குரு பெயர்ச்சி கும்ப ராசிகாரர்களுக்கு 2019, 2020 ஆம் ஆண்டின் பொது ராசி பலன்கள், Kumbha Rasi Guru Peyarchi Palan 2019 - 2020
குரு பெயர்ச்சி கும்ப ராசிகாரர்களுக்கு 2019, 2020 ஆம் ஆண்டின் பொது ராசி பலன்கள், Kumbha Rasi Guru Peyarchi Palan 2019 - 2020..
2019 ஆம் ஆண்டில் குரு பகவான் பெயர்ச்சி ஆவது
திருகணித பஞ்சாங்கத்தின் படி விகாரி
ஐப்பசி 18 அன்று ஆங்கில ஆண்டின் படி
05 நவம்பர்
2019 (செவ்வாய் கிழமை) விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். குரு ராசி பெயர்ந்து மாறுவதை ஒட்டி கோயில்களில்
சிறப்பு பூஜை மற்றும் யாகம் பரிகாரங்கள நடக்கும் குருவை சாந்திபடுத்தி பூஜை
செய்வார்கள். 05 நவம்பர் 2019 அன்று தனுசு ராசிக்கு வரும் குரு சார்வரி கார்த்திகை 5 அன்று 20 நவம்பர் 2020 வரை தனுசு ராசி இருந்து
பின்பு அடுத்த இராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
பெயர்ச்சி என்ற சொல் தமிழில் பெயருதல் என்ற சொல் துணை விருத்தி சொல் ஆகும்
அதாவது பெயருதல் (moved) என்றால்
ஓர் இடம் விட்டு மற்றொரு இடத்துக்கு நகருதல் என்று பொருள்
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
என்று போற்றித் திருத் தாண்டகத்தில் திருநாவுக்கரசர் பாடி இருப்பார்
அதாவது இறைவன் எனது உள்ளத்தை விட்டு நீங்கிவிடாதபடி புகுந்து கொண்டான் அவன்
திருவடி போற்றி என்று அர்த்தப்படும் படி பாடி இருப்பார், அது போல தேவ ஆசான் ஆன குரு பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு
இராசிக்கு இடம் பெயர்ந்தாலும் 12
ராசிகாரர்களுக்கும் நன்மைகளை
செய்யும் இடத்தில் இருந்து பெயராது அனைவருக்கும் நன்மைகளையும்
நல்ல அறிவையும் வழங்க வேண்டும் என்று குரு பகவானை பிரார்த்தி
கொண்டு இந்த பகுதி தொடங்குகிறேன்.
தற்போதைய குரு பெயர்ச்சியின் வரைபட விளக்கத்தை முதலில் பார்ப்போம் ‘குரு’ என்றால் தீமையை அஞ்ஞானத்தை நீக்கி நன்மை மற்றும் உண்மையை காட்டுபவர்
வழிகாட்டுபவர் என்று பொருள் அப்படிபட்ட குரு பகவான் தான் வந்து சேரும் தனுசு இராசியில் இருந்து 5 ஆம் இராசி பார்வையாக மேஷ ராசியையும், 7 ஆம் இராசி பார்வையாக மிதுன ராசியையும், 9 ஆம் இராசி பார்வையாக சிம்ம
ராசியையும் பார்வை செய்வார், அவர் பார்வை என்பது
ஜோதிடத்தில் அருள் பார்வை என்றே சொல்ல படுகிறது அது ஒருவரின் தோஷங்களை குறைக்கும், துன்பங்களை குறைக்கும்,
நன்மைகளை அதிகரிக்கும், சமயத்தில் வந்து காப்பாற்றும் மிக உன்னத பார்வையாக பொதுவாக கருதப்படுகிறது, இந்த குரு பெயர்ச்சியால் அப்பேர்பட்ட அருள்
பார்வையை இந்த பெயர்ச்சி வருட காலம் பெறப் போகும் இராசிக்காரர்கள் மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய மூன்று இராசிக்காரர்களும் ஆகும்
அதற்கான வரைபடத்தை தான் நீங்கள் திரையில் இடதுபக்கம் பார்க்கிறீர்கள் மற்றும் குரு பெயர்ச்சி தொடங்கும் போது கிரக நிலையும்
மற்றும் குரு பெயர்ச்சி முடியும் போது கிரக நிலையும் இந்த வரைபடத்தின் வலதுபக்கம்
பார்க்கிறீர்கள். மேலும் ஒவ்வொரு
உபய இராசிகளும் மற்ற உபய இராசிகளை பார்வை செய்கின்றன என்பது விதி அதன்படி தனது
சொந்த ராசியில் குரு பகலான் வலுவடைவதன் மூலமாக தனுசு ராசி
மற்ற உபய இராசிகளை பலத்துடன் பார்வை செய்யும் அதையும்
நீங்கள் திரையில் காண்கின்றீர்கள் அதனால்
இந்த முறை மீனம், மிதுனம், கன்னி போன்ற உபய ராசிளும் பார்வை பலத்தின்
பலன்கள் சில பெறும். இனி தற்போது எடுத்துள்ள இராசிக்கான
பெயர்ச்சி பொதுபலன்களை பார்ப்போம்…
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "குரு பெயர்ச்சி கும்ப ராசிகாரர்களுக்கு 2019, 2020 ஆம் ஆண்டின் பொது ராசி பலன்கள், Kumbha Rasi Guru Peyarchi Palan 2019 - 2020"
கருத்துரையிடுக