ஜாதகத்தில் சூரியன் + வியாழன் சேர்ந்தால் பொதுப்பலன்கள்

சூரியன் + வியாழன் சேர்ந்தால் பொதுப்பலன்கள் - ஜாதகத்தில் சூரியன் + குரு இணைந்தால் பொதுப்பலன் - Sun Jupiter Conjunction in Tamil...
·  வணிக செய்கைகளுக்கு சிறந்த சேர்க்கையாகும், பண, நிதிரீதியாக ஆதாயம், பணப்புழக்கம், குழந்தைப் பிறப்பில் பிரச்சினை, தெய்வ காரியங்களை முன்னின்று செய்யும் ஆர்வம், திட்டமிடும் திறன், தந்தையால் யோகம், மற்றவர்களை வழிநடத்தும் யோகம், தலைமை பண்பு, ஆற்றல் மிக்க நிர்வாகி.
 
·  ஜாதகர் தானாகவே எதையும் கற்றுக்கொண்டு செயலாற்றும் திறமை மிக்கவர். பதவியும்,. பாராட்டுக்களும் அவரைத் தேடிவரும். இரக்க சுபாவம் உடையவர். அதோடு முன்கோபத்தையும் உடையவர், அரசு அரசு சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் அல்லது சாதகமான பலன்கள்.
 
·  சூரியன்+குரு பலமிழந்திருந்தால் தந்தை உறவால் பலனில்லை, பண ரீதியான சிக்கல், குடும்ப உறவுகளுடன் உடன்படாமை, பெண்களுக்கு கர்ப்ப பை கோளாறு, புத்திரகளால் இடைஞ்சல், எடுக்கும் முடிவுகளில் சாதகமின்மை, உஷ்ணத்தால் உடலில் கொப்பளம், தசைபிடிப்பு, புண்கள்.

ஜாதகத்தில் மூன்றாம் வீடு சொல்லும் உண்மை என்ன?



மூன்றாம் வீடே தைரிய வீரிய ஸ்தானம், சகோதர ஸ்தானம், என்று பொதுவாக கூறினாலும் இது ஒரு ஜாதகரின் வாழ்க்கையின் அடிப்படை வெற்றி, காரியத்தை நடத்திச் செல்லும் திறமை, போர்குணம், போட்டியை எதிர்கொள்ளும் திறன்கள் ஆகிய பல விஷயங்களின் காரகத்துவமும் கொண்டது எனவே ராசி சக்கரத்தில் மூன்றாம் வீட்டின் பலத்தை அறிய அதன் அதிபதியின் பலத்தையும், செவ்வாயின் பலத்தையும், மூன்றாம் அதிபதி நின்ற ராசி, சாரத்தையும் பார்க்க வேண்டும்.

மூன்றாம் வீடு காரகத்துவங்கள்: -

இளைய சகோதரம்
தைரியம்
துணிவு
மனோதிடம்
காரிய வெற்றி
செயல்திறம்
தகவல் தொடர்பு
சிறு பயணம்
அன்றாட பயணம்
கைத்திறன்
நினைவாற்றல்
மனப்பற்று
வீர தீர செயல்கள்
பயண வாகனங்கள்
தகவல் சாதனங்கள்
சுய வெளிப்பாடு
பங்காளி சொந்தங்கள்
ஆவணம் படுத்தல்
முடிவெடுக்கும் துணிசல்
பிரச்சினைகளை எதிர்கொள்ளல்
கற்கும் விதம்
பெற்றோர் மரணம்
எழுத்துகள்
குடியிருப்பு மாற்றம்
வணிக ஒப்பந்தங்கள்
வதந்திகள்
ஆயுதம்
நரம்பு மண்டலம்
தொண்டை
தோள்பட்டை
முயற்சி
இசை ஞானம்
வேலையாட்கள்
பெரிய விளையாட்டு, அடிப்படை நட்பு
மேல்நிலை கல்வி தொடக்கம்
வதந்திகள்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் இரண்டாம் வீடு சொல்லும் உண்மை என்ன?




இரண்டாம் வீடே தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம் என்று பொதுவாக கூறினாலும் இது ஒரு ஜாதகரின் வாழ்க்கையின் முக்கியமான மேலும் பல விஷயங்களின் காரகத்துவமும் கொண்டது எனவே ராசி சக்கரத்தில் இரண்டாம் வீட்டின் பலத்தை அறிய அதன் அதிபதியின் பலத்தையும், குருவின் பலத்தையும் பார்க்க வேண்டும்.

பணம் விஷயங்கள்
குடும்ப வாழ்க்கை
குடும்ப சொத்து
சேர்த்த பணம்
சேர்த்த உடைமை
சேர்த்த வங்கி இருப்பு
பங்கு பத்திரங்கள்
பணம் சேர்க்கும் திறன்
நகைகள்
விலையுயர்ந்த கற்கள்
நகைகள்
மரண காரக வீடு
பேச்சு
பார்வை
குடும்ப உறுப்பினர்கள்
மரண சம்பவிக்கும் முறை
ஆரம்ப கல்வி
வாய்பாட்டு
கற்கும் திறன்
ஆன்மீகம்
அருள்வாக்கு
சோதிடம்
சத்சங்கம்
ஆன்மீக உரைநிகழ்த்தல்
வலது கண்
நினைவகம்
கற்பனை
நகங்கள், நாக்கு
மூக்கு, பற்கள், தாடை
உணவுப்பொருட்கள்
உணவு தானியக் கையிருப்பு
குழந்தைபருவ உணவு, ஊட்டசத்து
மழலை மொழி புரிதல், உறவுகள் புரிதல்
தன்னை பற்றிய புரிதல், உருவகம்
எழுத்து, பேச்சு
ஆரம்ப கல்வி
ஆரம்ப வசதி, வாய்ப்பு
தன்னை சுற்றிய சூழல் புரிதல்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


ஜாதகத்தில் லக்னம் எதற்காக பார்க்கவேண்டும்...


லக்னமே ஒரு ஜாதகரின் உயிர் ஸ்தானம் அதுவே இந்த பிறவியில் அவரின் தலைவிதியை காட்டும் ஸ்தானம், இது முற்பிறவி வினைகள், வினைகளுக்கு ஏற்ற உடல் பெறல், இந்த பிறப்பின் நோக்கம், ஜீவாத்மா உடல் பெற்று அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும்.

முக்கியமாக லக்கினாதிபதி, லக்னம் பெறும் சாரம் அந்த சாராதிபதி தன்மை அவர் லக்னத்திலிருந்து பெறும் காரகதுவம் போன்றவை தான் அந்த ஜாதகரின் குணம், உடல் அமைப்பு, அவரின் நடத்தை, இந்த வாழ்க்கையில் அவருக்கான  வசதிநிலை, உடல்வாகு, நிறம், அழகு, பால்ய பருவம், கனவு, அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகள், மகிழ்ச்சிகள், ஜெனித்த போது உள்ள குடும்ப நிலை ஆகியவற்றை காட்டும் ஸ்தானம், சுருக்கமாக சொல்வதானால் இந்த பிறவியில் முக்கியமாக எதை செய்வதற்க்காக இந்த உலகில் வந்திருக்கிறார் என்பதை காட்டுவது லக்கினமே அதிலும் லக்கினம் பெற்ற சாரமே மிகவும் முக்கியம் ஏன்னென்றால் எல்லாரும் பிறக்கிறார்கள் இறக்கிறார் இருந்தாலும் வாழ்க்கையில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரியங்களை தனித்துவமாக அனுபவித்துவிட்டும் மற்றும் செய்துவிட்டும் போகிறார்கள்.

எனவே லக்கினாதிபதி நிலை, லக்னம் பெறும் சாரம் அந்த சாராதிபதி தன்மை மற்றும் லக்னத்தை கொண்டு ஒரு ஜாதகரின் என்ன அம்சங்களையேல்லாம் பார்க்கலாம் என்பதை பார்ப்போம்.

ஆத்ம ஸ்தானம்
உடல் அமைப்பு
நிறம்
உடல் வடிவம்
உயிர்சக்தி
மனநிலை & போக்குகள்
ஆளுமை
வாழ்க்கை போராட்டம்
மரியாதை
கௌரவம்
செழிப்பு
பொதுவான வாழ்க்கை
தலை
முகம்
நற்பண்புகள்
ஆயுள்
வாழ்க்கை கட்டமைப்பு
தொடக்க கால சூழ்நிலை
குழந்தைப்பருவம்
தோற்றம்
ஜெனித்த போது உள்ள குடும்ப நிலை
நடத்தை
ஆன்மீக மனப்பான்மை
வாழ்க்கை தரம் & தலம்
சுப நிகழ்ச்சி
பொது ஆரோக்கியம்
உங்களுடைய நடை  
உங்கள் பாணி
உங்கள் விருப்பு வெறுப்பு

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


ஜாதகத்தில் சூரியன் + புதன் சேர்ந்தால் பொதுப்பலன்கள்...

சூரியன் + புதன் சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள் - Sun Mercury Conjunction in Tamil  General Prediction


12 வீடு ராசி சக்கரம் - 12 ஸ்தான பொது காரகம்


ராசி சக்கரம்  ஸ்தான பொது காரகம்

முதல் வீடு  -  ஆத்ம ஸ்தானம், தலைவிதி ஸ்தானம்
இரண்டாம் வீடு  -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானம்
மூன்றாம் வீடு  -  தைரிய ஸ்தானம், சகோதர ஸ்தானம்
நான்காம் வீடு   -  சுக, வண்டி, வீடு  ஸ்தானம், தாய் ஸ்தானம்
ஐந்தாம் வீடு  -  பூர்வ புண்ணிய  ஸ்தானம், புத்திர ஸ்தானம்
ஆறாம் வீடு  -  ரண ருண ரோக ஸ்தானம், சேவா ஸ்தானம்
ஏழாம் வீடு  -  களத்திர  ஸ்தானம், வணிக ஸ்தானம்
எட்டாம் வீடு  -  ஆயுள்  ஸ்தானம், மர்ம ஸ்தானம்
ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானம்
பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானம்
பதினோராம் வீடு  -  லாப ஸ்தானம், சமூக ஸ்தானம்
பன்னிரண்டாம் வீடு  -  நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானம்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


கோள் தன்மையும் உறவுகள் காரகத்துவமும்


சூரியன்    - தந்தை, மேல் அதிகாரிகள், சுய ஆளுமை, சுய அடையாளம்
சந்திரன்    - தாய், வளர்ப்புத் தாய்
செவ்வாய்   - சகோதரம், சக அதிகாரிகள்
புதன்    - மாமன் & மாமி, நண்பர்கள், வளர்ப்பு மகன்
வியாழன்   - குழத்தைகள், ஆசான், ஆசிரியர்கள், குரு
சுக்கிரன்   - காதலி, மனைவி, துணை, நண்பர்கள்
சனி    - ஊழியர்கள், சேவகர்கள், பங்காளிகள்
ராகு    - எதிரிகள், பாட்டன்
கேது    - துரோகிகள், பாட்டி


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


கோள் தன்மையும் காரகத்துவமும்


கோள் தன்மையும் காரகத்துவமும் :

சூரியன் - ஆத்ம காரகன், உஷ்ணக்காரன், தந்தை காரகன்
சந்திரன் - உடல் காரகன், மனோ காரகன், தாய் காரகன்
செவ்வாய் - சகோதர காரகன், தைரிய காரகன்
புதன் - புத்தி காரகன், மாமன் காரகன்
வியாழன் - புத்திர காரகன், தன காரகன், தர்ம காரகன்
சுக்கிரன் - களத்திர காரகன், வாகன காரகன், காம காரகன்
சனி - ஆயுள் காரகன், கர்ம காரகன்
ராகு - போக காரகன், மாயா காரகன், மறைப்பு காரகன், பக்குவமற்ற, அவசரம் காட்டுபவர், தீவிரம் காட்டுபவர்
கேது - ஞான காரகன், மாயா காரகன், மறைப்பு காரகன், முதிர்ச்சி, அவசரம் காட்டாதவர், தீவிரம் காட்டாதவர்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


Powered by Blogger