12 இராசிகள் மற்றும் அவை வாழ்க்கை அணுகும் நான்கு கோணங்கள்…

12 இராசிகள் மற்றும் அவை வாழ்க்கை அணுகும் நான்கு கோணங்கள்
நமது சாஸ்திரங்கள் ஒருவரின் வாழ்க்கையின் நோக்கங்களை நான்கு விதமாக பிரித்துள்ளது அது தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று நான்குவிதமான நோக்கங்களை நோக்கி ஒவ்வொரு வரும் வாழ்க்கையை நகர்த்துவார்கள் அல்லது நகர்த்தபடும் என்பது கருத்து, இதை ஜோதிடம் 12 இராசிகளுக்கும் பிரித்தும் தந்துள்ளனர், இதை நாம் பிறந்த ராசியை வைத்து பார்க்க கூடாது ஒருவரின் மொத்த ஜாதக வலுவை கண்டு அதில் உயர்வடைந்த நவகிரகங்களின் இராசிகளை அறிந்து அதில் பலமடையும் கிரக நிலைகளை ஒட்டி தான் இந்த நான்குவிதமான நோக்கங்களில் எது என்று முடிவுக்கு வரவேண்டும்.

தர்மம் - இயல்பான முறையில் முயலுதல், தினசரி நடவடிக்கைகளில் அக்கறை, நீதி அல்லது நல்லொழுக்க தொடர்பான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், தர்மம் தெரிந்தவர், உறுதியாய் இருப்பவர்கள், விதிகளை கடைபிடித்தல், மதம் நன்னெறிகளில் நாட்டம், கற்றல் கற்பிதம், நிறுவுதல், கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.

அர்த்தம் - கெளரவம் மற்றும் சுய மரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல், செல்வம் பொருள் சார்ந்த அனுபவ அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், புலன் உணர்வும் அதிகம், தனது விஷயங்கள் மற்றும் உடைமைகளுக்கு அதிக கவனம் கொடுத்தல், இலாப நோக்கங்களுக்காக நடத்தல், பயிற்சி, கேள்விகள், காரணம், பயன்பாடு ஆகிவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தல்.

காமம் - அன்பு, பாசம், சிற்றின்பம் நோக்கம் ஆகிவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தல், கலைகள் மற்றும் இலக்கியங்களில் வல்லமை காட்டக்கூடியது, விருப்பமான பொருள்களில் நாட்டம் அது தேவை தேவையின்மை அல்லது தர்மம் அதர்மம் அதெல்லாம் பற்றி அதிகமாக அக்கறை காட்டாதது.

மோட்சம் - உண்மை விஷயங்களை காண முயற்சி, அதற்கு தடையானதை நீக்குதல், வாழ்க்கையின் கட்டுகளில் சுதந்திரம் காண முயற்சி, சமய சார்புடைமை சமயரீதியான தீர்வு, தெய்வீக அருளில் நாட்டம், பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு தேடுதல்.

இராசி (rAzi)
முதல் தன்மை
இரண்டாம் தன்மை
மேஷம்
தர்மம்
அர்த்தம்
ரிஷபம்
மோட்சம்
காமம்
மிதுனம்
அர்த்தம்
காமம்
கடகம்
தர்மம்
மோட்சம்
சிம்மம்
அர்த்தம்
தர்மம்
கன்னி
மோட்சம்
காமம்
துலாம்
காமம்
அர்த்தம்
விருச்சிகம்
தர்மம்
அர்த்தம்
தனுசு
மோட்சம்
காமம்
மகரம்
அர்த்தம்
தர்மம்
கும்பம்
தர்மம்
அர்த்தம்
மீனம்
காமம்
மோட்சம்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


2 Response to "12 இராசிகள் மற்றும் அவை வாழ்க்கை அணுகும் நான்கு கோணங்கள்…"

  1. Prabu says:

    இரண்டாம் தன்மை என்பது என்ன?

    முதல் தன்மை = முதல் தரமுக்கியத்துவம்
    இரண்டாம் தன்மை = இரண்டாம் தரமுக்கியத்துவம்

கருத்துரையிடுக

Powered by Blogger