கன்னி ராசி பெண் நீங்கள் கன்னி ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற
இது அவன் பிறவி குணம் மாற்றமுடியாது, இது அவளுடைய பிறவி குணம் மாறாது, இது என்னுடைய பிறவி குணம் என்றெல்லாம் மக்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம் பல சமயங்களில் எது எது பிறவி குணங்கள் என்று பலருக்கு கேட்க தோன்றும் அதை பற்றி தான் இந்த பதிவின் வழியாக பார்க்க போகிறோம். முற்பிறவி வினையால் உண்டாகும் குணம் தான் பிறவிக் குணம் ஆகும் மேலும் பிறவி குணங்களுக்கும் ஜாதகத்திற்குமான தொடர்பையும் தான் இந்த பதிவின் வழியாக பார்க்க போகிறோம்,
எது பிறவியின் அடிப்படை பண்பு என்று கேட்கும் போதி பிறவியின் அடிப்படை பண்பாக இருப்பது ஆசை ஆகும் இதை தான் முன்னோர்கள் பிறவித்துயர், பிறவிப்பிணி, பிறவிக்குற்றம் என்றெல்லாம் நமது ஆன்மீக முன்னோர்கள் கூறிவுள்ளனர் இந்த ஆசையை கடந்து ஒழித்தவன் பிறவிக் பெருங்கடலை கடந்து இறைவன் அடி சேர்ந்தவன் ஆவான், இந்த பிறவியின் அடிப்படை பண்பாக இருக்க கூடிய ஆசையை கடப்பது மனபலமில்லாத சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லை.
சாதாரண மக்கள் ஆசை வைத்துக் கொண்டு தான் வாழ்கிறார்கள் அதனால் பிறவிகள் தோன்றுகின்றன கூடவே பிறவிக்குண்டான குணங்களும் தோன்றுகின்றன அப்படி தோன்றுகின்ற பிறவி குணங்கள் எது எது பார்க்கலாம்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்-நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் – ஔவையார்