நடிகர் விஜயகாந்த் ஜாதகம் Actor Vijayakanth horoscope in Tamil- ஜாதக யோகங்கள், ஜாதக சிறப்பு அம்சங்கள்...
நடிகர் விஜயகாந்த் ஜாதகம் (Actor vijayakanth horoscope) கணிப்பு - அவநம்பிக்கைக்கு எதிராக விடாமுயற்சி, வீரம், தர்மம், நாயகத்தன்மை....
ரஜினிகாந்த் அவர்களும் கமலஹாசன் அவர்களும் முன்னணி நடிகர்களாக தங்களை நிலைநிறுத்திய காலத்திற்கு பின் அறிமுகம் ஆன நடிகர் விஜயகாந்த் அவர்கள் தனது விடாமுயற்சியாலும் திரைப்படத்தில் தனக்கு இருந்த ஆர்வத்தாலும் திரைப்படத்தில் தான் என்னவாக தெரிய வேண்டும் என்பதில்லை இருந்து தீர்க்கமான எண்ணத்தாலும் அத்துடன் அவருடைய ஜாதக பலமான யோகத்தாலும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் தனக்கென்று தமிழ் திரைப்படத்தில் ஒரு பாதையையும் அதில் ஒரு வெற்றியையும் ஏற்படுத்திக்கொண்டார், அத்துடன் அவரின் ரசிகர்களின் கூட்ட பலம் மற்றும் இவருக்கு இருந்த அரசியல் ஆர்வம் போன்ற காரணத்தால் அரசியல் கட்சியும் தொடங்கி தான் உடல் வலிமையாக இருந்த காலம் வரை கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தியவர், இப்படிப்பட்ட நடிகர் விஜயகாந்த் அவர்களுடைய ஜாதக சிறப்புகளை யோகங்களை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.
>
சிறுவயதிலிருந்தே அவருக்கு திரைப்படத்தில் மீதிருந்த மிகுந்த ஆர்வம் காரணமாக மேலும் குறிப்பாக எம்ஜிஆரின் ரசிகராக இருந்த விஜயகாந்த் இளைய வயதுக் காலங்களிலில் எம்ஜிஆரின் திரைப்படங்களை அதிகமாக பார்த்ததுடன் தனக்கும் சினிமாவில் அது போல் ஆக வேண்டும் என்ற அடிப்படை ஆசை நடிகர் விஜயகாந்த் அவர்களுடைய மனதில் உறுதியாக ஏற்பட்டுவிட்டது அதன் காரணமாக திரைப் படத்தில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார் அவரே பலமுறை சொல்லியிருக்கிறார் “படாதபாடுபட்டு கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் பயணித்து திரைத்துறையில் தனக்கு கதாநாயகன் வேடம் தான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்று அதில் ஜெயித்ததாக’ அவர் பலமுறை கூறியிருக்கின்றார்.
நான் அடிக்கடி சொல்லி இருக்கின்றேன் செவ்வாய் பகவான் வீரத்துக்கும் மற்றும் நாயக தன்மைக்கும் அதிபதி கிரகம் என்று மேலும் இது சார்ந்த நடிப்புக்கும் செவ்வாய் பகவானே காரகன் ஆகும் அந்த செவ்வாய் பகவான் மேலும் இளைய வயதுக் காலங்களிலில் தோன்று ஆசைக்கும், பொது தைரியத்திற்கும் மூன்றாம் வீட்டின் அதிபதியான செவ்வாய் பகவானே காரகன் ஆகும் இப்படிபட்ட செவ்வாய் நடிகர் விஜயகாந்த் அவர்களுடைய ஜாதகத்தில் கர்ம ஸ்தானத்தில் அதாவது தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார் இதனால் இவருக்கு முதலில் தான் இளைய வயதில் ஆசைபட்ட திரை தொழிலில் முன்னேற வேண்டும் என்ற தீராத வைராக்கியம் உண்டானது தைரிய காரகனான செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றதால் மிகுந்த தைரியத்தோடு சென்னையை நோக்கி வந்தார் மேலும் அந்த தைரியம் குறையாமல் சென்னையில் வாய்ப்பு தேடியும் விடாமுயற்சியோடு உழைத்தார் கேந்திரத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் பகவான் ருச்சிக யோகத்தை தருவார் இந்த ருசிக யோகம் தைரியம் மற்றும் வைராக்கியத்தை தரும் அத்துடன் புகழ், திறமையாக போட்டிபோடும் தன்மை மற்றும் விடாமுயற்சி உடையவராக இருக்கக்கூடிய தன்மை, தலைமை பண்பு மற்றும் தலைவராகும் யோகத்தையும் தருவார் மேலே சொன்ன அனைத்து நன்மைகளையும் நடிகர் விஜயகாந்த் அவருடைய ஜாதகத்தில் அத்தகைய நல்ல பலன்களை அடைந்ததை நாம் வெளிப்படையாக பார்க்க முடிகிறது.
மேலும் செவ்வாய் பகவான் அனுஷ நட்சத்திரத்தில் ஆட்சிபெற்று அமர்ந்ததால் ஆரம்பத்தில் திரை வாழ்க்கையில் பலவிதமாக விட்டுக்கொடுத்து போய் அதன்மூலம் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர், கௌரவ வேடங்களில் நிறைய நடித்திருக்கிறார், மேலும் ஆரம்பம் முதலே பல நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் படங்களில் கூட நடித்து தன்னை தக்கவைத்துக் கொண்டார், அதேபோல ஏழை எளியவர்களுக்கு ஆன கருத்துக்களை சொல்லும் படங்களையும் ஆரம்பத்திலிருந்து நடித்திருக்கிறார் இப்படி தன்னை தக்க வைத்துக்கொள்ள காலத்திற்கு தக்கவாறு தனது திரைப்படங்களை அமைத்து தன் வெற்றிகளை தக்கவைத்துக்கொள்ள அனுஷம் நட்சத்திரத்தில் ஆட்சி பெற்ற செவ்வாயே காரணமாகும்.
இந்த செவ்வாய் பகவான் மேலும் ஒரு யோகத்தையும் இவரது ஜாதகத்தில் உண்டாக்கி இருக்கிறார் அந்த யோகமாக பட்டது பிருகுமங்கள யோகம் ஆகும் இந்த யோகமாகப்பட்டது லக்னத்திற்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்து அந்த செவ்வாய்க்கும் கேந்திரத்தில் சுக்கிரன் அமர்ந்து சுக்கிரன் அல்லது செவ்வாய் இந்த இருவரில் ஒருவரேனும் ஆட்சி உச்சம் அடைந்தால் உண்டாகும் யோகமாகும் இந்த பிருகுமங்கள யோகம் இதன் பலன்களாவன திருமணம் மற்றும் மனைவியால், நண்பர்களால், பங்குதாரர்களால் இவர்களின் உதவியோடு மற்றும் அவர்களின் யோகத்தையோ அல்லது திறமையோ பயன்படுத்தி முன்னேற்றம் அடையும் யோக பலனை தருவது தான் இந்த பிருகுமங்கள யோகம் ஆகும் இந்த யோகத்தின் பலனை நிறைய பெற்றதாக இவரின் ஜாதகம் அமைந்துள்ளது.
அதேபோல குரு கிரகத்தின் பார்வையோடு ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்கும் சூரியனால் சிறந்த யோகத்தையும் அத்துடன் சில தோஷங்களையும் சேர்ந்து அனுபவிக்க வேண்டிய நிலையும் இந்த ஜாதகத்தில் ஏற்பட்டுள்ளது ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்கும் சூரியனால் வரும் யோகம் என்னவென்று பார்க்கும்போது தலைமைப் பண்பு, நிர்வாகத்திறமை, துணிச்சலோடு செயலாற்றும் வல்லமை, சுயமரியாதை அதிகமாக எதிர்பார்க்கும் குணம், அரசு மற்றும் அரசியல் சார்ந்த ஈடுபாடு, கூட்டாக சேர்ந்து அடையும் வெற்றி போன்றவற்றை கொடுக்கும் இதுவும் இவர் வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை உண்டாக்கிய யோகமாகும்.
ஆட்சி பெற்ற சூரியனின் சாரம் வாங்கிய குரு பகவானின் திசையில் லக்னத்திற்கு ஏழில் இருந்து லக்னத்தைப் பார்க்கும் கும்ப லக்ன யோகாதிபதியான சுக்கிரனின் புத்தியில் திரைத்துறையில் நடிக்க அறிமுகம் கிடைத்தது இந்த குரு திசையில் பல தோல்விகளுக்கு நடுவில் கலவையான பல வெற்றியையும் பெற்று தன்னை சிறப்பாக தக்கவைத்துக் கொண்டார், குறிப்பாக சொல்வதானால் குரு பகவானின் திசையில் மேலே செவ்வாயின் பலமான யோகங்களைப் சொன்னேன் அந்த செவ்வாயின் புத்தி 1984 மற்றும் 1985 ஆம் ஆண்டில் நடை பெற்றது மேலே சொன்ன சிறப்பான செவ்வாயின் புத்தியில் 1984 ல் சுமார் 18 படங்களும் 1985 ஆம் ஆண்டில் 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார் இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது ஆகும்.
மேலே செவ்வாயின் பலமான யோகங்களைப் சொன்னேன் அந்த செவ்வாய் லக்னாதிபதியான சனி பகவானின் சாரம் பெற்றுள்ளார் அந்த சனி பகவான் மூன்றாம் பார்வையாக செவ்வாய் பார்க்கிறார் இப்படிப்பட்ட செவ்வாய் பகவான் சனியின் சாரத்தில் அமைந்துள்ளதால் அடுத்து வந்த அந்த சனி பகவான் திசையில் சனி பகவான் மற்றும் புதன் பகவான் புத்தி ஆரம்பத்தில் இவருக்கு கலவையான சில வெற்றிகளைக் கொடுத்தது இவருக்கு கை கொடுத்தது, எப்போதும் இவருக்கு யோகத்தை தந்து வந்த செவ்வாய் பகவான் புத்தி சனி பகவான் திசையில் வரும்போது மீண்டும் குறிப்பிடத்தக்க பல வெற்றிப்படங்களை தந்தார் குறிப்பாக வானத்தைப்போல, வல்லரசு, தவசி போன்ற படங்கள் இந்த கால கட்டங்களில் தான் வெளிவந்தது மேலும் இந்த கால கட்டங்களில் தான் தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத் தலைவராகவும் நடிகர் விஜயகாந்த் ஆனார்.
சனிபகவான் திசையில் ஆட்சி பெற்ற சூரியன் சாரத்தில் அமர்ந்த குரு பகவான் புத்தியில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார், அதற்கு அடுத்து வந்த புதன் பகவான் திசையில் சுக்கிரன் மற்றும் ஏழில் ஆட்சி பெற்ற சூரிய பகவான் புத்தியில் கணிசமான அரசியல் வெற்றியை அடைந்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஒரு அந்தஸ்தையும் அடைந்தார். புதன் பகவான் இவருக்கு நெடுநாள் நோய்கள் மற்றும் கடுமையான உடல் குறைபாடுகளை கொடுக்கக்கூடிய எட்டாம் ஸ்தானத்திற்கு அதிபதியாக புதன் இருந்ததால் அந்த புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானமான ஆறாம் வீட்டில் அமர்ந்து சர்ப கிரகமான கேது கிரகத்தோடும் சேர்ந்து அமைந்துள்ளதால் புதன் திசையில் ராகுபகவான் புத்தியிலிருந்து அவருக்கு உடல் கோளாறுகள் அதிகரித்தன அதனால் அவரால் முன்னர் உழைத்தது போல அதற்கு பிறகு அவரால் செயல்பட முடியவில்லை அதனால் அதிக காலம் ஓய்வு எடுக்கும்படி அவர் உடல் நிலை ஆனது, மாரகாதிபதி புதன் பகவான் கேது பகவான் சேர்ந்து 6, 8 போன்ற மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து பாதிக்கப்படும்போது பித்தப்பை, கல்லீரல் செயலிழப்பு போன்ற உடற்கோளாறுகளை தரலாம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
நடிகர் விஜயகாந்த் அவர்களின் சிறப்புகளில் முக்கியமான ஒன்று அவரது தானதர்ம குணம் மற்றும் உதவி செய்யும் குணம் இவரின் புகழ் நீடித்து நிற்பதற்கு இந்த குணங்கள் முக்கிய யோகமாகும் இதற்கு இவரின் ஜாதகத்தில் சேவை ஸ்தானத்தின் அதிபதி சந்திரன் தர்ம ஸ்தானத்தில் அமைந்தது 11 ஆம் வீட்டின் அதிபதி குரு பகவான் தர்ம ஸ்தானத்தில் அமர்ந்த சந்திர பகவானை பார்த்தது மேலும் தர்ம ஸ்தானத்தின் அதிபதியான சுக்கிர பகவான் ஏழாம் வீட்டில் அமைந்து லக்னத்தை பார்ப்பது மேலும் லக்னாதிபதி எட்டாம் ஸ்தானத்தில் அமைந்து பொருள் இழப்புக்களை ஏற்றுக்கொண்டது போன்ற காரணங்களால் இவருக்கு இயல்பாகவே தர்ம குணமும் மற்றும் உதவி செய்யும் குணமும் உண்டானது மேலும் உதவி செய்வதற்கு உத்வேகத்தைத் தரும் மூன்றாம் வீட்டின் அதிபதி ஆன செவ்வாய் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமைந்தால் தொழில் ரீதியாகவும் நிறைய உதவிகளை செய்திருக்கிறார் இவரின் நிலைக்கு மேல் உதவி செய்ததால் ரசிகர்கள் வட்டம் மற்றும் பொதுமக்கள் வட்டத்திலும் சில நல்ல பெயரை சம்பாதிக்க உதவியது மேலும் காலம் கடந்தும் இவரைப் பற்றி பேசும்படியாக இந்த சிறப்புக்கள் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு அமைந்தது.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்