ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 47 - பர்வதா யோகம்…
ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 47 - பர்வதா யோகம்…
ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில
யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த
ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால்
தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம்
இருக்கட்டும். மேலும் சில யோக
அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும்
காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம்
இருக்கட்டும்.
பர்வதா யோகம்
ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களில் (1,4,7,10) சுபகிரகங்கள் அமர்ந்து 6,8 ஆம் ஸ்தானங்களில் கிரகங்கள் இல்லாமல் இருந்து
அமைந்தால் இந்த பர்வதா யோகம் ஏற்படும். இந்த அமைப்பில்
லக்னமும் லக்னாதிபதியும் சந்திரனும் கெட்டாமல் இருக்க வேண்டும்.
இதன் பலன்கள் -
தேவையான செல்வ வசதியோடு இருப்பார், வளமான உணவு வசதியும் ஏற்படும், தாராளமான மனம், தர்ம சிந்தனை, நகைச்சுவை
உணர்வு மிக்கவர், நகரம் அல்லது
கிராம தன் சுற்றத்தாரிடம் நல்ல மதிப்பு பெற்றவராக திகழ்வார் மற்றும் நிறைய
உறவினர்கள் நண்பர்கள் உடன் கலந்து பழக கூடியவர், தொழில் தொடர்புகளில் மிகுந்த நன்மை உண்டு.
இந்த யோகம் அமைந்த ஒரு உதாரண படம்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 47 - பர்வதா யோகம்…"
கருத்துரையிடுக