அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம் கணிப்பு - பகுதி 2...

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம் கணிப்பு பகுதி 2...

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம்

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம் கணிப்பு - உலக சர்வாதிகாரி, வில்லன்களின் கதாநாயகன் பகுதி 1 ...

ஹிட்லரின் வீரியமான பாபசெவ்வாயின் ஆட்சி பெற்று பார்க்கும் பார்வை மற்றும் இன்னொரு பாப சூரியன் உச்சம் பெற்று பார்க்கும் பார்வை இதனுடன் லக்னாதிபதி யோகாதிபதியான புதனும் சுக்கிரனும் சேர்ந்து பார்வையும் பெற்ற வாக்கு ஸ்தானம் அதனால் போர்குண பேச்சு மற்றும் ஈர்க்கும் பேச்சாற்றல் 2,9 க்குடைய சுக்கிரனின் பார்வையால் மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் அதில் ஏற்பட்டது ஆட்சி பெற்ற குரு இரண்டாம் ஸ்தனாதிபதியை பார்ப்பதால் இது மேலும் வலுவானது. இதனால் சிறுகுழுக்களால் ஆரம்பிக்கபட்ட ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்ந்தார் பின் கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக ஹிட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களை கவர்ந்தார். இதனால் கட்சியில் அவரின் செல்வாக்கு உயர பின் சீரிய வேகத்தில் தனது பேச்சு வல்லமையால் கட்சித் தலைவரும் ஆனார்.

மேற்கத்திய ஜோதிடத்தில் தொடர்பாடல் (Communication) கலை ஸ்தானமாக மூன்றாம் ஸ்தானம் சொல்லபட்டுள்ளது நமது ஜோதிடத்திலும் இது மறைவாக சொல்லப்பட்டுள்ளது இதற்கு அதிபதியான செவ்வாய் வாக்கு ஸ்தானத்தை பலமாக 7ஆம் பார்வை பார்க்கிறார் அதாவது இராசி அம்சம் இரண்டில் ஆட்சி ஆகிறார் அது போதுமா இதோ கிழே உள்ள 2ஆம் இராசிமானம் இதில் செவ்வாய் 2ல் உச்சம் அடைகின்றார் மற்றும் அதுபோக மற்ற வர்க்க சக்கரங்களில் அதிக அளவில் செவ்வாய் ஆட்சி உச்சம் அடைக்கிறார்

 
அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையால் தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத் திண்டாட்டமும் பெருகிவிட்டதாகவும் உணர்ச்சிப் பிழம்பாய், உடல் நடுங்க, கண்கள் கலங்க, கைகள் ஆவேசம் காட்ட ஹிட்லர் ஆற்றும் உரையினால் அப்போதைய ஜெர்மானிய மக்கள் கூட்டம் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்யும் இதன் பக்க விளைவாக தனது பேச்சாலேயே அப்போதைய அரசால் கைது செய்யவும் பட்டார் சிறையிலிருந்த போது "எனது போராட்டம்"என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.

ஹிட்லர் சிறையிலிருந்த போது நடந்த தேர்தலில் ஜெர்மன் தொழிலாளர் கட்சி தோல்வியுற்றது பின் அவர் வெளியில் வந்த பின் கட்சியின் பெயரை "நாசிக்"கட்சி என்று மாற்றினார் ஹிட்லரின் இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் ஆட்சி பெற்ற இராகு கேது தொடர்பில் உள்ள குருசண்டாள குருவின் அரசியல் இராஜ தந்திரத்தினாலும் ஆட்சிக்கு எதிராக மக்ககள் கிளர்ந்து எழ செய்து பெரும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.

அப்போதைய ஜனாதிபதியாக இருந்தவர் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார். 1933 ஜனவரி 30 ஆம் தேதி அதாவது வீரியமான பாபசெவ்வாயின் திசையிலேயே ஹிட்லரை பிரதமராக அப்போதைய ஜனாதிபதி நியமிக்க பட்டார். பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார்.
அதனால் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜெர்மனின் சர்வாதிகாரியானார் எல்லாம் செவ்வாயின் திசையில் நடந்தெறியது.

ஆட்சி பெற்ற இராகு கேது தொடர்பில் உள்ள குருசண்டாள குருவின் சாரம் பெற்று இனி வந்த இராகுவின் திசையில் ஹிட்லரின் உச்சமும் வீழ்ச்சியும் நடந்து முடிந்தது அதாவது இராகுவின் திசையில் தான் பாராளுமன்றத்தை கலைத்தார், இராணுவ திணைக்களத்தினையும், இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார். அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்தார். இனிமேல் ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார்.


பாபசெவ்வாய் ஆட்சி இன்னொரு பாப சூரியன் உச்சம் பெற்று பாப ஸ்தானமான 8ல் வலிமை அடைந்தது மட்டுமல்லாமல் லக்னத்திற்கு 8ஆம் நட்சத்திரதில் அதுவும் ஒரே நட்சத்திரத்திற்குள்  சண்டாள குருவுடன் சேர்ந்து விஷசெம்பாம்பான கேதுவால் சந்திரனும் பாதிக்க பட்டதால் சிறிது இரக்கமற்றவராக ஆனார் இதனால் அவரிடம் ஆழமாக பதிந்து போன யூதபகைமையால் யூதர்களை அடியோடு அழிக்க முனைந்து அப்பாவி யூதர்களையும் கொன்று குவித்தார், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமையின் காரணமாக இரண்டாம் உலக யுத்தத்தை தொடங்கி வைத்தார்.

நான் எப்போது ஒருவரின் மறுபக்கத்தையும் பார்க்க கூடியவன் என்ன தான் ஹிட்லர் மற்ற மக்களுக்கும் தன் நாட்டின் எதிரிகளுக்கும் எதிர்ப்பாளர்களுக்கு அரக்கனாக தெரிந்தாலும் அவரின் ஆட்சி காலத்தில் பல நன்மைகளை தனது நாட்டிற்கு அவரின் தேச பக்தியால் செய்தார் செவ்வாய் ஆட்சி சூரியன் உச்சம் உடன் 1,10க்குடைய புதனும் சேர்ந்து அமையும் இந்த அமைப்பு நிர்வாகத்திறமைகளை கொடுக்கும் யோகம் ஆகும் அதனால் ஹிட்லரின் ஆட்சியில் முக்கியமாக நாட்டின் பொது கட்டுமானத்துறையில் பெரிய சாலை வசதி, பாலங்கள், அணைகள், கால்வாய்கள், துறைமுக வசதிகள் உருவானது. பொது நலன்புரி திட்டங்கள், பல வலி நிவாரணிகள், போதைப் பொருள் பழக்க மீட்பு மருந்துகள், பெண்களுக்கும் ராணுவத்தில் பணி, விபசார தடுப்பு, மிருகவதை தடுப்பு சட்டம், விஞ்ஞானம், விண்வெளி, இயந்திரவியல் துறையில் பல சாதனை கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கியாக இருந்தார்

என்ன இருந்தாலும் போர்கள் அதுவும் அதர்ம போர்கள் என்பது மிகக் கொடுமையான பாபத்தையும் அழிவையும் நாட்டுக்கும் அதை தலைமை ஏற்று நடத்தும் தலைவருக்கும் கொண்டு வந்து கொடுத்து விடும் என்பது மாறாத இறை விதி ஹிட்லர் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பத்தார் யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தாலும். ஆனால் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை மாறியது, ஜெர்மனி வீழ்ந்தது. மராகாதிபதி சந்திரனை இராகு பார்ப்பதும் சனி செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் சேர துர்மரணம் என்பது பொது விதி சந்திரன் செவ்வாய் சாரநாதன் சுக்கிரனின் அதாவது ராகு திசை சுக்கிரன் புத்தியில் துர்மரணம் அடைந்தார். இந்த உலகில் ஒன்றே ஒன்றை சம்பாதித்தால் மட்டுமே மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழவும் இறக்கவும் முடியும் அது நிபந்தனைகளும் எல்லைகளும் அற்ற "அன்பு".
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

இருதயத்தின் பிரதிபலிப்பு கண்கள் - அழகான கண்கள்…

இருதயத்தின் பிரதிபலிப்பு கண்கள் - அழகான கண்கள்…

"ஒருவரின் கண்களை பார்த்தால் அவரின் இதயத்தை உணர்வாய்"

"ஒளியான அழகான கண்கள் பேசாமலே ஒருவரை கவர்ந்து விடும்"
இதுபோன்ற பல முதுமொழிகள் கண்களின் சிறப்பை உணர்த்துவதாக இருக்கிறது, காதல் ஆனாலும் சரி மற்ற அன்பு உறவுகள் ஆனாலும் சரி நமது கண்களை கண்டே நமது அப்போதைக்கான உணர்வை உணர்ந்து விடுவார்கள் இது நமக்கெல்லாம் அனுபவம். இப்படிபட்ட கண்கள் இல்லறத்தில் மட்டும் அல்லாமல் ஆன்மீகத்திலும் குருவின் கண்களின் கடாச்சம் சீடன் மேல் விழுந்தால் சீடனின் கருமங்களை அழித்தொழிக்க உதவும் நயன தீட்சையாக கொண்டாப்படுகிறது. இதை மெய்பிக்கும் வகையில் சாட்சியாக கள்ளம் கபடம் இல்லாத சிறுகுழந்தைகளின் கண்களில் இந்த உண்மையை காணலாம். ஜோதிடத்திலும் வியாழன் கிரகத்தின் 5,7,9 ஸ்தான பார்வையை சிறப்பாக சொல்லுவதை நீங்கள் அறிவீர்கள். இப்படியாக ஒருவரது கண்கள் அவரை பற்றி அப்பிராயங்களுக்கும் அழகுக்கும் முதல் அறிக்கை தருவாதாக உள்ளது இப்படிபட்ட கண்கள் ஆதர்ஸனமாகவும் (ஈர்ப்பு) அழகாகவும் அமைய உள்ள சில ஜோதிட அமைப்புகளை பார்ப்போம்.

இரண்டாம் வீட்டின் அதிபதி இரண்டாம் வீட்டில் ஆட்சி, உச்சம் அடைந்திருந்தால் அழகான கண்கள் அமைந்திருக்கும்.

இரண்டாம் வீட்டின் அதிபதி இரண்டாம் வீட்டில் நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் அடைந்திருந்தால் அழகான கண்கள் அமைந்திருக்கும்.

இரண்டாம் வீட்டின் அதிபதி இரண்டாம் வீட்டை பார்த்தாலும் அழகான கண்கள் அமைந்திருக்கும்.

அழகு கிரகங்கள் ஆன சந்திரன், சுக்கிரன் இரண்டாம் வீட்டின் அதிபதி உடன் சேர்ந்து பலம் அடைந்திருந்தாலும் அழகான கண்கள் அமைந்திருக்கும். ஆனால் இதில் சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருக்க வேண்டும்.

பூரண சந்திரனாக இருந்து இரண்டாம் வீட்டில் சூரியன் நட்பு பெற்று அமைந்தாலும் அழகான பிரகாசமான கண்கள் அமைந்திருக்கும்.

சூரியன், குரு (வியாழன்) இரண்டாம் வீட்டை பார்த்தாலும் அழகான கண்கள் அமைந்திருக்கும்.

சூரியன், குரு (வியாழன்) 1,2,5,9 வீட்டின் அதிபதியாக இருந்து இரண்டாம் வீட்டை பார்த்தால் ஈர்ப்பான (ஆதர்ஸனமான) கண்கள் அமைந்திருக்கும்.

சூரியன், குரு (வியாழன்) 1,2,5,8, 9 வீட்டின் அதிபதியாக இருந்து இரண்டாம் வீட்டில் ஆட்சி, உச்சம் அடைந்திருந்தாலும் அழகு + ஈர்ப்பான (ஆதர்ஸனமான) கண்கள் அமைந்திருக்கும்.

1,2,5,8,9 வீட்டின் அதிபதிகளாக இருக்கும் கிரகங்கள் இரண்டாம் வீட்டில் ஆட்சி, உச்சம் அடைந்திருந்தாலும் மற்றும் இரண்டாம் வீட்டை பார்த்தாலும் அழகு + ஈர்ப்பான (ஆதர்ஸனமான) கண்கள் அமைந்திருக்கும்.

லக்னத்திற்கு 3,4 ஆவது உடு அதிபதிகள் ஆட்சி, உச்சம் அடைந்திருந்தாலும் மற்றும் பார்த்தாலும் அழகான கண்கள் அமைந்திருக்கும்.

இதுபோன்ற அமைப்புகள் பல நடிகர் நடிகைகள், சொற்பொழிவாளர்கள், கலைத்துறை கலைஞர்கள், நாட்டிய மேதைகள், தூய அரசியல் அறிஞர்கள், ஞானிகள் போன்றோரின் ஜாதகத்திலும் பார்க்க கிடைக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

பெண் ரோஹிணி - ஆண் பூராடம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் ரோஹிணி - ஆண் பூராடம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம், கிரக பொருத்தம், திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும். நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம், மத்திம பொருத்தம், அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2, 4, 6, 8, 9,11,13, 15,18, 20, 24, 26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் முதல் ஆணின் பூராடம் நட்சச்திரம் வரை எண்ண 17 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம் இல்லை.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்

இதில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் மனுஷ கணம் - ஆணின் பூராடம் நட்சச்திரம் மனுஷ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் முதல் ஆணின் பூராடம் நட்சச்திரம் வரை எண்ண 17 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் முதல் ஆணின் பூராடம் நட்சச்திரம் வரை எண்ண 17 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் பூராடம் நட்சச்திரம் மிருகப் பிரிவு குரங்கு ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் தனுசு இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 8 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்கபடும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் தனுசு இராசி ஆகும் போது இருவரின்  இராசி அதிபதிகள் சுக்கிரனுக்கு குரு சம உறவுமுறை வருவதால் இருந்தாலும் தேவகுரு அசுரகுரு தன்மை பெறுவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு ஆனால் அரை பொருத்தமே.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம்.
இதில் பெண் ரிஷப இராசி ஆகி ஆண் தனுசு இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் கழுத்து ரஜ்ஜூ - ஆணின் பூராடம் நட்சச்திரம் தொடை ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் ரோஹிணி நட்சச்திரமும் - ஆணின் பூராடம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் ரோஹிணி நட்சத்திரம் சிலேத்தும நாடி ஆகும் - ஆணின் பூராடம் நட்சத்திரம் பித்த நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறாக நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் ரோஹிணி நட்சத்திரம் பால் இருக்கும் வகை - ஆணின் பூராடம் நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பெண் பால் மரமாகவும் ஆண் பால் இருக்கும் வகை ஆனால் மேலே சொன்னபடி விருட்ச பொருத்தம் உண்டு.

பெண்ணின் ரோஹிணி நட்சத்திரமும் - ஆணின் பூராடம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில் 
71/2 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் சம அளவில் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் மத்திமம் (சமமான பொருத்தம் உள்ளது).
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்



Powered by Blogger