப்பது ஒவ்வொரு கிரகத்தின் திசா மற்றும் அதன் புத்தியின் காலக்கட்டங்களின் அளவுகள்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் தொட்டு ஒருவரின் திசாபுத்திகள் தொடங்கும் உதாரணமாக ஒருவர் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் ஒருவர் பிறந்தால் அவருக்கு வியாழன் (குரு) திசை முதலாவதாக கொண்டு திசாபுத்தி வயது காலகட்டங்கள் தொடங்கும் அதில் தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருந்த காலத்தை வியாழன் திசையில் கழித்து மீதி வியாழன் திசை நடக்கும் அதனால் வியாழன் திசை முதலாவது திசையாக தொடங்கினால் அது முழுமையான பதினாறு ஆண்டுகள் நடப்பில் இருக்காது.

வியாழனுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் திசையின் ஆண்டுகள் -

நட்சத்திரம்
நட்சத்திரத்திற்கு உரிய கிரக திசைகள்
கிரக திசையின் ஆண்டுகள்
புனர்பூசம்
குரு திசை
16 ஆண்டுகள்
விசாகம்
குரு திசை
16 ஆண்டுகள்
பூரட்டாதி
குரு திசை
16 ஆண்டுகள்

வியாழன் (குரு) திசையில் வியாழன் உள்ளபட மற்ற கிரகங்களின் புத்திகள் கால அளவுகள் -

எந்த கிரகத்தின் திசை தொடங்குகிறதோ அந்த கிரகத்தின் புத்தி தான் முதலாவதாக வரும்.

வியாழனின் திசை 16 ஆண்டுகள் = 5760 நாட்கள் = 138240 மணி நேரம்

குரு
திசை
5760
16 வருடம், 0 மாதம், 0 நாட்கள்
குரு
புத்தி
768
2 வருடம், 1 மாதம், 18 நாட்கள்
சனி
புத்தி
912
2 வருடம், 6 மாதம், 12 நாட்கள்
புதன்
புத்தி
816
2 வருடம், 3 மாதம், 6 நாட்கள்
கேது
புத்தி
336
0 வருடம், 11 மாதம், 6 நாட்கள்
சுக்கிரன்
புத்தி
960
2 வருடம், 8 மாதம், 0 நாட்கள்
சூரியன்
புத்தி
288
0 வருடம், 9 மாதம், 18 நாட்கள்
சந்திரன்
புத்தி
480
1 வருடம், 4 மாதம், 0 நாட்கள்
செவ்வாய்
புத்தி
336
0 வருடம், 11 மாதம், 6 நாட்கள்
ராகு
புத்தி
864
2 வருடம், 4 மாதம், 24 நாட்கள்

ஒருவருக்கு இராகு திசை நடப்பு திசையாக இருந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த திசையின் 18 ஆண்டுகள் முடிந்தால் அடுத்ததாக அவர் அப்போது இருக்கும் வயதில் இருந்து தொடங்கி வியாழன் (குரு) திசையின் 16 ஆண்டுகள் முழுமையாக நடக்கும்.

உதாரணமாக வியாழன் திசை ஒருவருக்கு அவரின் வயது 32 வருடம், 09 மாதம், 06 நாட்களில் ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்போது அவருக்கு தொடந்து நடக்கும் புத்திகளின் வயது காலகட்டங்கள் விவரம் பின்வருமாறு காலகட்டங்களில் வரும்.

குரு திசை
5760
11796
32 வ, 9 ம, 6 ந
குரு-திசை-குரு-புத்தி
768
12564
34 வ, 10 ம, 24 ந
குரு-திசை-சனி-புத்தி
912
13476
37 வ, 5 ம, 6 ந
குரு-திசை-புதன்-புத்தி
816
14292
39 வ, 8 ம, 12 ந
குரு-திசை-கேது-புத்தி
336
14628
40 வ, 7 ம, 18 ந
குரு-திசை-சுக்கிரன்-புத்தி
960
15588
43 வ, 3 ம, 18 ந
குரு-திசை-சூரியன்-புத்தி
288
15876
44 வ, 1 ம, 6 ந
குரு-திசை-சந்திரன்-புத்தி
480
16356
45 வ, 5 ம, 6 ந
குரு-திசை-செவ்வாய்-புத்தி
336
16692
46 வ, 4 ம, 12 ந
குரு-திசை-இராகு-புத்தி
864
17556
48 வ, 9 ம, 6 ந

திசாபுத்தி கணிதத்தில் சிலர் வருடத்திற்கு 360 நாட்கள் என்று கணக்கிடுபவர்களும் உண்டு நான் மேலே கொடுத்து வருவது வருடத்திற்கு 360 நாட்கள் என்ற கணிதம் சிலர் வருடத்திற்கு 365  நாட்கள் என்று கணக்கிடுபவர்களும் உண்டு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


Powered by Blogger