Grady Booch (க்ரேடி பூச்) சாதாரண ஒரு Software engineer ஆக தன் வாழ்க்கை தொடங்கி தன் திறமையால்… - பிரபலங்கள் ஜாதகம் பகுதி

Grady Booch (க்ரேடி பூச்) சாதாரண ஒரு Software engineer ஆக தன் வாழ்க்கை தொடங்கி தன் திறமையால்… - பிரபலங்கள் ஜாதகம் பகுதி

 

இதுவரை கணினித்துறையில் மென்பொருள் துறையில் பெரிய அளவில் முதலாளிகளாக இருந்தவர்களுடைய ஜாதகங்கள் சிலவற்றை எமது ஜோதிட சேனல் பதிவுகளில் பார்த்திருக்கிறோம் இந்த முறை பார்க்க இருப்பது சாதாரண ஒரு திட்டப் பொறியாளர் & கணினி மென்பொருள் பொறியாளர் (project engineer & Computer Software engineer) பணிக்கு சேர்ந்து தன் திறமையால் தலைமை விஞ்ஞானியாக (Chief Scientist ஆக) மற்றும் தலைமை மென்பொருள் உருவாக்குநர் (Chief software developer ஆக பணியாற்றியதுடன் அந்த துறையில் விருதுகளை நிறைய பெற்ற ஒரு Software engineer, Software developer & Software Scientist ஆக உயர்ந்தவருடைய ஜாதகத்தின் சிறப்புகளை மற்றும் அமைப்புகளையும் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்

அவர் தான் கிரேடி பூச் ஜாதகமாகும், கிரேடி பூச் ஒரு பிரபலமான கணினி விஞ்ஞானி, மென்பொருள் கட்டமைப்பு மற்றும் மென்பொருள் பொறியியல் நிபுனர் ஆகும் (Computer Scientist, software architecture, software engineering). Unified Modeling Language (UML) ஒருங்கு மாதிரியாக்க மொழி என்ற மென்பொருள் தரவு குறிப்புகளை கட்டமைப்பு குறியீட்டு காட்சிப்படங்களாக்க மாற்ற உதவும் கணினி மொழியான ஒருங்கு மாதிரியாக்க மொழியை அதாவது Unified Modeling Language யை உருவாக்கிய குழுவில் முக்கிய பங்காற்றி மிகவும் பிரபலமானவர் இந்த கிரேடி பூச் என்ற மென்பொருள் பொறியியல் நிபுனர் ஆகும். மென்பொருள் கட்டமைப்பு மற்றும் மென்பொருள் பொறியியல் கூட்டு மேம்பாட்டு குழுவில் அவர் செய்த புதுமையான பணிகளுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவர் கிரேடி பூச்.

இந்திய முறைபடி இவர் ஜாதகமானது மேஷ லக்னத்தில் மேஷ ராசியிலே பிறந்த ஜாதகம் ஆகும் ஜோதிடத்தில் தரவுகளுக்கும் தரவைகளை முறைபடுத்துவதற்கும் தரவுகள் காட்சிபடுத்துவதற்கும் அதிகார கிரகங்கள் குரு, புதன், சந்திரன் ஆகும் அதாவது தரவுகளுக்கு குரு பகவானும் தரவுகளை முறைபடுத்துவதற்கு புதனும் மற்றும் தரவுகளை காட்சிபடுத்துவதற்கு சந்திரனும் காரக கிரகங்கள் ஆகும் இப்படி தயாராக்கபட்ட தரவுகளை உபயோக கருவிகளாக்க செவ்வாய் காரக கிரகம் ஆகும், இவரின் ஜாதகத்தில் தொழில் கருவிகளின் ராசியான மேஷமே இவருக்கு லக்னமாகவும் ராசியாகவும் ஆன படியால் இவருக்கு செயல்திறன் மிக அதிகமானதாக வரும், மேஷமே லக்னமாக ராசியாக அமைந்த நபர் ஒரு சிறந்த instigator ஆகும் instigator என்றால் புதிய ஒன்றை உருவாக்கி அதை நன்கு செயல்படும் விதமாக தூண்டுதல் கொடுப்பவர் என்று அர்த்தம் ஆகும், எனவே இவர் தன் துறையான மென்பொருள் அறிவியலில் prime mover (முதன்மை இயக்குநர்) ஆக சிறந்த deviser (வடிவமைப்பு யோசனையாளர்) ஆக இருக்க கூடியவர் என்று எடுத்து காட்டுகிறது.

மேலும் தரவுகளுக்கு பொது அதிபதி கிரகமாக இருக்கும் குரு பகவான் இவரின் ஜாதகத்தில் சொந்த அதிகார நட்சத்திரத்தில் புனர்பூசத்தில் அமைந்து நவாமசத்தில் வர்கோத்தமமும் அடைந்து ராசி சக்கரத்தில் தனது சொந்த ராசியையும் மற்றும் முக்கியமாக உச்சம் பெற்ற தொழில் மற்றும் லாப ஸ்தானாதிபதியையும் பார்வை செய்யும் விதமாக அமைந்து தொழில் மற்றும் லாப ஸ்தானாதிபதிக்கு சிறப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும் பாக்கிய ஸ்தானாதிபதி குரு பாக்கிய ஸ்தான நட்சத்திரத்திலேயே அமைந்து பாக்கிய ஸ்தானத்தையே பார்வையும் செய்துள்ளார் இது பாக்கிய ஸ்தானத்திற்கு சிறந்த பலம் ஆகும் இதன் காரணங்களால் சிறந்த தரவு அறிவியலாளராகவும் (Data Scientist) மற்றும் அதை பயிற்றுவிக்கும் திறன் பெற்றவராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.

தரவுகளை முறைபடுத்துவது மற்றும் தரவுகளை நெறிபடுத்துவது போன்றவற்றிற்கு புதன் அதிகார கிரகம் ஆகும் இவரின் ஜாதகத்தில் புதன் பகவான் சாதனை மற்றும் செயல்வீரியம் போன்றவற்றிற்கு அதிபதி கிரகமாகும் இப்படிபட்ட புதன் பகவான் கர்ம தொழில் ஸ்தானமான 10 வீட்டில் அமைந்துள்ளார் மேலும் புதன் பகவானின் அதிதேவதையான மகாவிஷ்ணுவின் நட்சத்திரத்தில் அமைந்துள்ளார் மேலும் புதனின் ஸ்தான ராசிகளுக்கும் மற்றும் புதன் இருக்கும் ஸ்தான ராசிக்கும் அஷ்டவர்க்க பரல்கள் ராசி ஒன்றுக்கு 30 தாண்டி உள்ளது மேலும் புதன் இருக்கும் ஸ்தான ராசிநாதன் சனி பகவான் உச்ச பலத்துடன் அமைந்துள்ளார் இதனால் கிரேடி பூச் ஒரு வெற்றிகரமான தரவு பொறியாளர் மற்றும் தரவு ஆய்வாளராக பிரபலமானார்.

தரவுகளை காட்சிபடுத்துவதற்கு அதிகார கிரகம் ஆன சந்திரனும் உருவாக்கப்பட்ட தரவுகளை உபயோக கருவிகளாக்க மாற்றுவதற்கு அதிகார கிரகம் செவ்வாயும் சேர்ந்து சிறந்த யோகமான சந்திரமங்கள யோகத்தை லக்னத்திலேயே உருவாக்கி உள்ளது இதுவே இவரி ஜாதகத்தின் முக்கிய பலமான யோகம் ஆகும் மென்பொருள் துறையில் சிறந்தவர்கள் ஜாதகங்களில் பல இடத்தில் இந்த சந்திரமங்கள யோகத்தையும் பார்க்க முடிகிறது அப்படிபட்ட இந்த சந்திரமங்கள யோகம் இவரின் ஜாதகத்தில் மிக வலுவாக அதாவது மூலத்திரிகோண கேந்திரத்தில் செவ்வாய் ஆட்சி பெற அதில் கல்வி வித்தை ஸ்தானாதிபதியான சந்திரன் பரணி நட்சத்திரத்தில் சேர்ந்துள்ளார் இதை உச்ச பெற்ற சனி பகவானும் பார்வை செய்கிறார்

இதனால் கிரேடி பூச் அவர்கள் தனது வாழ்க்கையை ஒரு திட்ட பொறியாளராகத் தொடங்கி பின்பு விண்கலம் மற்றும் விண்வெளி திட்டங்களுக்கான திட்ட மேலாளர் வளர்ந்து பிறகு விமானப்படை அகாடமியில் பயிற்றுவிப்பாளராக ஆனார் பின் வந்த செவ்வாய் பகவானின் திசையில் Rational Software Corporation ல் உயரிய பதவியான முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றினார் அந்த நிறுவனத்தை 2003 இல் ஐபிஎம் கையகப்படுத்தியது பின்னர் 2008 வரை IBM லேயே முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றினார். ஐபிஎம் ஆராய்ச்சி கூடத்தில் மென்பொருள் பொறியியல் ஆராய்ச்சியாளராக ஆசிரியாராக பணியாற்றினார்.

கிரேடி பூச் தனது வாழ்நாள் பணியை மென்பொருள் மேம்பாட்டின் கலை மற்றும் அறிவியலை மேம்படுத்த அர்ப்பணித்துள்ளார். லக்னத்திலேயே ஆட்சி பெற்ற லக்னாதிபதி செவ்வாய் பகவானின் திசை நடந்த சமயங்களில் அதாவது 1980 களில், அவர் அடா நிரலாக்க மொழி சார்ந்த மிகவும் பிரபலமான புத்தகங்கள் பலவற்றை அந்த சமயங்களில் எழுதினார். ஜாதகத்தில் யோகி ஆன கேது ராகுவின் சாரம் ராகுவே கேதுவின் சாரத்தில் அமைந்துள்ளார் சார பரிவர்த்தனை யோகம் தரும் ராகுவின் திசையில் 1990 களில் கிரேடி பூச் மென்பொருள் மேம்பாட்டிற்கான பூச் முறை என்ற ஒரு முறையை உருவாக்கினார் இந்த பூச் முறை என்பது மென்பொருள் பொறியியலில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும் இது தான் பின்னாளில் Unified Modeling Language (UML) மாற்றியமைக்கப்பட்டது. குரு திசையில் மென்பொருள் மேம்பாட்டிற்கான கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு உயர்ந்த வழிகாட்டியாக கிரேடி பூச் பணியாற்றி வந்தார்.

2003 இல் ஐபிஎம் நிறுவனத்தின் மிக உயர்ந்த மரியாதைக்குரிய IBM Fellow  என்ற அறிஞர் பட்டம் கொடுத்து என்று கவுரவிக்கபட்டார், மேலும் 2010 இல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் சங்கத்தால் IEEE Fellow என்று அதாவது அந்த துறையில் மிக உயர்ந்த மரியாதைக்குரிய அறிஞர் என்ற பட்டம் கொடுத்து அங்கீகரிக்கப்பட்டார். இவைகள் எல்லாம் பாக்கிய ஸ்தான நட்சத்திரத்திலேயே அமைந்து பாக்கிய ஸ்தானத்தையே பார்வையும் பாக்கிய ஸ்தானாதிபதி குரு பகவானின் திசையில் இத்தகைய கவுரவங்களை அடைந்தார். இதுவரை சாதாரண ஒரு திட்டப் பொறியாளர் & கணினி மென்பொருள் பொறியாளர் (project engineer & Computer Software engineer) பணிக்கு சேர்ந்து தன் திறமையால் இத்தகைய விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆன கிரேடி பூச் ஜாதகத்தின் சிறப்புகளை பார்த்தோம் நன்றி

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "Grady Booch (க்ரேடி பூச்) சாதாரண ஒரு Software engineer ஆக தன் வாழ்க்கை தொடங்கி தன் திறமையால்… - பிரபலங்கள் ஜாதகம் பகுதி"

கருத்துரையிடுக

Powered by Blogger