கொரானாவின் பின்விளைவு - படிப்பு மற்றும் படிப்பின் மீது மாணவர்கள் கவனம் செலுத்தக்கூடிய சகஜ நிலை திரும்புவதற்கான…
கொரானாவின் பின்விளைவு - படிப்பு மற்றும் படிப்பின் மீது மாணவர்கள் கவனம் செலுத்தக்கூடிய சகஜ நிலை திரும்புவதற்கான…
கொரானாவின் நோய் தாக்கத்தின் முக்கிய பின்விளைவாக அடுத்து நாம் பார்க்க இருப்பது மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ள சிக்கலாக இருப்பது அதாவது படிப்பின் மீது மாணவர்கள் மற்றும் குழந்தைகள் கவனம் செலுத்தக்கூடிய சகஜ நிலைமை திரும்புவதற்கு மிகுந்த சிரமமாக இருக்கலாம் ஏனென்றால் நிறைய மாணவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த கொரானா காலத்தில் தொலைகாட்சிகள், செல்போன்கள் மற்றும் உட்புற விளையாட்டுகள் போன்றவற்றில் கவனத்தை செலுத்தி செலுத்தி பழகி உள்ளார்கள் அவர்களை உடனடியாக பள்ளி பாடத்தின் மீது கவனத்தை செலுத்த சொல்லுவது அவர்களுக்கு சிரமத்தை தரலாம் ஆசிரியர்களுக்கும் சிரமத்தை தரலாம் மற்றும் தொடர்ந்து படித்தால் மட்டுமோ நினைவிலிருக்கும் கல்வி பாடங்கள் பல உள்ளது அவற்றை கொஞ்ச காலத்திற்கு விட்டு விட்டு மறுபடியும் தொடர்வதும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிரமமாக இருக்கலாம் மேலும் தங்களின் பள்ளி வாழ்க்கை அதன் நண்பர்களை விட்டு வெகுகாலத்திற்கு தள்ளி இருந்த மாணவர்கள் மனரீதியாக தங்களின் பள்ளி நண்பர்களை சந்தித்து ஒருவருக்கு ஒருவர் மனரீதியாக சகஜமாக பழகும் நிலைமை தோன்றவும் குறிப்பிட்ட காலம் எடுக்கலாம்.
இப்படிபட்ட நிலையில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தங்களின் பள்ளி பாடத்தில் கவனத்தை செலுத்துவது தொடர்பாகவே பேச உள்ளேன் சார் இதெல்லாம் சரி சார் இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம் அதாவது இந்த வீடியோ பதிவின் முக்கிய நோக்கமாக இருப்பது தங்களின் ஜாதக பலத்தால் சில மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தங்களின் கல்வி பாடத்தின் மீது உடனடியாக கவனத்தை செலுத்தும் திறனும் மற்றும் அதே போல உடனடியாக தங்களின் பள்ளி பாடத்தில் முன்னேற்றம் அடையும் திறமையும் வாய்க்க பெற்று இருக்கலாம் மற்றும் ஞாபக சக்தி இருக்கலாம் ஆனால் பல மாணவர்கள் மற்றும் குழந்தைகள் படிப்படியாகவோ அல்லது மந்தமாகவோ தங்களின் பாடத்தில் கவனம் செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள் அது போன்ற மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது போன்ற காலங்களில் சமூகமும் மற்றும் குடும்பமும் உறுதுணையாக இருந்து அவர்களின் படிப்பை ஆதரவோடு கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் முகமாக இந்த பதிவை தருகிறேன்.
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான், சந்திர தேவன் மற்றும் முக்கியமாக புதன் பகவான் ஆகிய கிரகங்களின் வலிமையை கொண்டு ஒருவருடைய கல்வி ஆற்றலை மற்றும் மன ஆற்றலை அறிகிறோம் மேலே சொன்ன கிரகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கல்விமான் என்று சிறப்பு பெயர் பெற்ற கிரகங்கள் ஆகும் இந்த கிரகங்கள் மாணவர்களின் கல்வி ஆற்றலை மற்றும் மன ஆற்றலை எடுத்து காட்டுவதாக அமைகிறது மேலே சொன்ன கிரகங்கள் ஒரு மாணவருடைய ஜாதகத்தில் சுப வலிமையோடு சிறப்பாக அமைந்தால் அதாவது குரு பகவான், சந்திரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு பலம் மற்றும் சுப கிரக சேர்க்கை மற்றும் சுப அவஸ்தைகளை அடைதல், மேலும் ஷட்பல வலிமைகளில் மீதி உள்ள திக் பலம், கால பலம், சேஷ்ட பலம் போன்றவை அடைந்து அமைந்திருந்தாலும் அத்துடன் அப்படி பலமடைந்த கிரகங்களின் திசா புத்தி காலங்கள் அந்த மாணவர்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வில் நடந்து கொண்டு இருந்தாலும் அவர்கள் இந்த கொரானாவிற்கு பின்னான பள்ளி காலங்களில் தங்களின் பள்ளி படிப்பில் மற்றும் பாடத்தின் மீது செலுத்தும் கவனத்தில் மற்றும் கற்ற பாடத்தில் ஞாபக சக்தியை மீட்டு எடுக்கும் திறனில் எப்படியாவது சமாளித்து மேல் ஏறி வந்து விடுவார்கள்.
அதே போல பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளில் கல்விக்கு உடல்ரீதியாக பார்த்தால் லக்னம் மற்றும் 2 ஆம் வீடும் முக்கியமான ஸ்தானங்கள் ஆகும் அது போல மனரீதியாக பார்த்தால் 4 ஆம் மற்றும் 5 ஆம் வீடும் முக்கியமான ஸ்தானங்கள் ஆகும் மேலே சொன்ன ஸ்தானங்களில் மனரீதியான ஆற்றலை தரும் ஸ்தானங்களான 4 ஆம் மற்றும் 5 ஆம் வீடும் மற்றும் அவற்றின் அதிபதி கிரகங்களும் ஆட்சி, உச்சம், நட்பு பலம் மற்றும் சுப கிரக சேர்க்கை மற்றும் சுப அவஸ்தைகளை அடைதல், மேலும் ஷட்பல வலிமைகளில் மீதி உள்ள திக் பலம், கால பலம், சேஷ்ட பலம் போன்றவை அடைந்து அமைந்திருந்தாலும் உடன் 4 ஆம் மற்றும் 5 ஆம் வீடும் சுப கிரங்களின் சேர்க்கை பார்வை மற்றும் சுப கிரங்கள் எதேனும் ஒரு விதத்தில் வலுவாக இருந்து அத்துடன் அப்படி பலமடைந் த ஸ்தானங்களின் கிரகங்களின் திசா புத்தி காலங்கள் அந்த மாணவர்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வில் நடந்து கொண்டு இருந்தாலும் அவர்கள் இந்த கொரானாவிற்கு பின்னான பள்ளி காலங்களில் தங்களின் பள்ளி படிப்பில் மற்றும் பாடத்தின் மீது செலுத்தும் கவனத்தில் மற்றும் கற்ற பாடத்தில் ஞாபக சக்தியை மீட்டு எடுக்கும் திறனில் எப்படியாவது சமாளித்து மேல் ஏறி வந்து விடுவார்கள்.
ஆனால் மேலே சொன்ன கிரகங்கள் மற்றும் ஸ்தானங்கள் ஒரு
மாணவருடைய ஜாதகத்தில் சுப வலிமையோடு அமையாமல் போனாலோ அல்லது அசுப வலிமையோடு
அமைந்திருந்தாலும் அல்லது மிதமான சுப வலிமையோடு அமைந்திருந்தாலும் அப்படிபட்ட
மாணவர்கள் தங்களின் படிப்பில் பாடத்தில் கவனத்தை மற்றும் கற்ற பாடத்தில் ஞாபக
சக்தியை மீட்டு எடுக்க சிரம படலாம், எனவே அப்படிபட்ட மாணவர்களை அவர்களின் கவன
மற்றும் ஞாபக சக்தியின் நிலையை பொறுத்து அவர்களை பக்குவமாக கையாண்டு பெற்றோர்கள்,
ஆசிரியார்கள் மற்றும் அரசாங்க சமூக சூழ்நிலைகளை உருவாக்கும் கல்வியாளர்கள் அந்த மாணவர்களின் மனநிலைகள் புண்படாதவாறு அவர்களை
கல்வியில் மறுபடியும் பழைய நிலைகளுக்கு கொண்டு வர வேண்டும் என்று தாழ்மையுடன்
கேட்டு கொள்கிறேன்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்