நவகிரகங்களும் முக்கிய மற்றும் உப உலோக (Major and Sub Metals) காரகங்களும்…


நவகிரகங்களும் அதன் முக்கிய மற்றும் உப உலோக (Major and Sub Metals) காரகங்களும்…
நவகிரகங்களும் அதன் முக்கிய மற்றும் உப உலோக (Major and Sub Metals) காரகங்களும் தெரிந்து கொள்வது அவ்வளவு முக்கியமா என்று சிலருக்கு தோன்றலாம் உலோகத்துறை சார்ந்து உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் செய்பவர்களுக்கும், மேலும் பங்குசந்தை அதிலும் முக்கியமாக பொருள் வணிகச் சந்தையில் (Commodity Exchange) ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இது பயன்படும்.
  தமிழில் இந்த பட்டியல்
இதில் இராகு, கேதுகளுக்குகளை நீக்கி பார்த்தால் சப்த கிரகங்களில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் காரகத்துவம் பெற்றவர்கள் சனியும் (இயற்கை எரிவாயு), செவ்வாயும் (கச்சா எண்ணெய்) ஆகும். எரிவாயு (Gas) விற்பனை முகவர்கள் மற்றும் பெட்ரோல் (Petrol) விற்பனை முகவர்கள் மேலும் இது சார்ந்த உற்பத்தி நிறுவனங்களில் வேலை பணிப்புரிபவர்கள் போன்றவர்களின் ஜாதகங்களில் இந்த சனி, செவ்வாய், இராகு, கேது சிறப்பாக அமைந்திருக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 



பெண் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் - ஆண் ரோஹிணி - திருமண நட்சத்திர பொருத்தம்...

பெண் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் - ஆண் ரோஹிணி - திருமணப் பொருத்தம் நட்சத்திர பொருத்தம்...
முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம், கிரக பொருத்தம், திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும். நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம், மத்திம பொருத்தம், அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரத்திலிருந்து - ஆணின் ரோஹிணி நட்சச்திரம் வரை எண்ண 2 ஆக வருவதால்  தினப்பொருத்தம் உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்

இதில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் ராக்ஷஸ கணம் - ஆணின் ரோஹிணி நட்சத்திரம் மனுஷ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் இல்லை.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் முதல் ஆணின் ரோஹிணி நட்சச்திரம் வரை எண்ண 2 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் முதல் ஆணின் ரோஹிணி நட்சச்திரம் வரை எண்ண 2 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லை.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் மிருகப் பிரிவு ஆடு ஆகும் - ஆணின் ரோஹிணி நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் ரிஷப இராசி ஆனால் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ஆண் இருவரும் ரிஷப இராசி ஆனாலும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனே என்பதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம். இதில் பெண் ஆண் இருவரும் ரிஷப இராசி ஆனாலும் வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ - ஆணின் கார்த்திகை நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ இரண்டும் ஒரே ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லை.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் கார்த்திகை நட்சச்திரமும் - ஆணின்  கார்த்திகை நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் கார்த்திகை நட்சத்திரம் சிலேத்தும நாடி ஆகும் - ஆணின்  கார்த்திகை நட்சத்திரம் சிலேத்தும நாடி ஆகும் பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் சிலேத்தும நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் கார்த்திகை நட்சத்திரம் பால் இருக்கும் வகை - ஆணின் கார்த்திகை நட்சத்திரம் பால் இருக்கும் வகை எனவே இரண்டும் பால் மரமாக ஆனதால் விருட்ச பொருத்தம் உண்டு.

பெண்ணின் கார்த்திகை 1ஆம் பாதம் நட்சத்திரமும் - ஆணின் ரோஹிணி நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  7 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் சம அளவில் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் மத்திமம் (சமமான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


நவகிரகங்களின் பார்வை எடுத்துக்காட்டு விளக்கம் பகுதி 2 - ஓஷோ ஜாதகம்...

நவகிரகங்களின் பார்வை எடுத்துக்காட்டு விளக்கம் பகுதி 2 - ஓஷோ ஜாதகம்...

நவகிரகங்கள் பார்வை செய்யும் ஸ்தானங்கள் அதன் விளக்கம் போன்றவை பற்றி கிரக பார்வை என்றால், நவகிரகங்கள் பார்வை செய்யும் ஸ... - பகுதி 1 என்ற வலைபதிப்பில் விளக்கமாக பார்த்தோம் இதில் நவகிரகங்கள் பார்வை செய்யும் ஸ்தானங்களின் பலன்களை காணும் சில எளிய விளக்கங்களை உதாரண ஜாதகத்தை வைத்து பார்ப்போம்,

உதாரணத்துக்கு எடுத்துக் கொண்ட ஜாதகம் மிகவும் வித்தியாசமான அதே நேரத்தில் பார்வைக்கு விளக்கம் தர எற்று ஜாதகமாக எடுத்துள்ளேன் அவர் தான் ஓஷோ தத்துவஞானி இவரை அறியாதவர்கள் இருக்க முடியாத அந்தளவுக்கு சுப அசுப புகழின் அனைத்து உச்சங்களையும் அனுபவித்தவர் இவர் தனது ஆன்மீக தத்துவங்களின் காரணமாக மிக அதிக ஆதரவாளர்களையும், மிக அதிக எதிர்ப்பாளர்களையும் தன் வாழ்நாளில் அனுபவித்தவர், எதன் மூலம் இத்தகை இடத்தை அடைந்தார் என்று யோசித்தால் அவரது சிந்தனைகள் மற்றும் அவரின் பேச்சுக்கள்,

ஒஷோ ஒரு முறை சொல்லியிருப்பார் "நான் எனது தத்தவங்களை சிந்தனைகளை எதையும் எழுதியதே இல்லை" இப்படி இருப்பினும் இவரது தத்தவங்களும் சிந்தனைகளும் உலகில் உள்ள 200 க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டாளர்கள் மூலமாக 60 மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது எப்படி இது நிகழ்தது அவரின் ஒவ்வொரு பேச்சும் கவரக்கூடியதாகவும் மற்றும் அதை புத்தகமாக்கினால் விற்று சாதனை படைக்கும் படியானதாகவும் இருந்தது எனவே தனது பேச்சின் மூலமாக உலகை தன்னை நோக்கி ஈர்க்கவும் வைத்தவர் எதிர்க்கவும் வைத்தவர்.

ஓஷோ ஜாதகம்

இந்த கிரக பார்வை பற்றி பேசும் போது யாவரும் தனக்கும் இதே போல எனக்கும் குரு உச்சம் சார் நானும் ரிஷப லக்னம் தான் என்றெல்லாமும் நினைத்து எனக்கும் இதே போல பலன்கள் தான் தருமா என்று நினைப்பார் அப்படி அல்ல எப்படி ஒருவரின் இராசிகட்டம் கணித்து அமைக்கிறோமோ அதே போல அந்த கிரகங்களின் பார்வைகளை வைத்து கிரக பார்வைகளின் சக்கரம் ஒன்று அமைக்கபட்டுள்ளது அதில் நவகிரகங்களின் பார்வை தாக்கமும் அந்த ஜாதகருக்கு தெரியும் அதுதான் நிஜமான நவகிரக பார்வை பலம் ஆகும் எனவே வெறும் ஒரு சில கிரகங்களின் பார்வை பலத்தை வைத்து ஜாதக பார்வை பலத்தை நிர்ணயித்துவிடக்கூடாது.
ஒஷோ ஜாதக பார்வை சக்கரம்

ஓஷோவின் இராசிகட்டத்தில் லாபாதிபதியும், மறைஞான ஸ்தானாதிபதியும் ஆன குரு பகவான் உச்ச பெற்று உள்ளார் எப்படி 8 ஆம் ஸ்தானத்தில் சந்திரன், சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்களும் 8ல் இருந்து அந்த 8 ஆம் ஸ்தானாதிபதி ஆன குரு பகவான் உச்ச பெற்று அமைந்து சுப அசுப தன்மை கலந்த மிக மிக பலமான குரு பகவான் ஆகி அவர் பார்க்கும் ஸ்தானங்களான ஜென்ம லக்னித்திற்கு 7 ஆம் ஸ்தானத்தை பார்ப்பதால் மக்கள் தொடர்பு இவருக்கு மிக அதிகம் மற்றும் செக்ஸ் குரு என்றெல்லாம் பேசப்பட்டவர் (https://en.wikipedia.org/wiki/Rajneesh), 

9 ஆம் ஸ்தானத்தை பார்ப்பதால் பொதுவாக குரு 9 ஆம் ஸ்தானத்தை பார்த்தால் மத மற்றும் தத்துவ சிந்தனைகள், தியானம், தமது உள்ளுணர்வுக்கு மதிப்பு மற்றும் இதை பற்றியெல்லாம் மற்றவருக்கு குரு உபதேஷம் செய்வது என்பது தானாக வரும் இதில் குரு பகவான் உச்ச பெற்றதால் இந்த விஷயங்களில் மிக உயர்ந்த இடத்தை அடைந்தார், 

கிரக பார்வை விதி - கிரகங்கள் தனது சுய இராசிகளை பார்வை செய்யும் போது அதிக அளவு பார்வை பலத்தை அந்த ஸ்தானங்களுக்கு தரும். 

11 ஆம் ஸ்தானத்தை பார்க்கிறார் 11 ஆம் ஸ்தானம் குருவின் சொந்த வீடு ஆவதால் இன்னும் பலமான பார்வை பலத்தை தருவார் அதனால் புதுவித சந்நியாச தத்துவத்தை பிரகடன படுத்திய இவர் தன்னை பணக்காரர்களுக்கு மட்டுமான குரு என்று தன்னை அறிவித்து கொண்டார் அதன் மூலம் இவரது பணக்கார சீடர்களின் செல்வங்கள் இவருக்கு உழைக்காமலேயே பரிசாக தரபட்டு அனுபவித்தார். இந்த சிறப்பை சுருக்கமாக சொல்வதானால் இவருக்கு பரிசாகவே பல ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் தரப்பட்டன அது கோடீஸ்வர்களுக்கான கார் ஆகும் இதனால் அமெரிக்காவில் இருந்த போது இவர் தினமும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் ஆசிரமத்திற்கு வருவார்.

கிரக பார்வை விதி - அதிக கிரகங்கள் ஒரு இராசிகளை பார்வை செய்யும் போது அதிக அளவு பார்வையால் பலமுனைபோட்டி பலம் அந்த ஸ்தானங்களுக்கு கிடைக்கும்.
ஓஷோவின் இராசிகட்டத்தில் பார்வை பலத்தை காட்டக்கூடிய முக்கிய ஸ்தானமாக இருப்பது 2 ஆம் ஸ்தானம் ஆகும், ஆம் 8 ஆம் ஸ்தானத்தில் சந்திரன், சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்களும் அமர்ந்து அவை அனைத்தும் 7 ஆம் பார்வையாக (100%) 2 ஆம் ஸ்தானத்தை பார்க்கும், 2 ஆம் ஸ்தானம் என்பது வாக்கு ஸ்தானம் அதாவது பேச்சு, பேசும் விதம், பேசப்படு பொருள், அதன் எழுத்து வடிவம், விஷயங்களை புரிந்து கொண்ட கோணம் இவைகளின் பலத்தை காட்டக்கூடிய ஸ்தானம் ஆகும், 

நான் முதலிலேயே சொன்னவாறு இவரது பேச்சின் மூலமாக வெளிபட்ட தத்தவங்களும் சிந்தனைகளும் உலகில் உள்ள 200 க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டாளர்கள் மூலமாக 60 மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது அதன் மூலம் நீடிக்கும் புகழ் வெளிச்சத்தை இறந்த பிறகும் பெற்றவராகிரார், எதையும் மறுபட்ட புதிய கோணத்தை கவனிப்பதும் அதை அதே கோணத்தில் யாருக்கும் அச்சப்படாமல் பேசுவதும் மற்றும் கவர்ந்து இழுக்க கூடிய வார்த்தை நயம், நகைசுவை, கிண்டல் சலிப்புதாராத பேச்சு, அதே போல எதிரான கருத்து கொண்டவர்களை கொதித்து எழ வைக்க கூடிய பேச்சாகவும் அமைந்தது இவரின் பேச்சுக்கள், இப்படி சந்திரன், சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்களும் 2 ஆம் ஸ்தானத்தை பார்த்து அந்த பார்வை பலத்தின் காரணமாகவே தனது பேச்சால் எழுந்தார் உயர்ந்தார் கவனிக்க பட்டார் மேலும் தன் பேச்சால் பழிவாங்கவும் பட்டார்.

Powered by Blogger