வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜாதகம் கணிப்பு (Velupillai Prabhakaran Horoscope in Tamil) - போர்கிரகங்களின் கிரக தாக்கம் பற்றிய ஜாதக பார்வைகள்...

வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜாதகம் கணிப்பு (Velupillai Prabhakaran Horoscope in Tamil) - போர்கிரகங்களின் கிரக தாக்கம் பற்றிய ஜாதக பார்வைகள்...

இந்த ஜாதகம் தமிழ் ஈழத்தவர்கள் பதிவு மற்றும் சுமணதாச அபேயகுணவர்த்தன ஜோதிடரின் பதிவின் படியும் ஜாதகங்களில் ஒத்திருந்த அம்சங்களோடு சேர்த்து நான் அமைந்த ஜாதகம் கணிப்பு தான் இந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஜாதகம் ஆகும், இந்த ஜாதகத்தை எடுத்து பேச சில துணிவான பார்வை வேண்டும், இந்த ஜாதகத்தை பற்றி நாம் பார்க்க இருப்பது  இந்த ஜாதகத்தில் அமைந்துள்ள போர்கிரகங்களின் கிரக தாக்கம் ஆகும். பிரபலமானவர்களின் ஜாதக கணிதத்தில் தமிழர்களின் ஜாதகங்களில் முக்கிய ஜாதகமாக இந்த ஜாதகம் உள்ளது ஏனென்றால் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்ட தமிழர்களின் வரலாற்றில் உச்சபட்ச தாக்கத்தை ஏற்படுத்திவர்கள் பலரில் ஒருவராக இவரது வரலாறு இடம் பெறும் அது நல்ல காரணத்திற்காகவா அல்லது  தீய  காரணத்திற்காகவா என்பது எனக்கு தெரியாது ஆனால் தமிழர் வரலாற்றில் இவர் சரிதமும் இடம் பெறும்.

 

இவரது ஜாதகத்தை பற்றி பேச ஆரம்பிப்பதற்கு முன் ஒரு திருக்குறளை பொருள் சொல்லி பின் இவரது ஜாதகத்தை பற்றி பேச ஆரம்பிக்கிறேன் அந்த திருக்குறள் ; -

 

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.

 

பொருள் விளக்கம்:

வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும். இந்த திருக்குறளின் உவமையில் கால் ஆழும் சேற்று நிலம் என்பது தான் 'வலிய யுத்த பாதை' என்று ஆகிவிட்டது இவரது வாழ்வில்.

 

சரி இனி இந்த ஜாதகத்தில் அமைந்துள்ள போர்கிரகங்களின் கிரக தாக்கதை பார்ப்போம் வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தை பிரபாகரன் அவர்கள் ஆகும், மிதுன லக்னத்தில் விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் இவர் பிறந்துள்ளார். இவரின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குரு பகவான் உச்சமானதாலும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் உச்சமானதாலும் இவரது முன்னோர் குடும்பம் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆக உள்ளது. தந்தை ஸ்தனாதிபதி சனி பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சமடைந்து அமைந்துள்ளதால் பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பணி புரிந்தவர் ஆகும் அதனால் அடிப்படை செல்வ வசதி இவரது குடும்பத்தில் இருந்தது ஆனாலும் அதே நேரத்தில் அம்ச சக்கரத்தில் சனி நீசமானதால் இவரின் வளர்ந்த பருவகால வாழ்வில் தந்தை என்ற உரிமை நிலை இவர் வாழ்வில் வலுகுறைந்து விட்டது அதாவது அதற்கு ஒரு சம்பவம் சொல்ல வேண்டுமானால் இவர் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கிய பின்னர் ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி  வீட்டுற்கு காவற்துறையினர் வந்தனர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். 'உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்' என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் இத்துடன் தந்தை குடும்பத்தின் ஆதரவு பாதை மாறி தனது சொந்த பாதையை பயணிக்க ஆரம்பித்து விட்டார் எனவே இவரின் வளர்ந்த பருவகால வாழ்வில் தந்தை என்ற உரிமை நிலை இவர் வாழ்வில் வலுகுறைந்து விட்டது அம்ச சக்கரத்தில் சனி நீசமானதால். மேலும் குடும்ப ஸ்தனாதிபதி சந்திரன் வித்தியாசமான முறையில் நீச பங்கம் ஆனதால் இவர் வாழ்வில் மொத்த குடும்ப அமைப்பும் வித்தியாசமான முறையில் பிற்காலத்தில் வலுகுறைந்து போனது.

 

மேலும் பதிவுக்கு செல்வதற்கு முன் சில விஷயங்களை சொல்லி விடுகிறேன் அதாவது மொழி சார்ந்த இனவெறியை பற்றி எனது கருத்து என்னவென்றால் அது தமிழ் மொழி சார்ந்த இனவெறியானாலும் அல்லது சிங்கள மொழி சார்ந்த இனவெறியானாலும் பொதுவாக மொழி சார்ந்த இனவெறி என்பது அர்த்தமற்ற துவேஷ உணர்வாகும் ஏனென்றால் ஆதியில் காட்டு மொழியாக ஐந்து ஆறு ஒலி அமைப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆதி பழங்குடிகளாக மனிதர்கள் வாழந்த காலத்தை நான் எண்ணிப்பார்கிறேன் அப்போது சிங்களவர் தமிழர் என்ற பேதம் எங்கிருந்தது, சிங்களவர் தமிழர் என்ற தனி தனி இனமோ அல்லது சிங்களம் தமிழ் என்ற தனி தனி மொழியோ இல்லை, காலப்போக்கில் நில அமைப்பு இயற்கை அமைப்பு வித்தியாசயானமான சூழலில் உருவான நாகரீக அமைப்பு போன்ற காரணங்களால் தமிழர் சிங்களவர் என்ற பிரிவான புரிதல் உண்டானது, உருவாகிபோன பாகுபாட்டிற்குள்ளேயே ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ கற்றுக் கொள்வது ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்வதற்கு உண்டான சூழ்நிலைகளை உருவாக்குவது தான் தெய்வீகத்தையும் சமதானத்தையும் சாந்தியையும் நாட்டிற்குள் வளர்க்கும், நாட்டில் இன துவேஷம் உண்டானால் அதனால் ஈவிரக்கமற்ற கொடூரமான செயல்களில் மனிதர்கள் இறங்குவார்கள் அதனால் பாபங்கள் நாட்டில் அதிகரிக்கும் அதன் விளைவாக வருங்கால தலைமுறைகள் பாபத்தின் பிரதிபலனான துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.

 

எனவே இன துவேஷம் உண்டானால் பாபங்கள் நாட்டில் அதிகரிக்கும் நிலை உண்டாகும் அதனால் பிரபாகரன் போன்ற போராளிகள் உருவாக வேண்டிய காட்டாயம் உண்டாகிவிடும் இப்படிபட்ட கட்டாயத்தால் இருவேறுபட்ட போராளிகள் உருவாகிறார்கள் ஒன்று அகிம்சை பாதையில் போராடுவது மற்றொன்று யுத்த பாதையில் போராடுவது இதில் யுத்த பாதையில் போராடுவதை பிரபாகரன் தேர்ந்தெடுக்கிறார் அதற்கு காரணம் ஜாதகத்தில் 3 ஆம் வீடு யுத்தம், 6 ம் வீடு யுத்தகளம், 8 ஆம் வீடு யுத்தகள மரணம் அழிவு போன்றவற்றிக்கு ஸ்தான காரகர்கள் ஆகும் இதில் பிரபாகரன் அவர்களின் ஜாதகத்தில் யுத்த ஸ்தானமான 3 ஆம் வீட்டின் அதிபதி யுத்தகள ஸ்தானமான 6 ஆம் வீட்டில் அமர்ந்ததும் மற்றும் லக்னாதிபதி புதன் யுத்தகள அழிவு ஸ்தானமான 8 ஆம் வீட்டின் அதிபதியுடன் அமர்ந்ததும் மற்றும் யுத்தகள ஸ்தானமான 6 ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய் 9 ஆம் வீட்டில் அமர்ந்து யுத்த ஸ்தானமான 3 ஆம் வீட்டை பார்ப்பதுவும் அமைந்துள்ளது இதற்கு அம்சம் வகுக்கும் விதத்தில் நவாம்ச சக்கரத்தில் யுத்த ஸ்தானமான 3 ஆம் வீட்டின் அதிபதியும் சத்ரீய கிரகமான சூரியனும் யுத்தகள ஸ்தானமான 6 ஆம் வீட்டின் அதிபதியும் சத்ரீய கிரகமும் ஆன செவ்வாயும் நவாம்ச சக்கரத்தில் ஒரே அம்சத்தில் அமைந்துள்ளது மேலும் எதிர் அம்சத்தில் யுத்தகள அழிவு ஸ்தானமான 8 ஆம் வீட்டின் அதிபதி சனி உள்ளது இது போன்ற காரணங்களால் யுத்த பாதையில் போராடுவதை பிரபாகரன் தேர்ந்தெடுக்கிறார், ஆம் இவர் 10ம் வகுப்புவரையிலும் தான் படித்தார் அதற்கு பிறகு பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதாக அவரது வரலாறு பேசிகிறது.

 

1970 களில் விடுதலை போராளியாக மாறினார், ஆயுதம் ஏந்திய விடுதலையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கமாக இயங்கி கொண்டிருந்தது அந்த புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாக1976ல் மே மாதம் மாற்றபட்டது இந்த நாள் இவரது ஜாதகத்தில் முக்கியமான நாளாகும் அந்த சமயத்தில் இவருக்கு லக்னாதிபதி புதன் உடன் சேர்ந்து உள்ள பூர்வீக ஸ்தானத்தின் அதிபதியான ஆட்சி பெற்ற வக்ர சுக்கிரனின் திசையில் யுத்த ஸ்தானமான 3 ஆம் வீட்டின் அதிபதி சூரியன் பகவானின் புத்தி அப்போது நடந்து கொண்டிருந்தது அந்த சமயத்தில் இவரது பிறப்பின் நோக்கமாக அமைந்த ஆயுதமேந்திய விடுதலை இயக்கம் தொடங்கபட்டது இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார்.

 

இன துவேஷம் சார்ந்த நடவடிக்கைகள் அதிகரிக்க ஆயுதமேந்திய விடுதலை இயக்கத்தின் தீவிரமும் அதிகரித்தது அதன் விளைவாக 1978 ல் ஜீன் காலத்தை ஒட்டி ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்” சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது அப்போது இவரின் ஜாதகத்தில் தேவகுருவின் சாரத்தில் இருக்கும் அசுர குருவான சுக்கிரனின் வக்ர திசையில் யுத்தகள ஸ்தானமான 6 ஆம் வீட்டின் அதிபதி செவ்வாயின் புத்தி அப்போது நடந்து கொண்டிருந்தது மறுபடியும் முதலில் இருந்து வருகிறேன் இன துவேஷம் சார்ந்த நடவடிக்கைகள் அதிகரிக்க ஆயுதமேந்திய விடுதலை இயக்கத்தின் தீவிரமும் அதிகரித்தது அதன் எதிர் விளைவாக அரசாங்கத்தின் ஆயுதமேந்திய தடுப்பு நடவடிக்கைகளும் அதிகரித்தது, நாட்டில் இரு தரப்பும் ஆயுதமேந்தும் போது  யுத்தகள பூமி எப்படி இருக்கும் மரண ஓலங்கள் அதிகமாக கேட்க ஆரம்பித்தது பேரரசன் அசோகனின் கடும் யுத்தத்தை தடுத்து நிறுத்தி பரவிய புத்தமும் புத்தனின் கோட்பாடுகளும் ஒதுங்கி நின்றது மற்றும் இந்து மதத்தில் தெய்வம் அனைத்திற்கு சாட்சி மாத்திரமாக இருக்கும் என்று சொல்வார்கள் அது போலவே அங்கே தெய்வம் அனைத்திற்கும் வெறும் சாட்சி மாத்திரமாகி போனது இதனால் அந்த நாட்டின் அமைதி என்ற கோலத்தை விதி மிதித்து அழித்தது. 

 

ஆங்கில காலம் 1982 முதல் 1984 வரை இவர் ஜாதகத்தில் அசுர ஆசான் சுக்கிரனின் வக்ர திசையில் தேவஆசான் குரு பகவான் புத்தியில் யுத்தமும் குண்டு சத்தமும் தீ எரிப்பும் அதிகமானது இரு தரப்பிலும் அப்போது தான் யாழ் நகரமும் யாழ் நூலகமும் எரிக்கி உள்ளானது, போர் மிகக் கொந்தளிப்பான காலகட்டத்தை கண்டது. யுத்தத்தின் தீவிரத்தால் அண்டை நாடான இந்திய தலையிட்டது இந்தியாவிற்கு எதிரான நாடுகளும் தலையிட்டது எல்லாம் அந்த அந்த நாடுகளின் ராஜதந்திர விவகாரங்கள் ஆனது, துவேஷத்தின் ஆழத்தில் இருந்த இரு தரப்பும் ஒரே சமயத்தில் ஒரு சமாதானத்தை ஏற்கவில்லை, இரு தரப்பும் போர் புரிந்த நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக சொல்ல நான் வரவில்லை, பிரபாகரன் அவர்கள் ஜாதகத்தில் அடுத்து அடுத்து வரும் சூரியன் மற்றும் சந்திரன் திசையை சுருக்கமாக கூறுகிறேன், சூரியன் மற்றும் சந்திரன் இணைந்து யுத்தகள ஸ்தானமான 6 ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளது, முதலில் வந்த யுத்த ஸ்தானமான 3 ஆம் வீட்டின் அதிபதி சூரியன் திசை 1992 முதல் 1998 வரை இருந்தது இதில் யுத்தமும் அதில் கிடைத்த சில வெற்றிகளும் அதனால் இவர் ஆள குறுகிய நில அமைப்பும் இவருக்கு கிடைத்தது அதில் நிர்வாக ஆளுமை கிரகமான சூரியனின் திசையில் தன் ஆளுகை உட்டபட்ட பகுதிகளில் தன் எதிர்கால கனவு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டார், நீச பங்க யோகத்தை வித்தியாசமாக பெற்று பின் அதை பாதக கிரகத்தால் வித்தியாசமான முறையில் இழந்தும் இருந்த சந்திர பகவானின் திசையில் 1998 முதல் 2008 வரை நடந்தது இந்த திசையில் 2002 - 2007 வரையான காலப்பகுதியில் வடக்கில் பெரும் பகுதியையும் கிழக்கில் அரைவாசிப் பகுதியையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார், விதியின் காலம் மாறியது இவர் வாழ்வில் அம்சத்தில் நீச செவ்வாய் வீட்டில் அமர்ந்த ஆயுள் காரகணான சனி பகவானின் வீட்டில் அமைந்த யுத்தகள ஸ்தானமான 6 ஆம் வீட்டின் அதிபதி செவ்வாயின் திசை தொடங்கியது இது இவருக்கு மாரகாதிபதி திசை ஆகும் அதில் வந்த இன்னொரு மாரகாதிபதியும் பாதகாதிபதியும் ஆன குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து புத்தியை நடத்திய குருவின் புத்தியில் வந்த 18 மே 2009 தேதியோடு இவரின் வரலாற்றை எழுதிக் கொண்டிருந்த பேனாக்கள் நின்று போனது.

 

போரை நடத்திய இரு தரப்புக்கும் பொருந்தும் ஒரு வாசகத்தை சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கிறேன் -

இந்த வாசகத்தை நான் சொல்லவில்லை பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது


‘ஒருவன் ஈடுபடும் கர்மத்திலேயே அதன் பலனும் அடங்கி உள்ளது’ - பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் 



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
ஜோதிஷ் சிவதத்துவ சிவம் - எம்மிடம் உங்களின் சோதிட பலன்களை பெற நீங்கள் உங்களின் பிறந்த விவரங்கள்...

0 Response to "வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜாதகம் கணிப்பு (Velupillai Prabhakaran Horoscope in Tamil) - போர்கிரகங்களின் கிரக தாக்கம் பற்றிய ஜாதக பார்வைகள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger